ஆதார் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
ஆதார் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக தனிநபராக வேண்டுமானால் மனுதாக்கல் செய்யலாம். தனிநபர் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்பதை எதிர்த்து வழக்கு தொடரலாமோ அதே போல் மம்தாவும் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். இதனையடுத்து, மனுவில் திருத்தங்களை மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். அத்துடன் ஆதார் தொடர்பாக தனது பெயரில் தனி நபராக மனுதாக்கல் செய்யவும் மம்தா முடிவு செய்துள்ளார்.
நன்றி : தினமலர்
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், 4 வார காலத்தில் மத்திய அரசு பதிலளிக்க கோரி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

Comments
Post a Comment