புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு..
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடைபெறுகின்றது.இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.மாவிளக்கேற்றுதல்
வைணவ சம்ரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அந்த அரிசியை மறுநாள் ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து, மலை போன்ற அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி செய்து "கோவிந்தா" என்ற நாமம் முழங்க மாவிளக்கேற்றுவது வழக்கம்.நிவேதனம்சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, வடை முதலியன நிவேதனம் செய்து உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்தளிப்பது வழக்கம். அன்று இரவு விரதமிருப்பார்கள். பால், பழம் போன்றவையும், காலை பெருமாளுக்கு நிவேதனம் செய்தவற்றையும் சாப்பிடுவதில் தவறில்லை.பூஜையில் துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம்.அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

Comments
Post a Comment