நெஞ்சு பொறுக்குதில்லையே..- தலையங்கம்
*தலையங்கம்...*
*நெஞ்சு பொறுக்குதில்லையே..*
👉🏼நண்பர்களுக்கு மன வருத்தத்துடன் கூடிய வணக்கங்கள்..
தமிழகம் எத்தனையோ இன்னல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு சாமனியன் என்ற முறையில் இந்த கந்து வட்டி தற்கொலை என்பதை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியவில்லை...
👉🏼இரண்டு பச்சிளம் குழுந்தைகள் உயிரோடு கருகி உள்ளன.. அஃறிணை கூட அரவணைத்து வாழும் பூவுலகம் ஆறுஅறிவு மனிதனிடம் மனிதாபினம் அற்று விட்டதா என கேள்வி எழுகிறது...
👉🏼சாதாரண கூலி வேலை செய்யும் சாமானியர்கள் எளிதில் வங்கிகளை அணுகிவிட முடியுமா ? அப்படியே அணுகினாலும் , சாமனியர்களின் அடிப்படை தேவைகளான வீடு, கல்யாணம் , காதுகுத்து சாதாரண தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள வங்கிகள் தற்போது கடன் வழங்குகிறதா என்றால் இல்லவே இல்லை.. வங்கிகள் கேட்கும் முதல் கேள்வியே பான் கார்டு , 6 மாத வங்கி பரிவர்த்தனை , எந்த கூலித் தொழிலாளி பான் கார்டு வைத்திருப்பார்..
👉🏼அங்கே வழங்கப்படும் ஒரே வாய்ப்பு கந்துவட்டி மட்டுமே
👉🏼அப்போது இது போன்ற சாமானியர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூட வாய்ப்பளிக்க மறுக்கிறதா இந்த சமூகம்.
👉🏼தற்போது இறந்து போன இசக்கிமுத்து குடும்பம் தன் பிள்ளை காதணி விழாவிற்கு கடன் வாங்கி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.. தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கொலைக் குற்றமாக செய்துவிட்டார் அந்த சாமானியர், எத்தனையோ கொடுஞ்செயல் கூட இந்த நாடு மன்னித்து இருக்கிறது.. இரண்டு பச்சிளம் குழந்தைகள் இந்த சுதந்திர இந்தியாவில் மரணித்து கிடப்பது வெட்கக் கேடு...
👉🏼மனம் மிகவும் வேதனையுறுகிறது... லட்சம் கோடிகளில் செல்வம் குவிந்து கிடக்கிறது , லட்சம் கோடிகளில் சுரண்டல் , ஊழல் நடக்கிறது இந்த நாட்டில், சாதாரண தொகை 1.45 லட்சம் அதுவும் சில குடும்பங்களின் ஒரு நாள் செலவு அந்த தொகைக்காக ஏதும் அறியாத குழந்தைகள் மரணித்துவிட்டன..
👉🏼எரிகின்ற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக, தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேசியுள்ளார் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர்... விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என கருத்து கூறி மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சிக்கு அவப்பெயர் தேடித்தரும் விதத்தில் பேசி உள்ளார் ..
👉🏼மல்லையா போன்ற நல்லவர்கள் வாழும் நாட்டில் இசக்கிமுத்து போல கோழைகள் உயிர் ஏளனம் தான்..
👉🏼தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடல் வரிகள் நெஞ்சில் கொதிப்பினை கொடுக்கிறது.. இனியாவது இது போன்ற கொடுமைகள் தொடராமல் பார்த்துக் கொள்வது நமது கடமை ஆகிறது..
👉🏼சாமானிய மக்களுக்கு இது போன்ற நிதி பிரச்சனைகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.. கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் என பல வகையில் ஊக்கப்படுத்தப் பட வேண்டும்..
👉🏼 வலியவன் வாழ எளியவன் மரணம் என்ற சூழல் அழிவின் ஆரம்பம் என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை...
வருத்தங்களுடன்
🙏🏼R.R🙏🏼
*http://tnsocialpedia.blogspot.com*

Comments
Post a Comment