இன்று ஐ.நா சபை தினம்..
அக்டோபர் 24
சரித்திரம் படைக்கும் சமாதான சின்னம் - இன்று ஐ.நா., சபை தினம்..
🌹🌹🌹🌹🌹🌹
உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பது ஆகியவை ஐ.நா., சபையின் பணிகளாக உள்ளன. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்., 24ல் உருவாக்கப்பட்டது.
உலகின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நா., சபையின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்., 24ல், ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே இதன் நோக்கம்.
உறுப்பினர்கள். ஐ.நா., சபை உருவாக்கப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இன்று 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. தற்போதைய தலைவராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது.
கிளை அமைப்புகள் : ஐ.நா.,சபையின் கீழ் சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை பராமரிக்கும் 'யுனிசெப்' நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம், கலாசாரத்தை பாதுகாக்கும் 'யுனெஸ்கோ', பாதுகாப்பை நிலைநாட்டும் அமைதிப்படை, நீதி வழங்கும் சர்வதேச நீதிமன்றம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் போன்றவை முக்கியமானவை.
5
ஐ.நா., உறுப்பு நாடுகளில் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐ.நா.,வில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை, இதில் ஒரு நாடு எதிர்த்தாலும் அத்தீர்மானம் ஐ.நா.வால் நிறைவேற்ற முடியாது.
***
6
ஐ.நா., சபையில் அரபி, ஆங்கிலம், பிரஞ்சு, சைனீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன.
***
2001
உலகில் அமைதி நில பாடுபட்டதற்காக, 2001ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருது ஐ.நா., சபைக்கு வழங்கப்பட்டது.
***
வருமானம்
ஐ.நா., வுக்கான வருமானம் உறுப்பு நாடுகளின் மூலமே கிடைக்கிறது. 2016 கணக்கின் படி, முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்த வருமானத்தில் 22 சதவீதம் அமெரிக்காவால் கிடைக்கிறது. ஜப்பான் 9.6%. சீனா 7.9%, ஜெர்மனி 6.3%, பிரான்ஸ் 4.8%, பிரிட்டன் 4.4% ஆகியவை அடுத்த 5 இடங்களில் உள்ளன. இந்தியாவின் பங்கு 0.7%.

Comments
Post a Comment