தீவிரமடையும் 'டெங்கு - அரசு மெத்தனம்...
*தீவிரமடையும் 'டெங்கு'*
*அரசு மெத்தனம்*
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 'டெங்கு' பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.சேலத்தில் நான்கு குழந்தைகளும், நெல்லையில் இரு குழந்தைகளும், டெங்கு காய்ச்சலால்,
மரணடைந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில், நேற்றைய நிலவரப்படி, காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை, 580 பேர். அதில் குழந்தைகள், 130 பேர். ரத்தப்பரிசோதனையில், 40 குழந்தைகள் உள்பட, 70 பேருக்கு, டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை, போதிய உபகரணம் இல்லாமை போன்றவற்றால், மருத்துவமனையில் பல அறைகள் பூட்டப் பட்டு, பயன்பாடின்றி உள்ளது. தற்போது, காய்ச்சல் வார்டில் அனுமதிக்க பட்டதை விட, கூடுதல் நோயாளிகள் இருப்பதால், ஒரே படுக்கையில், இரண்டு அல்லது மூன்று பேர் உள்ளனர்.
அத்துடன், தரையில் பாய் விரிக்கப் பட்டு, நோயாளிகளை வரிசையாக கிடத்தி சிகிச்சை அளிக்கப்படும் அவலநிலை தொடர்கிறது. இந் நிலையில், சேலம் அரசு மருத்துமவனையில்,
7 வயது சிறுமிகள் இருவர், 6 வயது சிறுவன், 10ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்தனர். மேலும், அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் வினய்பிரசாத், 22, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நெல்லை
நெல்லையில், டெங்கு காய்ச்சலுக்கு, நேற்று இரண்டு சிறுமிகள் பலியாகினர். திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, கடையநல்லுார், புளியங்குடி பகுதிகளிலும், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது.நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெல்லையை சேர்ந்த 4 வயது சிறுமியும், தென்காசியை சேர்ந்த 3வயது சிறுமியும், நேற்று உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேந்த, 3 வயது சிறுவன், வேலுார் அடுக்கம்பாளை அரசு மருத்துவமனையில் மர்மக்காய்ச்சலால், நேற்று முன்தினம் இரவு இறந்தான். செய்யாறு அடுத்த கொடநகர் பகுதியைசேர்ந்த 3வயது சிறுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மூளைக்காய்ச்சல் காரணமாக, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கலசப்பாக்கம் அடுத்த, மேலாரணி கிராமத்தை சேர்ந்த அஞ்சலை, 32; ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
புதுகை, தஞ்சையில் 4 பேர் பலி:
புதுகை, மற்றும் தஞ்சையில் இரு நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு, மூன்று சிறுமிகள், ஒரு பெண் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரை சேர்ந்த 8 வயது சிறுமி, டெங்கு காய்ச்சல் பாதிக்கப் பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில், நேற்றுமுன் இரவு உயிரிழந்தார்.
புதுகை அருகே பெருங்களூர் பகுதியைச் சேர்ந்த, 9 வயது சிறுமி, அறந்தாங்கி அருகே வீரராகவபுரத்தைச் சேர்ந்த, 12 வயது சிறுமி, தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று, இருவரும் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம், அவர் உயிரிழந்தார்.

Comments
Post a Comment