குளிர் காலத்தில் உடல் நலம் காப்பது எப்படி ?
குளிர் மிகும் காலம்: சூழலுடன் பொருந்துவதற்கான மரபுவழி உடல்நலக் குறிப்புகள்!
- ம.செந்தமிழன்
நண்பர்களே,
தமிழகத்தின் கார்காலம், இம்முறை குளிர்ச்சியை மிகுதியாக்க் கொண்டுவர வாய்ப்புள்ளது என உணர்கிறேன். குறிப்பாக, சென்னையில் குளிர்ச்சியின் அளவு கூடுதலாகும் என்பது என் எண்ணம்.
பொதுவாகவே, பூமியின் பருவநிலை பெருமளவு மாற்றமடைந்துகொண்டுள்ளது. இதுவரை பொழிந்த மழைக்கு, ‘தென்மேற்குப் பருவமழை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்தகால வானிலைச் செய்திகளில், பலமுறை ‘வெப்பச் சலனம் காரணமாக மழை’ பொழிந்தது என்ற வாசகத்தைக் கவனித்திருக்கலாம். தென்மேற்குப் பருவமழை மட்டுமல்லாமல், முன்கணிக்க இயலாத பல்வேறு காரணங்களால் மழை பொழிந்துள்ளது.
பெரும்பாலான பகுதிகள் இக்கோடையின் பிற்பகுதியிலிருந்து கனமழை பெற்றுள்ளன. இப்போது வடகிழக்குப் பருவமழைக்கான காலம் துவங்குகிறது. நிலம் மிகுதியாகக் குளிர்ந்தால் உடலில் பல மாற்றங்கள் உருவாவது இயல்பு. அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். ‘தீவிர வாந்தி, பேதி, வலுவிழந்த நிலை, தலையில் நீர் கோத்தல், மூச்சிரைப்பு, தாடை மற்றும் பற்களில் தீவிர வலி, பாதங்களில் எரிச்சல் மற்றும் வலி, பாதங்களில் வெடிப்பு உண்டாகி நீர் வடிதல், காய்ச்சல், மூட்டுகளில் வலி அல்லது குடைச்சல்’ – இவையாவும் நிலம் குளிர்வதால் உடலில் உருவாகத்தக்க பொதுவான தொல்லைகள்.
சென்னை, பெங்களூரு, கடலூர், தூத்துக்குடி, நெய்வேலி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளில் வேறொரு சிக்கல் உள்ளது. குளிர்ச்சியடைந்த நிலப்பகுதிகளில் காற்றின் இயக்கம் மந்தமடையும். உயிர்க்காற்றுக்கும் கரிமக் காற்றுக்குமான இயற்கைச் சமன்பாடு மாறுபடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைப் புகை காரணமாக, கரிமக் காற்றின் அளவு கூடியுள்ள இந்நிலையில், நிலம் குளிர்ந்தால் மூச்சு மண்டலம் தொடர்பான தொல்லைகள் அதிகரிக்கும்.
சளி, கோழை ஆகிய பெயர்களால் அழைக்கப்படுபவை யாவும் நம் மரபு மருத்துவத்தின் வழி, ‘கபம்’ எனும் பெரும்பிரிவின் பகுதிகள்தான். சளியில் பல நிலைகள், வகைகள் உண்டு. கோழையிலும் இவ்வாறு பல உண்டு. கரிமக் காற்று மிகுந்து உயிர்வளி குறைந்தால், கபம் மிகுந்துவிடும். வயிற்றில் கோழை படிதல், மூச்சு மண்டலத்தில் அப்புதல் ஆகியன நிகழும். ஏற்கெனவே இச்சிக்கல்கள் துவங்கிவிட்டன என்பதைப் பலர் அறிந்திருக்கலாம்.
தீவிரக் காய்ச்சல் மற்றும் உடல்வலி உருவாகும் நிலைமையை இந்தக் கபம் ஏற்படுத்தும்.
இனிவரும் காலம் இதுபோன்ற பல்வேறு பருவ மாற்றங்களின் வழியாக உடல் மாற்றங்களை உருவாக்கவுள்ளது. இயற்கையின் இம்மாற்றத்துடன் பொருந்துவோர் மட்டுமே நலம் பெற்று வாழவியலும். இயற்கையோடு பொருந்துதல் என்பது, இயற்கைப் போக்கினைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வாழ்க்கைமுறையைக் கடைபிடித்தல்.
மாறாக, இயற்கையோடு மோதும் மருத்துவமுறைகள், உடல் மாற்றங்களுக்கு நேர் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடலின் இயற்கையான எதிர்ப்பாற்றலைச் சிதைக்கின்றன.
மரபுவழியிலும் எனது கருத்துகளிலும் புரிதல் கொண்டோருக்கான பதிவு இது. ஆகவே, நவீன மருத்துவ அறிவை நம்புவோருக்கு இக்கட்டுரை எவ்வகையிலும் பொருந்தாது.
மரபுவழியில் பயணிக்க விரும்புவோர், இப்பருவநிலைக்குப் பொருந்தும் வகையில் சில வாழ்வியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அழைக்கிறேன்.
1. ஏற்கெனவே சளி நோயாளிகளாக உள்ளோர், சீரக நீரில் சித்தரத்தை சேர்த்துக் குடிநீராகப் பருகலாம்.
2. முக்கடுகு சூரணம் உட்கொள்ளலாம்.
3. தலையில் நீர் கோத்தல் தொல்லையில் உள்ளோர், நீர்க்கோவை மாத்திரையை நீரில் கரைத்து நெற்றியில் பற்று போட்டுக்கொள்ளலாம். (நீர்க்கோவை மாத்திரை, எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். அரசு தயாரிப்பாக வாங்குதல் நன்று. இது உண்பதற்கானதல்ல, புறப்பூச்சுக்கானது)
4. மாலை நேரத்தில் முருங்கைக் கீரை இரசம் பருகலாம்.
5. மிளகுக் கசாயத்தினை இரவு உறங்கும் முன் அருந்தலாம்.
6. சூழல் குளிரும்போதெல்லாம் பாதங்களில், உள்ளங்கைகளில் சூடு ஒத்தடம் கொடுக்கலாம். (வெந்நீர் ஒத்தடம் தவறானது. துணியைச் சூடாக்கி ஒற்றி எடுக்கலாம் அல்லது தவிட்டினை வறுத்துத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்)
7. சூழல் மாற்றம் முடியும் வரை குளிர்ச்சியான பானங்களைக் குறைக்கலாம் / தவிர்க்கலாம்.
(மேற்கண்ட வீட்டு மருந்துகளின் செய்முறையைக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்)
இவை தவிர, வாழ்க்கைமுறையில் சில பழக்கங்கள் தேவைப்படுகின்றன.
1. குளிர்சாதன அறைகளில் இருப்பதைத் தவிர்த்தல் / குறைத்தல்.
2. வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்தல் / குறைத்தல்.
3. இரவு கண்விழிப்பதைத் தவிர்த்தல்.
4. அதிகாலை எழுந்து, வெட்டவெளியில் மூச்சினை நன்றாக உள்ளிழுத்தல் மிகச் சிறந்த வழக்கம்.
5. மூச்சு மண்டலத்தைச் சீரழிக்கும் கொசுக்கொல்லிகளை முற்றிலும் தவிர்த்தல் / கொசுவலைகளைப் பயன்படுத்தல்.
6. பசிக்கும்போது மட்டும் உணவருந்துதல், தாகம் எடுத்தால் மட்டும் நீர் பருகுதல்.
7. உணவில் பருப்பு, கீரை, எண்ணெயில் பொரித்தவை ஆகியவற்றைக் குறைத்தல். அன்றாடம் முருங்கைக் கீரை இரசம் பருகுவதே போதுமான ஆற்றல் வழங்கும் என்பதால், அவ்வழக்கத்தை இயன்றவரை கடைபிடிக்கலாம்.
8. பால் அருந்தும் பழக்கத்தை நிறுத்துதல். ஒருவேளை சிறுவர்களுக்குப் பால் பருகும் பழக்கம் தீவிரமாக இருந்தால், பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு கலந்து பருகத் தரலாம்.
9. வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் காலை, மாலை வெயிலில் உலவுதல் நன்று.
அடுக்களை மருந்துகள் செய்முறை:
1. சீரக நீரில் சித்தரத்தை: ஒரு பானை நீரினை நன்றாகக் கொத்திக்க விட்டு, சிறு தேக்கரண்டி அளவு சீரகம், எட்டு மிளகுகள், சிறிதளவு சித்தரத்தை ஆகியவற்றைப் போட்டு மூடிவிட வேண்டும். இரவு இவ்வாறு செய்துவிடுங்கள். மறுநாள் காலை முதல் இந்நீரைக் குடிநீராகப் பருகலாம். ஆறிப்போனாலும் சூடேற்றத் தேவையில்லை. சீரகம், மிளகு, சித்தரத்தை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள அளவில் மட்டும் பயன்படுத்துங்கள். அளவு மிக வேண்டாம். சித்தரத்தை என்பது கிழங்குவகையைச் சேர்ந்த சிறந்த மூலிகை. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
2. முக்கடுகுச் சூரணம்: சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி – இம்மூன்றையும் சம எடைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றிலும் 50 கிராம் என்பது ஒரு குடும்பத்திற்கு ஓரிரு மாதங்களுக்குப் போதுமான அளவு. இவற்றைத் தனித்தனியாக வறுத்து, ஒன்றாகப் பொடிக்க வேண்டும். இதுவே முக்கடுகு சூரணம். விரலால் கிள்ளி எடுத்து இச்சூரணத்தில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நாக்கில் நக்கிக்கொள்ள வேண்டும். சூரணம் குறைவாக, தேன் சற்று கூடுதலாக இருப்பது நல்லது. இவ்வாறு, ஒரு நாளைக்கு மூன்று முறைகள் நாவில் நக்கிக்கொள்ளலாம். தொடர்ந்து 5 நாட்களுக்கு உட்கொள்ளலாம்.
3. மிளகுக் கசாயம்: ஒரு தேக்கரண்டி மிளகினை வாணலியில் வறுக்க வேண்டும். வறுபடும் முன்னே, சிறிதளவு பனைவெல்லம் / நாட்டு சர்க்கரையை வாணலியில் கொட்ட வேண்டும். சர்க்கரை சட்டியில் பற்றிக்கொண்டு பாகுபோல உருகும். இப்போது ஒரு சிறுகுவளை (தம்ளர்) நீரினை அதில் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். அந்த நீர் முக்கால் பங்காக வற்றும்வரை காய்ச்சுதல் நன்று. பின்னர் சட்டியைக் கீழிறக்கி, அதில் சிறிதளவு வேப்பிலைக் கொழுந்து, துளசி இலைகள், ஓமவல்லி இலைகள் போட்டு மூடி வைக்க வேண்டும். ஒருசில நிமிடங்கள் கழித்து மேலும் சிறிதளவு பனைவெல்லம் /நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருக வேண்டும். தொடர்ந்து எட்டு நாட்களுக்கு மிளகுக் கசாயம் பருகலாம்.
இவை தவிர, தலையில் நீர் கோத்தலின்போது நலம் அளிக்கும் தைலம் ஒன்றினை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மிளகுத் தைலம்: ஒரு கரண்டி நல்லெண்ணெயில் சிறு தேக்கரண்டி அளவு மிளகுகளை உடைத்துப் போட்டு (பொடியாக்கக் கூடாது) நன்றாகக் காய்ச்ச வேண்டும். மிளகு கருகும் முன் இறக்கி, ஆற வைத்து நெற்றியில் தேய்த்தால், நல்ல மாற்றம் கிடைக்கும். இதே தைலத்தில் சிறிதளவு சுக்கு சேர்த்தும் காய்ச்சலாம்.
மேற்கண்ட வழிமுறைக் கடைபிடித்து, குளிரிலும் உடல் பொருந்தி நலமுடன் வாழ வேண்டுகிறேன்!
இணைப்புப் படம்: வெள்ளத்தின் மையத்தில் காளி கோயில்
படப்பதிவாளர்: பால் கிரிகோரி
குறிப்பு:
கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெருமழையின்போது, ஏறத்தாழ இதேவகையிலான குளிர் உடல் நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையில் வேறுபல சேதிகளை விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். இம்முறையும் அக்கட்டுரைச் செய்திகள் பொருந்தும் என எண்ணுவதால், அதன் இணைப்பை இங்கு அளிக்கிறேன். விருப்பமுள்ளோர் அக்கட்டுரையைப் படிக்கலாம். அதனுடன் தொடர்புள்ள எனது நலவுரையைக் கேட்கலாம். இணைப்புகள்:
https://www.facebook.com/photo.php?fbid=10208401335208722&set=pb.1165998916.-2207520000.1509026383.&type=3&theater
அன்புடன்,
ம.செந்தமிழன்

Comments
Post a Comment