சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை..
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் , இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டம் அனைத்து இடங்களிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் . திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.
தென் மாவட்டம் கடலோர மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஆணைக்காரன் சத்திரம்பகுதியில் 9 செ.மீ., மழையும், சீர்காழியில் 6 செ.மீ., நாகை , காரைக்கால், சென்னை விமான நிலையம் பகுதியில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment