11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
சென்னை, 'தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 27 ல் துவங்கியது. பருவ மழை துவங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை துவங்கியது.
வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி இலங்கையிலிருந்து சென்னை வரை மையம் கொண்டுள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.
நேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்காரன்சத்திரம், கொள்ளிடம் செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சீர்காழி, நாகை, சென்னை விமான நிலையம், காரைக்கால் 5; திருத்தணி, செங்கல்பட்டு 4; செங்குன்றம், சிதம்பரம், கொளப்பாக்கம்,தாம்பரம், கடலுார், சாத்தான்குளம் 3; பொன்னேரி,காட்டுக்குப்பம், ராமேஸ்வரம், நாகர்கோவில், புதுச்சேரி, தரங்கம்பாடி, நாங்குநேரி 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
நவ. 3 வரை கன மழை!
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நவ., 3 ம் தேதி வரை சூறைக்காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும்' என எச்சரித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரம் ஆகிய பகுதிகளில் இன்று மிக கன மழை பெய்யும். நாளை முதல் நவ., 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்; சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறை!கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மூன்று மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படுமா; விடுமுறையா என்பதை இன்று மாலையில் கலெக்டர்கள் அறிவிப்பர்.
இன்றும் மழை தொடரும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை,
புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். தென்கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும் கன மழை பெய்யும்.பாலச்சந்திரன் சென்னை வானிலை மைய இயக்குனர்,
சென்னையில் விமானங்கள் தாமதம்
கனமழை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமான நிலையத்திற்கு கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.
அதை போல பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment