அயல் நாட்டுப் பேய் - பகுதி 1
இனிய வணக்கம் நண்பர்களே..
புதிய எழுத்தாளர் அறிமுகம் எனும் பகுதியில் முதலாவதாக எனது இனிய நண்பர் மு.வெ.ரா
( புனைப்பெயர் ) எழுதும் தொடர்கதை திங்கள் தோறும் வெளியாக உள்ளது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே, தற்கால சமூக அவலங்களை சொல்லி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.. மு.வெ.ரா அவர்களுக்கு நன்றிகளுடன் , வாழ்த்துக்களும்...R.R
அயல்நாட்டுப் பேய்
(பகுதி-1)
அந்த வெளிச்சமான பெளர்ணமி இரவில் சிர்த்தபடியே தன் முழு அழகையும் காட்டி மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது அன்றைய நிலவு .' அமைதியான அந்த இரவில் நன்கு கேட்கும் தொலைவில் இருந்த அந்த வானொலிப் பெட்டி தொடர் சேனல் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. சற்றே ஓரிடத்தில் நிலை பெற்று வானிலை அறிக்கையை கூறியது. "தமிழகத்திற்கான நாளைய வானிலை அறிக்கை . அதிக பட்ச வெப்ப நிலையாக 32 °C வரை பதிவாக கூடும் . வானம் வறண்டும் மேகமூட்டத்துடனும் காணப்படும் " _ . அதை தொடர்ந்து தேன் கிண்ணம் நிகழ்ச்சி , முதல் பாடலாக ஓர் இனிமையான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. "மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் ....... மணற்துகள்களை மட்டுமே சற்று தாராளமாக உள்ளே சென்று வர அனுமதிக்கும் அந்த நைந்து போன பாயில் இரு கைகளையும் மடக்கி பின் மண்டையை தன் உள்ளஙகைகளில் தாங்கியபடி மல்லாக்கப் படுந் துக் கொண்டு வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சாரா ...
சாரா நன்கு படித்த ஓர் ஏழை இளைஞன். அவனுக்கு இயது 32 .ஆனால் ஒரு சராசரி ஆணுக்கு 23 வயதில் ஆக வேண்டியது அவனுக்கு இன்னும் ஆகவில்லை. காரணம் கேட்டால் ஏழைக்கு எதற்கு அதெல்லாம் என்பான். அதை சொல்லும் போது அவன் முகத்தில் ஒரு ஏக்கம் காணப்படும். அவனை பெரிதும் பாதிக்கக்கூடிய விடயம் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் வர்ண பேதம் காணப்படுவதே அது. அவன் ஒரு சமூக போராளி . சமூகத்தில் காணப்படும் அவலங்களை கடுமையாகப் பேசியும் எழுதியும் வரும் துடிப்புள்ள இளைஞன். மனித நேயம் மட்டுமே மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றும் என உறுதியுடன் நம்பக்கூடியவன். தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுபவன், இப்போதய டிரெண்டும் அதுதானே....
அவன் தன் சொந்த ஊரிலிருந்து இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன . . வேலை தேடி எங்கெங்கோ அலைந்து கடைசியில இந்த பெரிய கிராமத்துக்கு வந்து சேர்ந்தான்.' வந்த புதுசுல யாரும் இவனுக்கு வீடு தரல.' ஒருத்தர் மட்டும் பாவப்பட்டு மாடி மேல உள்ள ஒரு அறையைத்தர ஒப்புக் கொண்டார். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத அஸ் பட்டா சீட்டு போட்ட அறை. அதிலும் ஒரு மூலையில் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவஸ் ஓனர் ஸ்ட்ரிக்டா செல்லிட்டார் " மாதம் 300 ரூபா வாடகை .அந்த மரக்கட்டைகள் ஒரு ஓரமா கிடக்கட்டும், சம்மதமா? " நானே ஒரு தனிக்கட்டைங்க என்னோடு இருந்துட்டு போவட்டுமே அந்த மரக்கட்டை ங்க " என்று சம்மதித்திருந்தான்.
அந்த அறை எப்படிப் பட்டதுன்னா , பகல் நேரத்தில அடுப்பு மூட்டாமலே தண்ணீர் கொதிக்கும் அவ்வளவு அனல் . அதோடு மட்டும் இல்லாம தினம் சாயுங்காலம் கொஞ்சம் உக்கிரமா சண்டை போட ஆரம்பிச்சு , வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு பசங்களையும் தூங்க வச்சிட்டு சாவகாசமா தணிந்த குரல்ல வாங்க லைட்ட அணைக்கனும்னு ஒரு பத்து பதினொரு மணிக்கா கூப்பிடுற மனைவி போல சாராவையும் அத்தனை மணியளவில் தான் உள்ளேயே விடும். அதுவரைக்கும் ஐய்யா வெளியிலதான் படுத்து கிடக்கனும். அன்று இரவும் அப்படித்தான் படுத்துக் கொண்டிருந்தான் சாரா .
பாடலைக் கேட்டபடியே நட்சத்திரங்களைப் பார்த்து வியந்தான் " வானில்தான் எத்தனை அதிசயங்கள் .நம் உச்சத் தலையிலும் இரண்டு கண்கள் இருந்தால் எப்படி இருக்கும் வானின் முழு அழகையும் ஒரே சமயத்தில் பார்த்து விடலாமே "மேலும் அவனின் கற்பனை விரிந்து கொண்டேச் சென்றது ...
தீடிரென வானிலிருந்து ஒரு கரிய உருவம் அவனருகில் அமர்ந்தது கண்டு திடுக்கிட்டான் சாரா..
தொடரும் .....
பகுதி 2 அடுத்த வாரம் திங்களன்று வெளிவரும்...
( இத்தொடரை பற்றிய கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன, கருத்துக்களை அனுப்ப tnsocialpedia g mail.com)

Part 2 kku katthurukken Thiru mu.ve.raa. Vazhthukkal
ReplyDelete