TSP DAILY NEWS 8.9.17
TSP NEWS
8.9.17
இன்றைய முக்கிய செய்திகள்
திட்டமிட்டபடி இன்று 8.9.17 ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம்...
📡🌍அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையில் போராடிய 81 பேருக்கு சிறை
மதுரை: அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மதுரை தல்லாகுளம், தமுக்கம் மைதானத்தில் போராடிய 81 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு சிறையில் அடைக்க மதுரை 2வது நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
📡🌍கும்பகரை அருவியில் குளிக்க 7வது நாளாக தடை
தேனி: பெரியகுளம் அருகே கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
📡🌍அவிநாசியில் நீர்வழிப்பாதை மற்றும் நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளில் வெள்ளம் புகுந்தது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தாமரைக்குளம் செல்லும் நீர்வழிப்பாதை மற்றும் நல்லாற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனிவாசபுரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்லாற்றங்கரை -சீனிவாசபுரம் பகுதி மக்கள் பாதுகாப்பபான இடங்களில் குடியேற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
📡🌍வல்லூர், அத்திப்பட்டு அனல்மின் நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
திருவள்ளூர்: அத்திப்பட்டு, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அத்திப்பட்டு அனல்மின் நிலைய முதல் அலகில் கொதிகலன் சரிசெய்யப்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வல்லூர் அனல்மின் நிலைய 2வது அலகில் பழுது சீரானதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
📡🌍தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சங்கர ராமேஸ்வர கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📡🌍சொன்னபடி போராட்டத்தில் குதித்த ஜாக்டோ - ஜியோ; கரூரில் மட்டும் 1332 பெண்கள் உள்பட 1815 பேர் கைது.கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை 1332 பெண்கள் உள்பட 1815 பேரை காவலாளர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
📡🌍கிம் ஜோங்-உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும்"- அழுத்தம் தரும் அமெரிக்கா
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்குவது, அந்நாட்டுக்கு எண்ணெய் அனுப்பத் தடை விதிப்பது உட்பட வடகொரியாவுக்கு எதிரான புதிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடைகளை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
📡🌍அடுத்ததாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்..எடப்பாடியாருக்கு தொடரும் நெருக்கடி !!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டதால் உடனே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக் கிழமை நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
📡🌍நீட்-க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; நீட் வரணும்னு நான் கையெழுத்து கூட போடல - பின்வாங்கும் மாஃபா பாண்டியராஜன்.
நீட் தேர்வு விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. சமூக ஊடகங்களீல் வெளியாகும் செய்திகள் தவறானது என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், இன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.
📡🌍பாரீசில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாரீஸில் உள்ள வங்கியை தகர்க்க அவர்கள் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திலிருந்து வங்கிகளின் புளூ பிரிண்ட்கள் கைபற்றப்பட்டுள்ளன.
📡🌍மதுரையில் புதிய கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்
திருமங்கலம்" மதுரை மாவட்டம் கப்பலுாரில் 7.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கலை, அறிவியல் கல்லுாரியை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். துணைவேந்தர் செல்லத்துரை, கலெக்டர் வீரராகவ ராவ் வரவேற்றனர். கல்லுாரியை திறந்து குத்துவிளக்கு ஏற்றி முன்னாள் முதல்வர், ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்தார்.
📡🌍இன்றைய(செப்.,8) விலை: பெட்ரோல் ரூ.72.44; டீசல் ரூ.60.84
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.44 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
📡🌍கல்லூரியில் ஆசிரியர் தினவிழா
மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில், தங்கமயில் ஜுவல்லரியுடன் இணைந்து ஆசிரியர் தினவிழா நடந்தது. துணை முதல்வர் அர்ச்சுனன் வரவேற்றார். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார்.
📡🌍தினகரன் எம்.எல்.ஏ.,க்கள் குடகு மலையில் முகாம்
பெங்களூரு: புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று இரவு கர்நாடக மாநிலம், குடகு பகுதிக்கு சென்றனர். அணி தாவல்: அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றங்கள் நிலவும் நிலையில் தினகரன் அணியிலிருந்த, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகர் தனபாலை நேற்று சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு, மற்றவர்கள் யாரும், பழனிசாமி அணிக்கு தாவக்கூடாது என்பதால், புதுச்சேரி சொகுசு பங்களாவில் தங்க வைத்திருந்த, தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, நேற்று இரவு அதிரடியாக இடம் மாற்றியுள்ளது. கர்நாடகாவுக்கு ஓட்டம்: இவர்கள் அனைவரும், கர்நாடகாவின் குடகு மாவட்டத்துக்கு புதுச்சேரியிலிருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.
📡🌍இந்திய கிரிக்கெட் வீரர் பலி
கொழும்பு: இந்தியாவை சேர்ந்த, 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி வீரர், இலங்கையில், நீரில் மூழ்கி இறந்தார். குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த மோனாத் சோனா நரேந்திரா, 12, இலங்கையில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, குஜராத் அணியில் இடம் பெற்றிருந்தார். கொழும்பில், அவர், நீச்சல் குளத்தில் மூழ்கி, இறந்தார். அவரது உடல், சூரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
📡🌍எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு, 'செபி' ஒப்புதல்
சிங்கப்பூர் : எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஒப்புதல் வழங்கி உள்ளது.
📡🌍15 ஆண்டு வாகனங்களுக்கு தடை: 'சியாம்' கோரிக்கை
புதுடில்லி : ‘சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர்,வினோத் கே.தாசரி கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
📡🌍வங்கி கணக்கில் பணம் எடுத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை; 'போலி' நிறுவன இயக்குனர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'
புதுடில்லி : ‘போலி நிறுவன இயக்குனர்கள், தங்கள் நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால், குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் முதல், 10 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்கும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.மத்திய அரசு, கறுப்புப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
அவற்றில் ஒன்றாக, வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் போன்ற முறைகேடுகளுக்காக, பெயரளவில் ஏற்படுத்தப்படும் போலி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை துவங்கி உள்ளது. முதற்கட்டமாக, நீண்ட காலம் வர்த்தகம் புரியாமல் இருந்த, 2.09 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்களின் வங்கிக் கணக்கை முடக்கவும், வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
📡🌍ராணுவம் நவீனமயம்; ஊழியர் நலனுக்கு முக்கியத்துவம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி
சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்றும் முப்படையினரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் (55) உறுதிபடத் தெரிவித்தார்.
📡🌍தமிழ் உயர்ந்தால் ஜாதி மத வெறுப்புகள் அகலும்!: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்
தமிழ் உயர்ந்தால் ஜாதி மத வெறுப்புகள் அகலும் என்று 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் கூறினார். '
📡🌍தமிழின் பெருமிதங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்
மிழின் பெருமிதங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.
தினமணி நாளிதழ் சார்பில் 'மொழி காத்தான் சாமி' என்ற தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை (செப்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் உ.வே.சாமிநாதைய்யர் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
கட்டுரை வாசிப்பதற்கு முன்னதாக கவிஞர் வைரமுத்து பேசியது:- நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இந்தியாவின் பெருமைகளை பாடங்களாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற முடிவை மத்திய கல்வித் துறை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
📡🌍அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
📡🌍அவசர காலங்களில் உதவுவதில் இந்தியாவுக்கு 81வது இடம்
லண்டன் : விபத்து மற்றும் அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 81வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
📡🌍தூத்துக்குடியில் மீடியாக்களிடம் பேச்சை தவிர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் போப் கல்லூரியின் தன்னாட்சி கல்லூரி துவக்கவிழா மற்றும் அறிவியல் பிரிவு விரிவாக்க கட்டட திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி வரையிலும் மீடியாக்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டுச் சென்றார்.
📡🌍நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!
நாகர்கோவில் அருகே கட்டையன் விளையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு சஜீத் என்ற 5 வயது மகன் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சஜீத் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

Comments
Post a Comment