திமுக எம்எல்ஏ க்கள் கூண்டோடு ராஜினாமா?
திமுக எம்எல்ஏ க்கள் கூண்டோடு ராஜினாமா?
குட்கா' விவகாரம் தொடர்பாக, 21 பேர் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கு முன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முடிவு எடுக்க, சென்னை, அறிவாலயத்தில், இன்று(செப்., 19), அக்கட்சி செயல் தலைவர், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபைக்குள் குட்கா போதைப் பொருள் எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. அதில், உரிமை குழு சார்பில், 21 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது.
'அடுத்த உத்தரவு வரும் வரை, உரிமை குழு நோட்டீஸ் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு, அக்., 12ல், மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில், உரிமை குழு நடவடிக்கை எந்த நேரத்திலும் பாயும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே, அதற்கு முன், ஆளுங்கட்சியின் திட்டத்தை முறியடிக்க, தி.மு.க., திட்டமிட்டு வருகிறது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்து, சட்டசபையை கலைக்கும் நெருக்கடியை, கவர்னருக்கு உருவாக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, 24 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை, கவர்னரிடம் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதில் இறுதி முடிவெடுப்பதற்காக, இன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Comments
Post a Comment