ஊழலுக்கு எதிராக மத்திய அரசு புதிய திட்டம்..
*ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு வெல்ல வாய்ப்பு? - மத்திய அரசு புதிய திட்டம்*
பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் குறித்து விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.
வருமான வரித் துறைக்கு ரகசியமாக தகவல் அளிக்கும் நபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பினாமி தடுப்பு திருத்தச்சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்தபின், ஏராளமான பினாமி சொத்து பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வங்கியில் இருக்கும் சேமிப்புகள், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் அதிகாரியும், இந்த திட்டத்தின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கூறுகையில், “ பினாமி சொத்துக்களை வைத்து இருப்பவர்கள் குறித்து ரகசியமாக தகவல் அளிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சமும், அதிகபட்சமாக ரூ.ஒரு கோடி வரையிலும் பரிசு அளிக்கப்பட உள்ளது ’’ என்றார்.
இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-
பினாமி சொத்துக்கள் குறித்து தகவல்கள் அளிக்கும் நபர்களின் விவரங்கள், முகவரிகள், அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அந்த நபர்களின் விவரங்களை வருமான வரித் துறை ஒருபோதும் வெளியிடாது. அவ்வாறு வெளியிடுவது தகவல் அளித்தவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் என்பதால், அது வெளியிடப்படாது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பினாமி சட்டத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. பொதுவாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் , வருமான வரித்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தங்களுக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு சன்மானம் அளிப்பது வழக்கமான ஒரு விஷயமாகும். ஆனால், அந்த சன்மானம், விருது என்பது பெரிதாக இருக்காது.
ஆனால், பினாமி தடுப்புச் சட்டம் கொண்டு வந்த பின்பும், பினாமி சொத்துக்களை வைத்து இருப்பவர்களைக் கண்டுபடிப்பது அதிகாரிகளுக்கு மிகக்கடினமாக இருந்து வருகிறது. அதை எளிதாக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பினாமி சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் குறித்து தகவல் அளிப்போரின் உதவியை நாடினால், எங்கள் பணி எளிதாகும்., வேகமாகும், அதே சமயம், திறன்மிக்க வகையிலும் செயல்பட முடியும். அவ்வாறு தகவல் அளிப்பவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள், மிகப்பெரிய வெகுமதிகள் அளித்தால் மட்டுமே எங்களின் இலக்கு எளிதாக அமையும். விரைவில் நாடுமுழுவதும் பினாமி சொத்துக்கள் வைத்து இருப்பவர்களை தேடி ஆப்ரேஷன் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
இந்த திட்டம் நிதி அமைச்சகத்துக்கு உட்பட்டது. நிதி அமைச்சகம், நிதி அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய நேரடி வரிகள் வாரியம் முறைப்படி அறிவிக்கும். இந்த அறிவிப்பு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Comments
Post a Comment