உணவே மருந்து...
உணவே மருந்து!
மனிதன் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளில் உணவும் ஒன்றாகும். உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க பரவியது.
'தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்"
என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது.
இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பான மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகள் என எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர்.
ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களினால் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம்.
உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி,
உணவு நஞ்சாகும் தருணம் :
பாலுடன் மீன், புளிப்புகனிகள், கீரைகள் சேர்த்து கொள்வது,
தயிருடன் கோழிக்கறி அல்லது மாமிசத்தைக் கலப்பது,
தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து கொள்வது,
முள்ளங்கியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்வது,
வெற்றிலையும், எண்ணெயையும் ஒன்றாக சேர்த்துக் கொள்வது,
கொத்துப்பசளையுடன் எள் சேர்த்து சாப்பிடுவது,
தேன், நெய், எண்ணெய் மற்றும் நீர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து அருந்துவது,
நாரையை நெய்யில் பொரித்து சாப்பிடுவது,
கரும்பு சாப்பிடவுடன் நீர் அருந்துவது,
சாராயம் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பது,
உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குள் கடிமான தொழில் அல்லது செயல்பாடுகளில் ஈடுபடுவது,
இரவில் கீரைகளை உண்ணுவதால்,
குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவது,
சில காய்கறிகளில் புளி சேர்க்கப்படும் போது, (அதன் அமிலத் தன்மை வைட்டமின் அழிவை தடுக்கிறது)
முட்டையை வேக வைக்காமல் சாப்பிடுதல்,
இப்படியாக நமது உணவு வகைகள் என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து, ரசாயனச் சத்து மற்றும் அமிலச்சத்து போன்றவற்றை இயற்கையாக கொண்ட அனைத்து காய், கனிகள், தானியங்கள் ஆகியவற்றை அளவோடு சேர்த்து சுவைபட சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

Comments
Post a Comment