முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார்.
நடுநிலைவாதி
பேட்டியில் அவர் கூறியதாவது:அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.
முதல்வராக விருப்பம்
புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன். சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments
Post a Comment