இன்றைய செய்திகள் 27.9.17
இன்றைய செய்திகள்
📡🌍சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் 2 அமைச்சர்களின் அறிவிப்பால் பரபரப்பு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் அறிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📡🌍4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
📡🌍கருணாநிதி நலமாக இருக்கிறார் மு.க.ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்றும், வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
📡🌍தமிழக அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலக நேரிடும்” தங்க தமிழ்செல்வன் பேட்டி
“ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் கூறிவரும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்” என்று தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்து உள்ளார்.
📡🌍ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க வேண்டியது அவசியம்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அ.தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டனர்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
📡🌍ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன சேலம் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.
📡🌍பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கிறது சவூதி அரேபியா
சவூதி அரசு பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையை முதன்முதலாக வழங்கவுள்ளது.
📡🌍அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை
📡🌍ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்
ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வைகோ பேசினார்.
📡🌍ஆப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்ப மாட்டோம்’ அமெரிக்க மந்திரியுடனான கூட்டு பேட்டியின்போது நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அமெரிக்க மந்திரி ஜேம்ஸ் மேட்டிசுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்தார்.
📡🌍மும்பையில் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த சச்சின் தெண்டுல்கர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுகோள்
மும்பையில் தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
📡🌍ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் குணமடைய வேண்டி 20 மாணவர்களுக்கு அலகு குத்திய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
📡🌍காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி அப்துல் கயூம் நஜார் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்.
📡🌍ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேற தமிழக விவசாயிகளுக்கு நோட்டீஸ்
டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் 73-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஜந்தர்மந்தரில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
📡🌍மதுரையில் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து ஆராய்ச்சி படிப்பு மாணவர் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையொட்டி, ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டார்.
📡🌍சென்னை முகப்பேரில் கொடூரம்: தலை, கை, கால்கள் இல்லாத மனித உடல் போலீஸ் விசாரணை சென்னை முகப்பேரில் சாக்கடையில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் உடல் ஒன்று கிடந்தது. அது யார்? உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
📡🌍தண்டையார்பேட்டையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு; 9–ம் வகுப்பு மாணவன் கைது தண்டையார்பேட்டையில் கடத்தப்பட்ட 2½ வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. கடத்திச் சென்ற 9–ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.
📡🌍நாளை முதல் அமல்: ‘‘மோசமாக நடந்து கொள்ளும் வீரர் களத்தை விட்டு வெளியேற்றப்படுவார்’’
சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரர் கால்பந்து பாணியில் வெளியேற்றப்படுவார்.
📡🌍நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலரும் தொழிலதிபருமான வருன் மணியன் மீது தாக்குதல்; லிஃப்டில் ஸ்க்ரு ட்ரைவரால் தாக்கியவர்களிடம் போலீசார் விசாரணை
📡🌍ஓசூர் மற்றும் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
📡🌍திருப்பதி பெருமாள் கோவிலில் நடைபெறவுள்ள கருடசேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை; திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
📡🌍கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு பேருந்தில் கடத்திக்கொண்டு வரப்பட்ட லாட்டரி டிக்கெட் பறிமுதல்; ஓட்டுநர்,நடத்துனர் கைது; தேனி போலீசார் நடவடிக்கை
📡🌍விவசாய நிலங்களுக்குள் புகுந்த என்.எல்.சி. உபரிநீர்..
1000 ஏக்கர் பயிர்கள் நாசம்.. இழப்பீடு கேட்டு விவசாயிகள் மறியல்
📡🌍சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்துள்ளதாக வெளியான தகவல் தவறு - கர்நாடகா அதிமுக செயலர் புகழேந்தி நியூஸ்18 தமிழுக்கு பேட்டி
📡🌍இடி தாக்கியதனால் கள்ளக்குறிச்சி அடுத்த முடியனூரில் ரூ.45,000 மதிப்புள்ள கறவை மாடு உயிரிழப்பு

Comments
Post a Comment