18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை
மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை : 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை_*
சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை அக்டோபர் 4-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய சபாநாயகர், பேரவை செயலர், அரசு கொறடா, முதல்வர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம்
சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கும் சபாநாயகரின் உத்தரவு இயற்கை நீதிக்கு முரணானது என தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டுள்ளார். அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கி பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிப்பாதாகவும் கூறியுள்ளார். 18 எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சரை மட்டுமே மாற்றக் கோரினார்கள், ஆனால் அவர்கள் கட்சி மாறவில்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தை வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிமன்றத்தில் வாசித்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஜனநாயக அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சோதனை. மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை அவசரமாக அரசிதழில் வெளியிட்டதாக அதன் நகலை நீதிமன்றத்தில் காட்டினார். 18 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை என தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறினார். எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் செய்வதால் தான் எதிர்ப்பதாக எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர்.
எடியூரப்பா வழக்கை சுட்டிக்காட்டி வாதம்
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு வாபஸ் வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் தந்த கடிதம் போல்தான் 18 பேரும் கொடுத்தனர். மேலும் எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கொள் காட்டியுள்ளார். அரசியல் அமைப்புச்சட்டம் 141,144 பிரிவுப்படி சபாநாயகர் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்றும் தவே கூறியுள்ளார். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல சட்டமன்ற சபாநாயகர். அதிருப்தியை வெளிப்படுத்தும் உட்கட்சி ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் அனுமதிக்க வேண்டும். மேலும் கட்சித் தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என துஷ்யந்த் தவே புகார் தெரிவித்துள்ளார்.
பன்னீர் மீது நடவடிக்கை இல்லை
கட்சிக்காரர் போல் சபாநாயகர் செயல்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீசெல்வம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி அரசின் மீது ஓ.பன்னீர்செல்வமும் ஊழல் புகார் கூறியிருந்தார் என துஷ்யந்த் தவே சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் புகார் கூறிய பன்னீசெல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று வாதத்தை நிறைவு செய்தார்.
பாரபட்ச நடவடிக்கை
பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை நீக்காமல் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது பாரபட்சமாகும். 18 எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது யார் என்பது அனைவரைக்கு தெரியம் என்று துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை தமிழகத்தில் நடந்துள்ளது. மத்தியில் இருப்பவர்கள் சபாநாயகரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வருக்கு எதடிராக வாக்களித்தால் மட்டுமே தகுதிநீக்கம் செய்ய முடியும் எனவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அரிமா சுந்தரம் வாதம்
தமிழகத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள சிலர் தீர்மானிக்கின்றனர் என துஷ்யந்த் தவே கூறியுள்ளார். இதற்கு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல என சபாநாயகர் தனபால் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டுள்ளார். அதேபோல் சபாநாயகர் மீது கண்மூடித்தனமாக புகார் கூறக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதத்துக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என அரிமா சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்படிதான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை நீட்டிக்கலாம் என்றும் கூறியுள்ளார். பெருபான்மையை நிரூபிக்க விரும்புவதாக முதல்வர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தரப்பில் வாதம்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
நீதிபதி துரைசாமி கேள்வி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு என்று நீதிபதி துரைசாமி கேள்வி எழுப்பினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் நீட்டிக்க கூடாது என்றும், நீதிபதி வினவினார்.
இதனையடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை அக்டோபர் 4-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மறு உத்தரவு வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment