40000கணிணி ஆசிரிய பட்டதாரிகள் வேலையின்றி தவிப்பு?
புதிய புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு 40000கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.. புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதா...