TSP NEWS 31.8.17
TSP NEWS 31.8.17
இன்றைய முக்கிய செய்திகள்
📡🌍பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது !! கைவிரித்த கவர்னர் !!!
அதிமுகவில் தற்போது நடப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசல் என்றும், அதனால் எதிர்கட்சிகள் கோரியபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட முடியாது எனவும் ஆளுநர் வித்யாசாகர் திடடவட்டமாக தெரிவித்துள்ளார்.
📡🌍பண மதிப்பிழப்பு விவகாரம்..! மத்திய அரசை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி
பண மதிப்பிழக்க நடவடிக்கையால் கறுப்பு பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். தற்போது ஒன்றும் வெளிவரவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
📡🌍டி.டி.வி. தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு எரித்தும் ஆர்ப்பாட்டம்...
திண்டுக்கல்லில் ஒன்றிய அதிமுக செயலாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு எரித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
📡🌍இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.!! எத்தனை பேர் வருவார்கள் ? பதற்றத்தில் எடப்பாடி தரப்பு !!!
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று தலைமைச் செயலகத்துக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில், எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்று எடப்பாடி தரப்பினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
📡🌍இன்றைய(ஆக.,31) விலை: பெட்ரோல் ரூ.71.66; டீசல் ரூ.60.06
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.66 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
📡🌍இனி ஸ்மார்ட் கார்டு இருந்தாத்தான் ரேஷனில் அரிசி !! நாளை முதல் அறிமுகம் !!!
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
📡🌍தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் குமரியில் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் இராமச்சந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆய்வு செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.
📡🌍இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வாரியாக அவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். கவர்னரிடம் மனு அளித்த அவர்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இன்று (ஆக.,31) சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 10 மணி முதல், மாவட்ட வாரியாக, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
📡🌍மும்பையில் இயல்புநிலை திரும்புகிறது
மும்பை மாநகரை வெள்ளக்காடாக்கிய மழை புதன் கிழமை அன்று சற்றே ஓய்ந்திருந்தது. கருமேகங்கள் விலகி வெண்மேகங்கள் தலைகாட்டின. இதனால், மும்பை மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சாலைகளில் உள்ள குப்பைகள், காற்றில் விழுந்த மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணியில் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
📡🌍திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓலக்கூர், சாரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 2 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
📡🌍தாவூத்துக்கு பாக்., அடைக்கலம்': இந்தியா மீண்டும் குற்றச்சாட்டு
புதுடில்லி: நிழல் உலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
📡🌍புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் 6 மாத காலத்திற்குள் டீ கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய இருக்கிறோம் என்று சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
📡🌍முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி - தயாராகும் விவசாயிகள்..!
பவானி சாகர் அணையில் இருந்து தமிழக அரசு உடனடியாக தண்ணீரைத் திறந்துவிடவில்லை என்றால் செப்.6-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று திருப்பூரில் அறிவித்திருக்கிறார்.
📡🌍மதுரையில் எவர்சில்வர் பாலிஷ் தொழிலாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
மதுரை ஒத்தக்கடையில் எவர் சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு அனைத்து பிரிவு எவர் சில்வர் தொழிற்சங்கங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
📡🌍கள்ள நோட்டு வைத்திருந்தவர் கைது..! 30 லட்சத்துக்கு புதிய 2,000 நோட்டுகள்
காரைக்குடியில் முப்பது லட்சம் மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகள் பிடிப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிளாஷா லாட்ஜில் நீண்ட நாட்களாக சையது பஷீர் என்பவர் தங்கியிருக்கிறார். இவர் தங்கியதற்கு வாடகை கொடுக்காமல் கடந்த சில நாட்களாக இழுத்தடித்ததாக தெரிகிறது. ஆனாலும் ஆட்கள் வரப்போக இருந்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். உடனே காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ஆகியோர் லாட்ஜில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது சையதுபஷீர் தங்கியிருந்த அறையில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பதிமூன்று கட்டுக்கள் பிடிபட்டது.
📡🌍நோய் தாக்கி பெண் யானை சாவு
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட அத்தாணி வனத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துைறயினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகர் ராமராஜன் கால்நடைத்துறை மருத்துவர்களுடன் சம்பவஇடத்திற்கு சென்றனர். கால்நடை மருத்தவர் அசோகன் அங்கு சென்று பிரேத பரிசோதனை செய்தார்.
📡🌍57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு
தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.
📡🌍மேட்டூருக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,762 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 6,751 கனஅடியாக சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 700 கனஅடி வீதமும், கிழக்கு,மேற்கு கால்வாயில் விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
📡🌍விருதுநகர் அருகே கார் விபத்து அரசு அதிகாரிகள் உட்பட 3 பேர் பலி
விருதுநகர்: சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றிய மேரியாழினி, கலைச்செல்வன், சுப்பிரமணியன் ஆகியோர், திருநெல்வேலியில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை அரசு காரில் திரும்பி கொண்டிருந்தனர். விருதுநகரை அடுத்த என்ஜிஓ காலனி அருகே, காரின் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் உதவி பொறியாளர்கள் மேரியாழினி, கலைச்செல்வன், டிரைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயம் அடைந்த சுப்பிரமணி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
📡🌍அரசு வக்கீலை நியமிக்க எவ்வளவு காலம் ஆகும்? பொதுத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
மதுரை: அரசு வக்கீல்களை நியமிக்க எவ்வளவு காலம் ஆகும் என பொதுத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
📡🌍டில்லி துணை நிலை கவர்னரை சந்திக்க 7 மணி நேரம் காத்திருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்
டில்லி: டில்லியில் மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கான கோப்புகளின் கையெழுத்திட தாமதித்ததால் துணை நிலைகவர்னரை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 மணிநேரம் காத்திருந்தனர்.
📡🌍வெங்காய தட்டுப்பாடு நம்ம ஊருக்கு வராது!
'தமிழகத்தில், வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை' என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிரா, பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் சாகுபடி அதிகளவில் நடக்கிறது.ஆண்டுதோறும், 1.94 கோடி டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், மழையால் வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க, பதுக்கலை கட்டுப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, சென்னை, கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மொத்த வியாபாரிகள் கூறியதாவது: சில மாதங்களாக, மஹாராஷ்டிரா மாநில வெங்காயத்தையே, தமிழகம் நம்பி இருந்தது.
இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கிலோ, 17 ரூபாய்க்கு கிடைத்த பெரிய வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு வெங்காயம் வர துவங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. வரத்தை பொறுத்து, விலை குறையுமா என்பது தெரியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
📡🌍செல்லாத ரூ.500 - 1,000 நோட்டுகள்.. 99 சதவீதம் 'டிபாசிட்'
மும்பை: செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு பின், வங்கிகளில், 99 சதவீத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன

Comments
Post a Comment