TSP NEWS 28.8.17
TSP NEWS 28.8.17
இன்றைய முக்கிய செய்திகள்..
📡அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவருகிறது.
📡இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡🌍வேதாரண்யத்தில் கடல்சீற்றம்: மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
நாகை: வேதாரண்யத்தில் கடல்சீற்றம் காரணமாக 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் பகுதி மீனவர்களின் 400 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
📡🌍தினகரன் அணி புகழேந்தி டி.ஜி.பி.,க்கு எச்சரிக்கை
திருச்சி: கர்நாடக மாநில, அ.தி.மு.க., செயலர் புகழேந்தி திருச்சியில், நேற்று கூறியதாவது:தமிழகம் முழுவதும், தினகரன் உருவ பொம்மையை எரிக்க, போலீசார் துணை போகின்றனர். தப்பான விவகாரத்துக்கு துணை போகாதீர்கள் என டி.ஜி.பி.,யை கேட்டுக் கொள்கிறேன்.பழனிசாமி பதவி விலக வேண்டும்; தனபால் முதல்வராக வேண்டும். அதேபோல், 30 தலித், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில் சிலரை, அமைச்சராக்க வேண்டும். தினகரன் மறுமுகத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டார். ஆட்சி போன பின், கட்சியை நடத்த தினகரன் மற்றும் சசிகலாவால் மட்டுமே முடியும், என்றார்.
📡🌍தாவும் எம்.எல்.ஏ.,க்கள்: முதல்வர் அதிர்ச்சி
அ.தி.மு.க.,வின் அணிகளும் இணைந்த பின், தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தாவி வருவதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்
📡🌍மத்திய அரசின் ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார்..! துரைமுருகன் சாடல்
ஆளுநர் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்று துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
📡🌍செம்மலை அதிருப்தி : முதல்வரை புறக்கணித்தார்
சேலம்: சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின், தன் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
📡🌍மேற்கு வங்கத்தில் இறைச்சிக்காக மாடு திருட முயற்சி செய்ததாக இருவர் அடித்துக் கொலை
மாட்டிறைச்சியை வைத்து வட நாட்டில் பல்வேறு வகுப்புவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மாடு திருடச் சென்றதாகக் கூறி இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
📡🌍சர்ஜிகல் ஸ்டிரைக்' இதற்கு முன் நடந்ததா?
புதுடில்லி: 'சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும், ராணுவத்தின் துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள், இதற்கு முன் நடந்ததற்கான எந்த ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லை' என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது
📡🌍ரூ.70 ஆயிரம் கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன
📡🌍பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து..!
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கும் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னாநேவாலுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
📡🌍லாலு பிரசாத் கூட்டத்தில் நிதிஷ்குமாரை சாடிய மம்தா பானர்ஜி..!
'நிதிஷ்குமார் அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டார்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
📡🌍உ.பி-யில் தொடரும் அவலம்: மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை கடித்துக் குதறிய நாய்
உத்தரப்பிரதேசத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே இந்தச் சம்பவம் உலுக்கியது. இந்தச் சூழலில், உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குள் நுழைந்த நாய் ஒன்று, இறந்துபோன ஒரு பெண்ணின் உடலை கடித்துத் தின்றது. தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களைக் கடித்துத் தின்றுள்ளது.
📡🌍சீனாவின் விஷமத்தனம் அதிகரிக்கும்!: ராணுவ தளபதி ராவத் எச்சரிக்கை
புனே: நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான, சிக்கிம் எல்லையில் உள்ள, 'டோக்லாம்' பகுதியில், சீன வீரர்கள், சமீபத்தில் சாலை அமைக்க முயற்சித்தனர்; இதை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அங்கிருந்து, சீன வீரர்கள் வெளியேற மறுப்பதால், பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, ராணுவத் தளபதி, பிபின் ராவத் பேசியதாவது: டோக்லாம் பகுதியில், தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படுத்த, சீனா முயற்சித்தது. இந்தியாவுடனான எல்லை பகுதிகளில், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட, சீனா முயற்சித்து வருகிறது. இதனால், வருங்காலத்தில், டோக்லாமில் ஏற்பட்டதை போன்ற பிரச்னைகள் அடிக்கடி நிகழும் வாய்ப்புள்ளது.
📡🌍.டி.வி தினகரனுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் ஆதரவு - கெத்து காட்டும் நாஞ்சில் சம்பத்.
டி.டி.வி.தினகரனுக்கு 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் ஆதரவாக உள்ளனர் என்று தேனியில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
📡🌍350 ஆண்டுகளில் இல்லாத மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் டெக்சாஸ்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
டெக்சாஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி புயலால் சுமார் 210 கி.மீ. (130 மைல்கள்) வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக, டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. பலத்த காற்றுடன் மழைப்பொழிவும் இருந்ததால், பல இடங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், டெக்சாஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
📡🌍பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று செயல்படுத்தணும் - விவசாயிகள் தீர்மானம்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கம்பத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து
📡🌍பா.ஜ.க கூட்டணியில் இணைகிறது அ.தி.மு.க. - மத்திய அமைச்சரவையில் இட ஒதுக்கம்...
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரைவில் அ.தி.மு.க. கட்சி இடம் பெற இருக்கிறது. அதன்பின் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடங்கள் அந்த கட்சியைச் சேர்ந்த முக்கிய எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது என்று டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
📡🌍எல்லை பாதுகாப்பு வீரர் வீடியோ: 'வைரல்' ஆக்கியது ஐ.எஸ்.ஐ.,
புதுடில்லி: தரமான உணவு வழங்கவில்லை என கூறி, இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் வெளியிட்ட வீடியோவை, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., சமூக வலைதளங்களில் பரப்பியதாக, பாதுகாப்பு படை அதிகாரி குற்றம் சாட்டினார்.
📡🌍குர்மீத் தண்டனை விபரம் இன்று அறிவிப்பு: ரோடக்கில் பல அடுக்கு பாதுகாப்பு
ஹரியானா: 'தேரா சச்சா சவுதா' அமைப்பு தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என, உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து வன்முறை வெடித்ததால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. குர்மீத்துக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளதால், ரோடக் நகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
📡🌍முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் - தினகரனுக்கு நேரடி சவால் விடும் வெல்லமண்டி நடராஜன்.
முடிந்தால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி பார்க்கட்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சவால் விட்டுள்ளார்.
📡🌍பாளையங்கோட்டை அருகே மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை
நெல்லை: பாளையங்கோட்டை அருகே கோட்டூரில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கெண்டுள்ளார். ஆசிரியர் கண்டித்ததால் 7ம் வகுப்பு மாணவி சப்ரின் ஹாரிரா தற்கொலை செய்து கெண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
📡🌍ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு தெரியுமா?
கடந்த மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் 3.67 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.
கடந்த மாதத்துக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. அப்போது விலை உயர்வு வெளிப்படையாகத் தெரிந்து வந்தது. ஆனால், ஜூலை மாதம் முதல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படுகிறது.
📡🌍கன்னியாக்குமரி மாவட்டத்தில் சில இடங்களில் மழை
கன்னியாக்குமரி: கன்னியாக்குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பேச்சிப்பாறை, குலசேகரம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
📡🌍3 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி: 3 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் பவானா, ஆந்திரப் பிரதேசத்தில் நந்தயால், கோவாவில் வால்பாய் மற்றும் பனாஜி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கோவா, டெல்லி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. அதன்படி, தேர்தல் முடிவுகள் இன்று மதியத்துக்குள் தெரிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
📡🌍சாமியார் குர்மீத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமா? - சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிப்பு...
பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விவரங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
📡🌍மின்சார கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூவர் பலி; தாயைப் பார்க்க நண்பர்களுடன் வந்தவருக்கு நடந்த சோகம்.
திருச்சியில் தாயைப் பார்க்க நண்பர்களுடன் வந்தவரின் மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments
Post a Comment