TSP NEWS 26.8.17
🙏🏼TSP NEWS🙏🏼
📡💥ஒக்கேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஒக்கேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக ஒக்கேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
📡💥திருச்சி மாநகராட்சி இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது: திருச்சி மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி: திருச்சி மாநகராட்சி இணையதளம் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நான்கு நாட்கள் இயங்காது என்று திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். மாநகராட்சி இணையதளம் பொது இணையத்தளமாக மாற்றப்படும் பணி நடைபெறுவதால் 4 நாட்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணையதளம் செயல்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
📡💥நாகர்கோவில் அருகே ஜவுளி கடையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளை
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கோட்டாரில் சிவசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள துணிகள், ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் சுவற்றை துளையிட்டு துணிகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.
📡💥கடலூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்
கடலூர்: கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே கூடலையத்தூரில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி குவாரி முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் மணல் குவாரியை மூட வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📡💥ஒபிஎஸ் வந்தால் இணைத்து கொள்வோம்... - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி பேச்சு...
முதலமைச்சரை நீக்கிய பிறகு பன்னீர் செல்வம் எங்களுடன் ஒத்து வந்தால் இணைத்து கொள்வோம் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் எனவும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
📡💥டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுடெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப், ஹரியானா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
📡💥வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உடல்நிலை மோசமடைந்தது?
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார்.
தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக நளினியிடம் முருகன் தெரிவித்தார். இதன்படி, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முருகன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீர் மட்டுமே அருந்துகிறார்.
தொடர் உண்ணாவிரதம் காரணமாக, முருகன் உடல்நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📡💥கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை - பிரதமர் மோடி உத்தரவாதம்...!!!
பஞ்சாப்,ஹரியானா வன்முறை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
📡💥புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ வருகை
புதுச்சேரி: புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ வருகை தந்துள்ளார். தினகரனை சந்தித்த நிலையில் புதுச்சேரி விடுதிக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி வருகை தந்துள்ளார்.
📡💥தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் க.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சை: தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் திராவிடர் கழகத் தலைவர் க.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு மூலம் மாநில உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் ரயில் நிலையம் முன் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📡💥எடப்பாடி கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாதாம்? ஆளுநருக்கு கடிதம் எழுதிய ஜெ.தீபா...!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கை முடிவு எடுக்க தடைவிதிக்கவேண்டும் என ஆளுநருக்கு ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளார்.
📡💥மதுசூதனனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மதுசூதனன் இல்லத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுசூதனன் மனைவி ஜீவா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியதை அடுத்து ஜீவாவின் உடல்நிலை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று விசாரித்துள்ளார்.
📡💥கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களின் பட்டியல் வெளியீடு
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2014ல் 784 மீனவர்களும், 2015ல் 454 மீனவர்களும், 2016ல் 290 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📡💥குர்மீத் ராம் ஆசிரமத்திற்குள் ராணுவம் நுழைந்தது
சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவம், துணை ராணுவம் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது. சிர்சா மாவட்டத்தில் குர்மீத் ராம் ரஹீமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். துணை ராணுவ படை வீரர்களும், அதி விரைவுப்படை போலீசாரும் ஆசிரமத்திற்குள் சென்றுள்ளனர்.
📡💥ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாளில் ஜனாதிபதியை சந்திப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்
சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு நாட்களில் குடியரசுத்தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
📡💥வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி
பீகார்: வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி பீகார் வந்தடைந்தார். இதனையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் சுஷில் மோடி ஆகியோர் உடனிருந்தனர்.
📡💥தமிழக காவல்துறை அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி
திருவள்ளூர்: துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக காவல்துறை அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
📡💥பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடி
பீகார்: பீகார் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ.500 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்
📡💥பலாத்கார வழக்கில் சாமியாருக்கு தண்டனை: பற்றி எரியும் வட இந்தியா! அதிர்ச்சி
பெண் பக்தை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வடமாநில சாமியார் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா மற்றும் டில்லியில் கலவரம் வெடித்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பேர் பலியானார்கள். 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
📡💥தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்: எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேட்டி
அரியலூர்: செந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய, இபிஎஸ் ஆதரவாளரான குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஊழல் புகார்கள் அதிகம் வருவதால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
📡💥தியாகத்திற்கும் துரோகத்திற்கும் நடக்கின்ற போர்.டிடிவியின் அனலடிக்கும் பேச்சு
தற்போது தமிழகத்தில் தியாகத்திற்கும் துரோகத்திற்கும் போர் நடக்கிறது என்றும் என்னுடன் இருப்பவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
📡💥சசிகலாவை நீக்குவதாக கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: டிடிவி தினகரன்
தியாகத்துக்காக போராடுகின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அந்த (எடப்பாடி பழனிசாமி) அணியிலே இருந்திருந்தால் அவர்களுக்கு எந்தெந்த சலுகைகள் கிடைத்திருக்கும்.
பொது செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தர்மத்தின் பக்கம் உள்ளனர். நியாயம் நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
📡💥ஹரியானாவில் கலவரம்: முதல்வர் கட்டாருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சண்டிகர்: ஹரியானாவில் நடந்த கலவரத்தை வேடிக்கை பார்த்ததாக முதல்வர் கட்டாருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக வன்முறையை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளார். வன்முறையாளர்களிடம் அரசு சரணடைந்து விட்டதாக ஹரியானா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
📡💥நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன்.. மவுனம் கலைத்த டிடிவி தினகரன்
சென்னை: இப்போது நடப்பது தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும், நாங்கள் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
📡💥மகள் திருமணத்தில் பங்கேற்க நளினிக்கும் பரோல் வழங்க வேண்டும்: வன்னியரசு
ஜோலார்பேட்டை: பேரறிவாளனைப் போல நளினிக்கும் பரோல் வழங்க விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டையில் பேரறிவாளனை சந்தித்த பின் வி.சி. துணைப் பொதுச்செயலர் வன்னியரசு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மகள் அரித்ரா திருமணத்தில் பங்கேற்க பரோல் வழங்குமாறு நளினி கோரிக்கை விடுத்துள்ளனர்.
📡💥பழனியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 75 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
பழனி: பழனி அடிவாரம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பழனி புறவழிச்சாலை, கொடைக்கானல் ரோடு உள்ளிட்ட இடங்களில் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பழனியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Comments
Post a Comment