TSP NEWS 25.8.17
TSP DAILY NEWS - 25.8.17
@இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள்.. நாடெங்கும் கோலாகலம், நேயர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
📡📻பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு.பேரறிவாளன் தாயார் கொடுத்த மனுவின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி முடிவு.
📡📻விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரிப்பு
சென்னை: நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்து உள்ளது என்றும், காய்கறி, பழங்கள் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
📡📻உஷாராக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யும் எடப்பாடி தரப்பு!
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச்செயலரை தேர்வு செய்வதில் எடப்பாடி தரப்பு மும்முரமாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
📡📻மாஸ்... தெறி... மரண மாஸ்... விவேகம் படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள் -
சென்னை: நடிகர் அஜீத் நடித்த விவேகம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம், மாஸ், தெறி, தெறிக்கவிட்டுட்டார்ல என ஒற்றை வார்த்தையில் படத்தை விமர்சனம் செய்துள்ளார்கள்.
📡📻தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு: ஹரியானா, பஞ்சாப்பில் பதற்றம்
டெல்லி: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகார் வழக்கில் நாளைத் தீர்ப்பு வர இருப்பதால் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
📡📻ரிசார்ட்டிலிருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள்.. கலெக்டரிடம் ஓம்சக்தி சேகர் மனு
புதுச்சேரி: டிடிவி தினகரனின் 19 ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் ரிசார்ட்டிலிருந்து வெளி ஏற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் மனு அளித்துள்ளார்.
📡📻தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்குப் பதவி...விருதுநகரை வளைக்கப் பார்க்கும் தினகரனின் பிளான்!
சென்னை : அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா உள்ளிட்டோரை மாற்றி அதிரடி நியமனங்களை அறிவித்துள்ளார்.
📡📻புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பங்கதெனியப் பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
இந்த பாம்பு "இரத்த மாம்பிலை"என்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஆறு அடி நீளம் உடையது என தெரிவிக்கப்படுகின்றது.
பிடிக்கப்பட்ட இந்த இரட்டைத் தலை பாம்பை தெஹிவளை மிருக காட்சிசாலைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
📡📻மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்... கொறடா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவோம்- தங்க தமிழ் செல்வன்
புதுச்சேரி: 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்த கொறடா உத்தரவு சட்டப்படி செல்லாது என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
📡📻இலங்கைக்கு எதிராக 2 வது ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு
கொழும்பு: 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.
India won by 3 wkts (DLS method)
SL - 236/8 (50.0 Ovs)
IND - 231/7 (44.2 Ovs)
📡📻டிடிவியோடது "கொலைக்கார குடும்பம்"..! அமைச்சர் வீரமணி பேச்சால் பெரும் பரபரப்பு..!
வேலூர் மாவட்டம் ஆம்பூரில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி பேசிய பேச்சால் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு காணப்படுகிறது
📡📻ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - நீதிமன்றத்தை நாடிய புகழேந்தி...!!!
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
📡📻விடுதியில் 'மிஸ்சான' பெண் எம்எல்ஏக்கள்.. கேள்வி கேட்ட நிருபர்களிடம் சீறிய தங்க தமிழ்செல்வன்
புதுவை: தலைமை கொறடா உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தபோது பெண் எம்எல்ஏ-க்கள் எங்கே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் குறித்து ஏன் கேட்கிறீர்கள் என்று தங்கதமிழ் செல்வன் கேள்வி எழுப்பினார்.
📡📻திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, செப். 1ல் மீண்டும் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஏ.கே.போஸை அங்கீகரித்து, வேட்புமனுவில் ஜெயலலிதா இடதுகை பெருவிரல் ரேகை வைத்தது தொடர்பான ஆவணங்களுடன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார் லக்கானி
📡📻விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்- பக்தர்கள் குவிந்தனர்
காரைக்குடி: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
📡📻உலகின் மிகச்சிறந்த "CM" விஜய்..! டிரம்ப் டுவீட் செய்வார்..சொன்னது ? ..!
உலகின் மிகச்சிறந்த CM விஜய்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் திரைப்பட பிரபலங்கள் பங்கேற்று கருத்தை தெரிவித்தனர்.
📡📻19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் - தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி.
கொறடாவின் அதிகாரம் சட்டமன்றத்திற்குள் மட்டுமே; வெளி சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்க கொறடாவுக்கு அதிகாரம் இல்லை - தினகரன் வழக்கறிஞர்.
📡📻20 வயதில் போய் 46 வயதில் வெளியே வருகிறார் பேரறிவாளன்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 வயதில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் 46 வயதில் தற்போது பரோலில் வருகிறார்.
📡📻2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி
புதுடில்லி: வரும் 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற பாரதிய அக்ரோ இன்ஸ்டிஸ்டுகள் அறக்கட்டளையின் பொன் விழாவில் கலந்து கொண்டு கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்காகும் என மோடி கூறினார்.
📡📻திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் செந்தில்குமார், தஞ்சை மாவட்ட எஸ்.பி-ஆக நியமனம் - தமிழக அரசு உத்தரவு.

Comments
Post a Comment