TSP NEWS 23.8.17
📡💥இன்றைய 📰 செய்திகள் 💥📡
📡💥23\08\17💥📡
📡💥வருகிறது 200 ரூபாய் நோட்டு!
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
📡💥ஆட்சியே கவிழ்ந்தாலும் சசிகலா குடும்பத்துக்கு கட்சியில் இடமில்லை: எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி
கோவை: ஆட்சியே கவிழ்ந்தாலும் சசிகலா குடும்பத்துக்கு கட்சியில் இடமில்லை என எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். பொதுக்குழுவை கூட்டினால் யாருக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும் என்று கோவை கவுண்டம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
📡💥மத்திய அரசிடம் தமிழக அரசு தனது சுயமரியாதையை இழந்துவிட்டது: தா.பாண்டியன்
புதுக்கோட்டை: மத்திய அரசிடம் தமிழக அரசு தனது சுயமரியாதையை இழந்துவிட்டது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
📡💥நீட்... மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது.. ஹைகோர்ட் பரபரப்பு கருத்து
சென்னை: மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவிித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📡💥ஆபத்தான பகுதிகளில் மீன்பிடிப்பு... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பி உபரி நீர் செல்லும் மதகுகளில் ஆபத்தான இடங்களில் மீன்பிடிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
📡💥வாணியம்பாடியில் தலைமை ஆசிரியை தற்கொலை முயற்சி
வேலூர்: வாணியம்பாடி நடுபட்டறை அரசு பள்ளி தலைமை ஆசிரியை கனிமொழி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஊழியர்கள் முன் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சித்ரா, மாதம்மாள் திட்டியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
📡💥அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை... ஆளுநரிடம் காங்.எம்எல்ஏ கடிதம்
சென்னை: அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடிதம் அளித்துள்ளனர். இதேபோல் அதிமுக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுகவும் கோரிக்கை விடுத்துள்ளது.
📡💥ஒரு மொபைலின் விலை 1.5 லட்சம்... என்ன செய்திருக்கிறது லம்போகினி?
காஸ்ட்லி கார் உற்பத்தி நிறுவனமான லம்போகினி (Lamborghini), புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆடம்பரப் பிரியர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஆல்ஃபா ஒன் (Alpha One) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
📡💥சென்னை முகப்பேரில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு
சென்னை: சென்னை முகப்பேரில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். பேருந்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்க வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
📡💥நெல்லை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம் பணங்குடி அருகே வடலிவிளை தோட்டத்தில் பிரின்ஸ் வின்சோ என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📡💥தினகரனுக்கு எகிறும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு... எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழுமா?
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
📡💥தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
அமெரிக்கா : அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்குரிய மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.
📡💥அதிமுகவில் பிளவுகள் கிடையாது: தம்பிதுரை பேட்டி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கருத்து வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றாக செயல்படுவதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளர்.
📡💥ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல் ராஜினாமா
லக்னோ: அடுத்தடுத்து விபத்துகள் நடந்ததை அடுத்து ரயில்வே வாரியத்தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பினார். கடந்த வாரம் உ.பி.யில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡💥ஜம்மு-காஷ்மீரில் ஆசிரியர்கள் வருகைக்காக வாசலில் காத்திருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் தினமும் 2 மணி நேரம் பள்ளி வாசலில் காத்திருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள். உதம்பூர் மாவட்டம் நானாசோ பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் பள்ளி வாசலில் குழந்தைகள் தினமும் 2 மணி நேரம் காத்துக் கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
📡💥நீட் கட்டாயத்தால் மற்றொரு ஷாக்.. மாநில பாடத்திட்டத்தில் படித்த 500 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட்?
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறவுள்ளதால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற சுமார் 500 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
📡💥இரண்டு வருட காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி!' - நீட் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த முகேஷ் கண்ணா
பல்வேறு குளறுபடிகளைக் கடந்து வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலில், தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மாணவன் முகேஷ் கண்ணா.
📡💥நீட் தேர்வு.. எச். ராஜா பேச்சைத்தான் மத்திய அரசு கேட்கிறது.. பிரின்ஸ் கஜேந்திர பாபு காட்டம்
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தொடர்பான பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேச்சைத்தான் மத்தியில் இருக்கும் பாஜக அரசு கேட்டு நடக்கிறது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
📡💥டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனுடன் நடிகர் சங்கத்தலைவர் விஷால் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். தனது சகோதரி திருமண அழைப்பிதழை டிடிவி தினகரனுக்கு வழங்க விஷால் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡💥கர்நாடகா புதிய அணை கட்ட அனுமதி இல்லை! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு வாதம்
சென்னை, மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 17ந்தேதி விசாரணை யின்போது, தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்தது.
📡💥இந்துக்கள் வீட்டை இஸ்லாமியர்கள் வாங்க தடை தேவை : பா ஜ க பெண் எம் எல் ஏ கோரிக்கை
சூரத் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் பெண் எம் எல் ஏ சங்கீதா பாடில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
📡💥உ. பி. யில் தொடரும் ரெயில் விபத்து : மற்றொரு ரெயில் தடம் புரண்டது. 75 பேர் காயம்
ஆருய்யா , உ. பி.
உத்திரபிரதேசம் ஆருய்யா மாவட்டத்தில் நேற்று கைஃபியாத் எக்ஸ்பிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
📡💥குழந்தைகள் பலி: உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் சுறுசுறுப்பு!
உ.பி.மாநிலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற பச்சிளங்குழந்தைகளின் பரிதாப மரணம் காரணமாக, ஆளும் யோகி தலைமையிலான பாரதியஜனதா அரசுக்கு பொதுமக்களி டையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக சுறுசுறுப்பாக களமிறங்கி பணியாற்றி வரும் காங்கிரசாரின் பணி பொதுமக்களுடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
📡💥நீட் அவலம்.. மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காதோ என அச்சம்.. வேலூரில் தாய் தற்கொலை!
சென்னை: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
📡💥பூந்தமல்லி எம்.எல்.ஏவை காணவில்லையாம்..!!! - டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் ஏழுமலைக்கு எதிராக பூந்தமல்லி எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
📡💥📡💥📡💥📡💥📡💥📡

Comments
Post a Comment