TSP NEWS 1.9.17
TSP NEWS 01.9.17
இன்றைய முக்கிய செய்திகள்
📡📺ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதில் சிக்கல்
தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல் ISRO pslvc39
வெப்பத் தடுப்பு சரியாக பிரியாததால் ராக்கெட் தோல்வி அடைந்ததாக கிரண்குமார் விளக்கம்
📡📺கடலில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்
சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் தினேஷ் மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
📡📺மும்பையில் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி : மும்பையில் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
📡📺புளுவேல் விளையாட்டில் மூளையாக செயல்பட்ட சிறுமி ரஷ்யாவில் கைது
மாஸ்கோ:புளுவேல் விளையாட்டில் மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுமியை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.
📡📺ஆட்சி விரைவில் கவிழும்.. முதல்வர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பேட்டி!
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடக்கும் 'அதிமுக ஆட்சி கவிழும், ஆட்சி மாற்றம் ஏற்படும் ' என்று தெரிவித்தார்.
📡📺நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் சரிவு
மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் சரிவு அடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி-மார்ச் காலாண்டை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது பொருளாதார வளர்ச்சி விகிதம் தகவல் தெரிவித்துள்ளது.
📡📺எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்: சு.சுவாமி திடீர் வலியுறுத்தல்
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடீரென வலியுறுத்தியுள்ளார்.
📡📺ப்ளூவேல்.. தக்க நேரத்தில் தடுத்து சிறுவன் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்கள்
குவாஹாட்டி: ப்ளூவேல் கேம் விளையாடிய அஸ்ஸாம் மாநில மாணவரின் கையில் ப்ளுவேல் வரைந்திருந்ததை பார்த்த அவரது ஆசிரியர் பெற்றோரை உஷார்படுத்தியதால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
📡📺ஆசிரியை செய்யிற வேலையா இது...? - மாணவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு...
ஆக்ராவை சேர்ந்த 15 வயது மாணவனை 25 வயது ஆசிரியை ஒருவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சேர்ந்து அவனை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ. 30 லட்சம் பறித்து உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
📡📺வெள்ள நிவாரணத் தொகையாக 1 மில்லியன் டாலர் வழங்கிய "கூகுள் ஆர்க்" - தன்னார்வ தொண்டு நிறுவனம்
புதுடெல்லி : இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் வெள்ளத்தால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 1 மில்லியன் டாலர் நிவாரணத் தொகையை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கான கூகுள் நிறுவன துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.
📡📺பொதுத் துறை நிறுவனங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மக்கள் இடஒதுக்கீடும் பெறுவதற்கான (கிரீம லேயர்) ஆண்டு வருமான ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 1993ம் ஆண்டு இட ஒதுக்கீடு முறையை வருவாய் மற்றும் அந்தஸ்து அடிப்படையில் நிர்ணயம் செய்யும் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொது துறை நிதி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
📡📺ஆணவத்தின் உச்சம்.. வாக்கிங் சென்ற முதியவரை சட்டை காலரை இழுத்து அடித்த அம்பத்தி ராயுடு
ஹைதராபாத்: காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.
📡📺பெஃப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு
சென்னை: பெஃப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் அவசரக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📡📺ரோகித் ஷர்மா, கோஹ்லி சதம்.. இலங்கைக்கு 376 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
சென்னை: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடரை கைப்பற்றிவிட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டஉள்ளன.
சர்துல் தாக்கூர் (முதல் போட்டி), குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, சஹல், புவனேஸ்வர்குமார், ஜாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மானத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் இலங்கையும், 3 மாற்றங்களை செய்துள்ளது. ஹசரங்கா, முனவீரா, புஸ்பகுமாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசி இருவருக்கும் இதுதான் முதல் போட்டியாகும். கப்புகதெரா, சண்டிமால், சமீரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 375 ரன்களை குவித்தது. ரோகித் ஷர்மா 104 மற்றும் கோஹ்லி 131 ரன்களை குவித்தனர். மனிஷ் பாண்டே 50 ரன்களுடனும், டோணி 49 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.
📡📺சூப்பர் இப்படித்தான் இருக்கனும்..பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் முதலிடமாம்.
பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் என, பா.ஜனதாவை சேர்ந்த 51 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளது என்றும், மற்ற கட்சிகளைவிட பா.ஜனதாவில்தான் அதிக வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
📡📺அ.தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் அணியும் விரைவில் இணையும்- அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்
ஈரோடு: ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல், டி.டி.வி. தினகரன் அணியும் விரைவில் அஇஅதிமுகவில் இணையும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
📡📺லக்னோ: பள்ளி வகுப்பறையில் வருகைப் பதிவேட்டின் போது மௌனமாக இருந்த சிறுவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடிக்கும் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
லக்னோவின் செயின்ட் ஜான் வியன்னா பள்ளியில் மாணவன் ஒருவன் வகுப்பறையில் வருகைப் பதிவேட்டின் போது பிரசென்ட் அதாவது உள்ளேன் ஐயா என்று சொல்லவில்லையாம். இதற்காக அந்த சின்னஞ்சிறு மாணவனை அடித்து தன்னுடைய கொடூர முகத்தை காட்டியுள்ளார் ஆசிரியர் ஒருவர். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஏறத்தாழ 40 முறை மாணவன் கன்னத்தில் அறைந்திருக்கிறார் ஆசிரியர்.
📡📺300வது போட்டி.. 1 ரன்னில் அரை சதத்தை தவறவிட்டாலும், புது உலக சாதனை படைத்தார் டோணி!
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இன்று டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 5 பவுண்டரிகளும், 1 சிக்சரும் விளாசி அவர் ரசிகர்களை மகிழ்வித்தார்.
1 ரன்னில் அரை சதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டார் டோணி. அந்த ரன்னை எடுத்திருந்தால் அது இவரின் 100வது அரை சதமாக இருந்திருக்கும். ஆனால், டோணி விடுவாரா. நாட்அவுட்டாக நின்றதன் மூலம், புது சாதனை படைத்துள்ளார்.
📡📺அரசியல் பேச டெல்லிக்கு வரவில்லை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை: அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2ம் இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் விருதைப் பெறவே டெல்லி வந்தேன், அரசியலுக்காக அல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறைக்கு, நிலுவைத் தொகை ரூ.2,542 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோரிக்கை வைத்தேன் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
📡📺ஒருபோதும் மன்னிப்பே கிடையாது... சசிகலா குடும்பம் பற்றி ஜெ... வைரல் வீடியோ
சென்னை: சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ பற்றிய சிடியை அமைச்சர் உதயகுமார் இன்று வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
📡📺வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
📡📺விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை
சென்னை: விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கி இருப்பதால் படத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெஃப்சி தொடர்ந்த வழக்கில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡📺மும்பையில் கட்டடம் இடிந்தது: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
மும்பை: மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது
📡📺பரமக்குடி அருகே கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை
பரமக்குடி: பரமக்குடி அருகே சிறுவயலில் முருகேசன் என்பவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு கோயில் இட பிரச்சனையில் முருகேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
📡📺பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார் தம்பிதுரை.

Comments
Post a Comment