TSP NEWS 14.8.17
இன்றைய செய்தித் துளிகள்
📡💥புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு 2-வது முறையாக ஒத்திவைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு காரணம் கூறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
📡💥வைகை அணையில் சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெற்றி என்ற மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.
📡💥திருப்பூரில் மளிகை கடை மீது மண்ணெண்ணெய் குண்டுவீச்சு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையத்தில் மளிகை கடை மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டுவீசியுள்ளனர். பெரியசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் வீசிய மண்ணெண்ணெய் குண்டுவால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சேதமாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡💥ஊட்டி, கொடைக்கானலாக மாறிவரும் கன்னியாகுமரி! குளு குளு காலநிலையால் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நான்கு நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திரிவேணி சங்கமத்தில் காலை முதல் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
📡💥அரசு வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தல்!!
விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் இன்று அதிகாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு அரசு வாகனம் வந்தது. அதை மறித்து நிறுத்திய போலீசார், அதில் வந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.
ஆனால்,அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால்,போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வாகனத்தில் சோதனை செய்தபோது, 54 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
📡💥வெள்ளம் சூழ்ந்ததால் கோரக்பூர் விமான நிலையம் மூடல்
கோரக்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
📡💥உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கமல்,ரஜினி,சூர்யா....!
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பார்கள். அதைவிட சிறந்த தானம் உடலுறுப்பு தானம் என்றே சொல்லலாம்.
நாம் இறந்த பிறகும், வாழக்கூடிய ஒரு வாய்ப்பு எதுவென்றால் அது உடலுறுப்பு தானத்தின் மூலமாகத்தான் என்பது தான்உண்மை.இதன் மூலம் எத்தனையோ உயிர்களை காப்பாற்றவும் முடியும்.
அந்த வரிசையில் தாமாகவே முன்வந்து, தங்கள் உடலுருப்புகளை தானம் செய்ய தயாரென சில பிரபலங்கள் முன்வந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச உடலுறுப்பு தினம் நேற்றுகொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு பல பிரபலங்கள் உடலுறுப்பு தானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரிசையில் கமல் , ரஜினி, சூர்யா, மாதவன் ,விஜய் சேதுபதி, விஷால், சரத் குமார், பிரசன்னா மற்றும் சிநேகா தம்பதியர், காஜல் அகர்வால் ஆகியோர் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர்.
📡💥ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்! முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து
இந்திய நாட்டின் தனிச் சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வினை காத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, நமது நாட்டை வளமையும் வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டுமென்று முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
📡💥கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்: தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு...!!
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
📡💥எங்களை பகைத்து கொண்டால் ஆட்சி நடக்காது.. திவாகரன் எச்சரிக்கை
மதுரை: எங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சியை நடத்த முடியாது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார்.
📡💥சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!
சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதனுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
📡💥ஜார்க்கண்ட் மின்சார வாரியம்... ரூ.3,800 கோடி பாக்கி என கொடுத்த ரசீதால் உரிமையாளர் 'ஷாக்'!
ஜாம்ஷெட்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு ரூ 3,800 கோடி கட்டண பாக்கி என்று மின்சார வாரியம் அளித்த ரசீதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
📡💥ஆந்திராவில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது
கோதாவரி: ஆந்திரா மாநிலத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமாரின் செல்போன் வெடித்து எரிந்து சேதமடைந்தது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சூரியகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
📡💥தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
புதுடெல்லி: தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் உரையாடினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன் என்றும் கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவை நிச்சயம் எடுப்பேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
📡💥நீட் சட்ட விரைவு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்: ராதாகிருஷ்ணன்
புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க சட்ட முன்வரைவில் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. நீட் சட்ட விரைவு தொடர்பாக 15 நிமிடங்களில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
📡💥நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரின் காவல் 2வது முறையாக நீட்டிப்பு
யாழ்ப்பாணம்: நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரின் காவலை 2வது முறையாக நீட்டித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஜூலை 22ம் தேதி தமிழக மீனவர்கள் 8 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இதனை அடுத்து தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.
📡💥சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது ராணுவ வீரர் இளையராஜாவின் உடல்
மதுரை : காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிவகங்கையை சேர்ந்த இளையராஜாவின் உடல் அவரது ஊர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கண்டனி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் இளையராஜா 19வது மகாரெஜிமெண்ட் படைப்பிரிவில் ராணுவ வீரராக செயல்பட்டு வந்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலின் போது உயிரிழந்த இளையராஜாவின் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் மதுரை விமான நிலையம் வந்தது.
📡💥ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பாகிஸ்தான் கொடி?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகில் பாகிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏறுபட்டுள்ளது. உளவுத்துறை, கடலோர பாதுகாப்பு அதிகாரில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடி குறித்து உரிமையாளரிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡💥ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை" - எடப்பாடி அணிக்கு அடுத்த செக் என்ன...?
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், விரைவில் அமைச்சர்களுக்கு மூக்கனாங்கயிறு போடப்படும் என தெரிவித்தார்.
📡💥அரசு மருத்துவமனையில் ஐந்து நட்சத்திர வசதி இருக்காது! : நிதின் கட்காரி
தனியார் மருத்துவமனைகளில் தரப்படும் அளவு வசதிகள் அரசு மருத்துவமனைகளால் தர முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
📡💥அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனே நீடிக்கிறார் : எம்.எல்.ஏ. சுந்தரராஜ் பேட்டி
மதுரை: டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த தீர்மானம் செல்லாது என தினகரன் ஆதரவு ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ. சுந்தரராஜ் கோவில்பட்டியில் பேட்டியளித்துள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனே நீடிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
📡💥இவங்களுக்கு நீட் தேர்வு தேவையாம்.. மருத்துவ கல்வி இயக்கம் முன் ஆர்ப்பாட்டம்
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி சென்னை மருத்துவ கல்வி இயக்ககம் முன் நீட் ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
📡💥எடப்பாடியை 420 எனக் கூற எனக்கு பயமில்லை" - டிடிவி தினகரன் அதிரடி!!
ஜெயலலிதா இருந்தபோது அமைதியாக இருந்தவர்களை இப்போது அடக்க ஆளில்லை என்றும் எடப்பாடியை 420 எனக்கூற எனக்கு பயமில்லை என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக கூறியுள்ளார்.
📡💥ஓசூர் அருகே வேனில் பெட்டி பெட்டியாக குட்கா கடத்தியவர்கள் கைது -
கிருஷ்ணகிரி: போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போதைப் பொருள் குட்காவை ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர். இருவரைக் கைது செய்தனர்.
📡💥தமிழக நிலை குறித்து பிரதமரிடம் விரிவாக பேசினோம்" - ஓபிஎஸ் பேட்டி!!
தமிழக அரசின் நிலையை விளக்கமாகவும், விரிவாகவும் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்தாகவும், அதிமுக அணிகள் இணைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
📡💥📡💥📡💥📡💥📡💥📡

Comments
Post a Comment