TSP DAILY NEWS 30.8.17
TSP NEWS
30.8.17
இன்றைய முக்கிய செய்திகள்
📡📺சரியாகச் செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படையுங்கள்'..மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை
சரியாகச் செயல்படாத அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைத்து நிர்வகிக்கலாம். அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாமே.. மத்திய அரசுக்கு நிதி ஆயோக் 'பகீர்' பரிந்துரை
டெல்லி: நாடு முழுவதும் சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📡📺சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதியுங்கள் - சிறைத்துறைக்கு நளினி மனு
வேலூர் : சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள நளினி சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார்.
📡📺ஒருவர் ஒரு இருப்பிடச் சான்று மட்டுமே வைத்திருக்க முடியும்: தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஒருவர் ஒரு இருப்பிடச் சான்று மட்டுமே வைத்திருக்க முடியும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
📡📺பாடம் கற்று கொள்ளுங்கள்: இந்தியாவுக்கு சீன ராணுவம் எச்சரிக்கை
பெய்ஜிங்: டோக்லாம் பிரச்னை மூலம் இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டும் என சீன ராணுவம் கூறியுள்ளது.இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்க, சீனா முயன்றது; இதற்கு, நம் படைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணிகளை நிறுத்தின. அதை தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இரு நாட்டு படைகளும், அங்கு குவிக்கப்பட்டன. இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த, எல்லை பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணும் வகையில், இரு நாடுகளும், படைகளை திரும்பப் பெறுவதென, முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி வியூ குயான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சீன ராணுவம் எப்போதும் போல், தனது எல்லை மற்றும் இறையாண்மையை தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கும்.
டோக்லாம் பிரச்னையிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன். ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, சீனாவுடன் இணைந்து செயலாற்றி எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இரு நாட்டு ராணுவம் உறவு வலுப்பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
📡📺மகாராஷ்ராவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் : பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்ராவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்ராவில் வெள்ளபாதிப்பு நிலை பற்றி முதல்வர் பட்னாவிஸிடம் தொலைபேசியில் பிரதமர் கேட்டறிந்தார்.
📡📺நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
சென்னை: தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
📡📺மேட்டூர் அணையின் நீர் திறப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து நீர் திறப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 17ம் தேதி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📡📺தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
டெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காவிரி , பவானி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
📡📺பான் கார்டுடன் ஆதார் எண்ணை உடனே இணைங்க... ஆகஸ்ட் 31 தான் கடைசி தேதிங்க!
டெல்லி: ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்டு 31ம் தேதியுடன் முடிவடைகிறது. காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
📡📺1000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டமில்லை : ரிசர்வ் வங்கி தகவல்
மும்பை: செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 1000 ரூபாய் நோட்டு குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரகர்க் விளக்கம் அளித்துள்ளார். 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை என சுபாஷ் சந்திரகர்க் தகவல் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment