TSP DAILY NEWS 29.8.17
TSP NEWS 29.8.17
இன்றைய முக்கியசெய்திகள்
📡📺பன்றி காய்ச்சலால் எம்எல்ஏ பலி...! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு...
பன்றி காய்ச்சலால் எம்எல்ஏ பலி
தற்போதைய சூழலில் செங்கு, பன்றி காய்ச்சல் வைரல் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் வெகுவாக பரவி வருகிறது. நாடு முழுவதுமே சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிகாய்ச்சலால் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
📡📺விழுப்புரம் அருகே ரூ.50 லட்சம் மோசடி : பெண்ணுக்கு போலீஸ் வலை
செஞ்சி: செஞ்சியில் வங்கிக் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு வலை வீசி தேடிவருகின்றனர். சிறுதொழில் தொடங்க வங்கியில் கடன் பெற்று தருவதாக 100 இளைஞர்களிடம் மோசடி செய்துள்ளார். தலைமறைவான மீனாட்சி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
📡📺நாஞ்சில் சம்பத்தை அடக்கி வையுங்கள்... தமிழிசை எச்சரிக்கை:
மதுரை: அரசியல் தலைவர்களை தரக் குரைவாக விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத்தை அவரது கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.
📡📺மும்பையில் ஜெர்மன் விசா கிடைக்காமல் 700 மாணவர்கள் அவதி!! சுஷ்மா தலையிட வலியுறுத்தல்
இந்தியாவை சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த கல்வியாண்டில் சேர முடியாமலும், மாணவர் சேர் க்கை ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
📡📺டோக்லாம்: படைகளைக் குறைத்தது இந்தியா. அதிகரிக்கிறது சீனா!
டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
📡📺மொபைல் வாலட்... 2022ம் ஆண்டில் ரூ.32 லட்சம் கோடியாக இருக்குமாம்!!!
புதுடில்லி : டிஜிட்டல் மயம் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப மொபைல் வாலட் பரிவர்த்தனை வரும் 2022ம் ஆண்டில் ரூ.32 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என டெலாய்ட்டி கணிப்பு வெளியிட்டுள்ளது.
📡📺30 பேரை பழி வாங்க காத்திருக்கு ஜெ. ஆன்மா..! பிரபல ஜோதிடரின் பகீர் வாக்குமூலம்..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை பற்றி பிரபல கேரள ஜோதிடர் வேங்கட சர்மா பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்
📡📺கர்நாடகாவில் கார் மற்றும் லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் அயனூர் என்ற பகுதியில் கார் மற்றும் லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡📺தஞ்சையில் விஷ வண்டு கடித்ததால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
தஞ்சை: தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் அருகே விஷ வண்டுகள் கடித்ததால் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். வண்டு கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக நார்த்தேவன்குடிக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📡📺போலி இருப்பிட சான்று விவகாரம்; வி.ஏ.ஓ., வட்டாட்சியரை தேடும் படலம் தொடக்கம்...!
கேரள மாணவர்களுக்கு, போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ. மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தேடும் படலம் தொடங்கியுள்ளது.
📡📺பஞ்சாப் மாநிலம் பர்னாலா பகுதியில் ஊரடங்கு உத்தரவு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பர்னாலா பகுதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாமியார் குர்மீத் ராம் ரஹூம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததாக பஞ்சாப் காவல்துறை அறிவித்துள்ளது.
📡📺செப். 12-ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடுகிறது
சென்னை: செப். 12-ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை. உரிமை குழு கூட்டம் இன்று கூடியது. இந்நிலையில் செப். 12-ல் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில், காலை 10.35 மணிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என இன்று அறிவிப்பு வெளியானது.
📡📺லண்டனில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்!
லண்டன்: லண்டனில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 3 பேரும் காஞ்சிபுரம் என்றும் தெரிய வந்துள்ளது.
📡📺அடித்து தூக்கும் எடப்பாடி கோஷ்டி! செயற்குழு, பொதுக்குழு 12 ஆம் தேதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
ஏட்டிக்கு போட்டியாக தினகரன் கோஷ்டியும், எடப்பாடி கோஷ்டியும், மாறி மாறி கட்சி நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்குவதும், அறிக்கைப்போர் நடத்துவதுமாக இவ்விரு அணிகளுக்கிடையே அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று பொது செயலாளரான சசிகலாவையும், துணை பொது செயலாளரான டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து முழுவதுமாக விலக்கி வைக்கப்போவதாக, இன்றைய எடப்பாடி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக, டிடிவி தினகரனோ பல அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளைப் பிடுங்கி, அதிரடி காட்டினார்.
அடுத்து டிடிவி தினகரன் என்ன செய்வார்? என்று தெரியாத நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்று பொதுக்குழுவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.
📡📺நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, விதிகளுக்குட்பட்டே நாங்கள் செயல்பட்டோம்: திமுக எம்.எல்.ஏ ரகுபதி
சென்னை: நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, விதிகளுக்குட்பட்டே நாங்கள் செயல்பட்டோம் என திமுக எம்.எல்.ஏ ரகுபதி தெரிவித்துள்ளார். குட்கா விற்பனை குறித்து முன்கூட்டியே தெரிவித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். குட்கா விவகாரத்தில் அவை உரிமை மீறல் எதுவும் நடைபெறவில்லை எனவும் எம்.எல்.ஏ ரகுபதி தெரிவித்துள்ளார்.
📡📺சோகமயமாக அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள் .. போட்டுத் தாக்கும் புகழேந்தி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் சோகமே வடிவாக காணப்பட்டது என்றும், 30 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
📡📺அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு - சசிகலா நீக்கப்படுவார்?
சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு செப்டம்பர் 12ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📡📺குட்கா விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களுக்கு சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
📡📺கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணிநேர விசாரணை நிறைவு
புதுடெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. தனியார் நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெற்றுத்தந்ததில் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
📡📺சாமியார் குர்மீத் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.30 லட்சம் அபராதம்: சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
📡📺முதலமைச்சர் பழனிசாமி- பொள்ளாச்சி ஜெயராமன் சந்திப்பு
சென்னை: உரிமைக்குழு கூட்டத்துக்கு பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்து பேசியுள்ளார். அவை உரிமைக் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
📡📺உரிமைக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
சென்னை: உரிமைக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 7 பேர் பங்கேற்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக உறுப்பினர்கள் 5 பேர், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பங்கேற்றார்.
📡📺டெல்லியில், கெஜ்ரிவாலுக்கு இன்னும் 'வாய்ஸ்' குறையவில்லை; இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரசை வீழ்த்தியது ஆம் ஆத்மி கட்சி
டெல்லியில் பா.ஜனதா கட்சிக்கு தாவிய எம்.எல்.ஏ. பதவி விலகியதால் நடந்த இடைத் தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், 24 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
📡📺செங்கோட்டையனின் அவைத்தலைவர் பதவியும் செல்லாது"- அடித்து கூறும் சி.ஆர்.சரஸ்வதி...!!!
தினகரன் நியமனம் செல்லாது என்றால், செங்கோட்டையனின் அவைத்தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனின் பொருளாளர் பதவியும் செல்லாது எனவும், காரணம் அவர்களை சசிகலாதான் நியமனம் செய்தார் எனவும் டிடிவி ஆதரவாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
📡📺தமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடக்கிறது... போட்டுத் தாக்கும் கி. வீரமணி!
ஈரோடு: தமிகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
📡📺📡📺📡📺📡📺📡📺📡

Comments
Post a Comment