TSP DAILY NEWS 27.8.17
🙏🏼TSP NEWS🙏
🌻27.8.17🌻
http://tnsocialpedia.blogspot.com
இன்றைய முக்கிய செய்திகள்..
📡📺சேலத்தில் நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளை
சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டையில் நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
📡📺சென்னை விமான நிலையத்தில் 1.65 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற 1.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான கழிவறையில் மறைத்து வைத்து கடத்த முயன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
📡📺அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக"; திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினகரன் உருவப்படத்தை எரித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
📡📺அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைத்தார்: பொன்.ராதா பேட்டி
டெல்லி: டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைத்தார் என்று அவர் கூறினார். மேலும் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி பாஜகவில் இணைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
📡📺கொறடா உத்தரவை மீறினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவர்' - ஹெச்.ராஜா
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறினால் ஒரு விநாடி கூட சட்டமன்ற உறுப்பினர்களாக நீடிக்க முடியாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
📡📺சசிகலாவை கைவிட்ட 'தாய்க்குலங்கள்'!
சென்னை : சசிகலா இருந்தவரை அவரை சுற்றி வந்த மூன்று தேவிகளில் ஒருவரின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளது உறுதியாகியுள்ளது.
📡📺திருவாரூர் தொகுதியில் பல இடங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகிறது: ஸ்டாலின் பேட்டி
திருவாரூர்: திருவாரூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். மேலும் திருவாரூர் தொகுதியில் பல இடங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
📡📺வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
வாழப்பாடி: வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, வௌளாள குண்டம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
📡📺சாமியாருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு உயர் பாதுகாப்பு!! உள்துறை உத்தரவு
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங்குக்கு உயர் பாதுகாப்பு அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
📡📺திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளிக்க சென்ற ராகுல் மற்றும் பிரதீப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡📺அதிமுகவில் நடைபெறுவது குடும்பச் சண்டை தான்: எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் பேட்டி
கரூர்: அதிமுகவில் நடைபெறுவது குடும்பச் சண்டை தான் என்றும் முதல்வருடன் அமர்ந்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கரூரில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் பேட்டி அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழநிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டி.டி.வி தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📡📺பல்லவன் விரைவு ரயில் பாதி வழியில் நிறுத்தம்
விழுப்புரம்: சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பெட்டியில், முன்பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் ஏறியதால் ரயிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பல்லவன் விரைவு ரயிலை நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிபட்டுள்ளனர்
📡📺சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்.. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
திருவாரூர்: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
📡📺திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திட்டம்: ஸ்டாலின் திடுக் தகவல்
திருவாரூர்: திமுக உறுப்பினர்கள் சிலரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு பலே திட்டம் வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
📡📺உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முருகன் பிடிவாதம்
வேலூர்: சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முருகன் தொடர் பிடிவாதம் பிடிக்கிறார் என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் உள்ள முருகனை பார்த்தபின் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு பேட்டி அளித்துள்ளார். 3 மாதங்களில் அணைத்து சிறைகளிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
📡📺காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 6 பேர் வீரமரணம்
ஸ்ரீநகர் : தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
📡📺வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.2 கோடி வசூலித்து டெல்லியில் பதுங்கி இருந்த இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார்.
📡📺மாணவர்களுக்கு சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு : செங்கோட்டையன்
கோபி: சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
📡📺கவர்னருடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாளை(ஆக.,27) சந்திப்பு
சென்னை: நாளை (ஆக.,27) காலை 10.30 மணிக்கு சந்திக்க தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு கவர்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து கவர்னரை சந்திக்க திமுக வினர் நேரம் கேட்டிருந்தனர். இதனையடுத்து இந்த சந்திப்பு நாளை நடக்கிறது. கவர்னரை துரைமுருகன், தலைமையில்,கனிமொழி எம்.பி., ஜே. அன்பழகன், ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர்.
📡📺வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி பாஜகவில் போய் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் கார்த்தியாயினி.
இப்போது எந்த கோஷ்டி பக்கம் போவது என்று தெரியாமல் குழம்பிப் போய் பாஜகவில் இணைந்து விட்டார்.
📡📺சட்டசபையை கூட்டுவார்.. ஜனநாயகத்தை ஆளுநர் பாதுகாப்பார் . .மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் சட்டப்பேரவையை கூட்டி ஜனநாயகத்தை பாதுகாப்பார் என தான் நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
📡📺பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது, இந்த நாட்டிற்கே பிரதமர்.. சீறிய ஹரியானா ஹைகோர்ட்
டெல்லி: மோடி பாஜகவுக்கு மட்டும் பிரதமர் கிடையாது, இந்தியாவுக்கே பிரதமர் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளது
📡📺உலக சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கலம் வென்றார் சாய்னா நேவால்
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமியிடன் சாய்னா நேவால் போராடி தோல்வியுற்றார். 21-12, 17-21, 10 - 21 என்ற செட் கணக்கில் நசோமி ஓகுஹராவிடம் தோல்வி அடைந்தார். இந்த சாய்னா நேவாலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
📡📺மொட்டை கடிதத்தால்' சிக்கிக் கொண்ட சாமியார் குர்மீத் சிங்ஆசிரம பாதள அறையில் காதல் லீலைகள் நடத்தியது அம்பலம்.ஏராளமான பெண் சீடர்களை சீரழித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் சிங், தனது பெண் சீடர் ஒருவர் எழுதிய மொட்டை கடிதத்தால் சிக்கிக் கொண்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

Comments
Post a Comment