TSP DAILY NEWS 17.8.17
🙏🏼TSP NEWS🙏🏼
🙏🏼17.8.17 🙏🏼
இன்றைய முக்கிய செய்திகள்...
*📡தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.*
*📡 ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.*
*📡ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.*
👉🏼 சென்னையில் நாளை ஆக., 18 ஓ.பி.எஸ் ணி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
📡📻விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும்: ராஜ்நாத் சிங்
லக்னோ:2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என மோடி வாக்குறுதி அளித்துள்ளதாக, உ.பி.யில் நடைபெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டினார்.
📡📻ஜெ வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை" - கடிந்து கொள்ளும் வெற்றிவேல் எம்.எல்.ஏ ...!!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என டிடிவி ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
📡📻பெட்ரோல் பங்குகளில் எல்இடி பல்பு, ஃபேன் விற்பனை!
மின்சாரத்தை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய சூழல் இருப்பதால் மின்சாரத்தைக் குறைவாக நுகரும் எல்இடி பல்பு மற்றும் ஃபேன் ஆகியவற்றின் விற்பனையை அரசே முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.
📡📻கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த 10 வயது சிறுமிக்கு பிறந்தது பெண் குழந்தை
சண்டிகர்: பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. அந்தச் சிறுமிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது.
📡📻நாளை சசிகலா பிறந்த நாள்...! இன்று ஜெ.மரணம் குறித்து "விசாரணை கமிஷன்" - டைமிங் அறிவிப்பா ?
பரபரப்புக்கு புகழ் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்பு செய்தி வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.
📡📻பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இனி பத்து நாட்களுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
📡📻ரயில்வே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியரிடம் விசாரணை
மதுரை ரயில்வே பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
📡📻கோராக்பூரில் மேலும் 34 குழந்தைகள் பலி
கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் கடந்த 3 தினங்களில் மேலும் 34 குழந்தைகள் இறந்துள்ளனர்.
📡📻தேனியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - பறிமுதல்
தேனி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் 1400 கிலோ அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட இருந்தது தெரிந்தது. அதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📡📻டிடிவி கேட்டதாலேயே விசாரணை கமிஷன்" - புகழேந்தி பரபரப்பு தகவல்...!!!
டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதையடுத்தே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
📡📻வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத மோடி அரசு' - ராகுல் காந்தி கடும் தாக்கு
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் தனது வாக்குகுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி, மக்கள் விரும்புவது ‘‘உண்மையான இந்தியா’’ என்று கூறினார்.
📡📻முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
📡📻கருத்து வேற்றுமைகளை மறக்க வேண்டும்" - தம்பிதுரை வேண்டுகோள்...!!!
கருத்து வேற்றுமைகளை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கட்சியை சிறப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
📡📻கால்பந்தில் களமிறங்குகிறார் உசேன் போல்ட்!
லண்டன்: தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள, மின்னல் வீரர், உசேன் போல்ட், கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். உலகப் புகழ்பெற்ற, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
📡📻தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.
📡📻பாலக்காடு கலெக்டர் மாற்றம் வழக்கமான நடைமுறையே... பினராயி விஜயன் விளக்கம்
திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி இடம் மாற்றப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
📡📻காதலுக்கு வயது தடை இல்லை. - பேரன் பேத்திகளுடன் திருமணம் செய்த தாத்தா, பாட்டி
சத்தீஸ்கர் மாநிலத்தில், 70 வயதை கடந்த ஆணும், பெண்ணும் தங்கள் பேரன், பேத்திகளின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர்.
📡📻நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டும் நடத்துவேன்: வைகோ எச்சரிக்கை
அதிமுகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டையைப் பார்த்து இந்தியாவே சிரிக்கிறது என்று வைகோ கூறியுள்ளார். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை மாணவர்களை திரட்டி போராட்டும் நடத்துவேன் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
📡📻ஓபிஎஸ், ஈபிஸ் அணிகள் உடனடியாக இணையும்.. எச். ராஜா டுவிட்டர் பதிவு
சென்னை: ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் விரைவில் இணைந்துவிடும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
📡📻சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுப்பேட்டை., சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சூளைமேடு, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Comments
Post a Comment