TNPTF - ஆகஸ்ட் 2- இயக்க நாள் வரலாறு : பதிவு செல்வ.ரஞ்சித்
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/08/tnptf-34.html?m=0
💪🏼 *தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* 👍🏼
*ஆகஸ்ட் - 2*
*TNPTFன் 34-வது இயக்க நாள்*
கற்பிக்கும் நாம்
கற்க வேண்டிய
கடந்த கால
கள வரலாறு!
இயங்காத எதுவும்
இயக்கம் அல்லவே! - இது
இயக்க வரலாறல்ல,
இயங்கிய வரலாறு!
நமக்காக நம்முன்னோர்
நேற்றுவரை இயங்கியபடி
நாளைய நம்மவர்க்காய்
நாமும் தொடர்ந்திட,
நினைவூட்டலாய் இப்பதிவு!
✍🏼*பகிர்வு: செல்வ.ரஞ்சித்குமார்*
கேரளத்தின் மலபார், கர்நாடகத்தின் மங்களுர், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், தமிழகத்தின் 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய *சென்னை இராஜதானியில் முதன் முதலில் மலபாரில் தான் ஆசிரியர் சங்கம்* உதயமானது.
கோழிக்கோடு, வளநாடு, பொன்னாஜி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் பகுதிவாரியாகவும், தாலுகா அளவிலும் *அகில மலபார் உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கம் 1936-ல்* வடகரையில் உருவாக்கப்பட்டது.
ஆரம்பப்பள்ளி முதல் கல்லுரி வரை பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட சங்கமாக *தென்னிந்திய ஆசிரியர் சங்கம்* செயல்படத் தொடங்கியது. SITU(South Indian Teachers' Union) அமைப்பில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதன்மையாக்கப்படவில்லை. சங்க பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை.
_இந்தியா விடுதலை பெற வேண்டும் அன்னிய ஆட்சி அகற்றப்பட வேண்டும், என்ற தீர்மானத்தை நிறைவேற்ற அன்றைய தலைமை மறுத்து வெளிநடப்பு_ செய்த சமயத்தில் *மாஸ்டர் இராமுண்ணி தலைமைப் பொறுப்பை ஏற்று* அத்தீர்மானத்தை நிறைவேற்றினார்.
*1946-ல்* பெல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில் ஈ.எம்.சுப்பிரமணியம் தலைவராகவும் வா.இராமுண்ணி பொதுச்செயலாளராகவும் கொண்ட *சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்* என்னும் புதிய சங்கம் அமைக்கப்பட்டது.
அம்மாநாட்டில்,
★ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, ரூ.18, ரூ.50
★ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் அல்லாது *மாதந்தோறும் ஊதியம் வழங்க* வேண்டும்
என்னும் கோரிக்கைகளுடன் *வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு* அறைகூவல் விடப்பட்டது.
🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩
*மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் :*
மாஸ்டர் இராமுண்ணி தலைமையில் 13.01.1947 அன்று மிதிவண்டி பிரச்சாரப்பயணமாக கோழிக்கோட்டிலிருந்து 19 ஆசிரியர்கள் பயணம் மேற்கொண்டு பாலக்காடு, கோவை, சேலம், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 30.01.1947 அன்று சென்னையை அடைந்து முதல்வர் பிரகாசத்திடம் மாநாட்டுத் தீர்மானங்களை அளித்தனர்.
*1949ல் சென்னை இராஜதானியின் தலை நகரான சென்னையில் முதல் மாநாடு* நடத்தப்பட்டது. அது முதல் மாஸ்டர் சென்னையில் குடியேறி பொதுச்செயலாளர் பணியை ஆற்றினார்.
*1952-ல்* முதல்வர் இராஜாஜியின் *குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து* சென்னையில் நடைபெற்ற 2ம் மாநில மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
தஞ்சையில் இராமையாத்தேவர், சேலத்தில் ராமசாமி ரெட்டியார் தலைமையில் 2-வது மதிவண்டிப் பேரணி நடத்தப்பட்டு அது சென்னையை அடைந்தது.
*1956-ல்* மொழி வழி மாநிலங்கள் உருவானதால் சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளம் என்பது *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
*1979-ல்* உள்ளாட்சி நிறுவனங்களின்
★அதிகாரத் தலையீடு
★அதிகாரத் துஷ்பிரயோகம்
★விதி மீறல்கள்
★ஓய்வூதியம்
உள்ளிட்ட சலுகைகளுக்காக மறியல் போராட்டம்.
*1981-ல்* ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களை *அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி* நடைபெற்ற *மறியல்* போராட்டம்.
*1983-ல்* கல்வியல்லாத *பிற பணிகளிலிருந்து விடுவிக்க* நடைபெற்ற *மறியல்* போராட்டம்
போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஈடுபடுத்திச் சிறை சென்று குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பலன்களையும் பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர்கள் நமது இயக்க முன்னோடிகள்.
1936 முதல் 1984 வரை உள்ள 48 ஆண்டுகளின் வரலாறும் படிப்பினைகளும் நமது முன்னவர்தம் உழைப்பும் தியாகமும் இணைந்ததாகும்.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) உதயம்:*
இராமேஸ்வரத்தில் நடந்த மாநிலத் தேர்தலுக்குப்பின் எதேச்சதிகாரத் தலைமை, கிளை உறுப்பினரை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை 05.02.1984ல் முன் வைத்தது. அதனை எதிரத்து 9 மாவட்டச் செயலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1984 மே மாதத்தில் மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழுவில் அடிதடி ஏற்பட்டது.
_ஏகாதிபத்திய எதிர்ப்பும், நாட்டு நலனில் அக்கறையும் கொண்ட இலட்சியத்தோடு தொடங்கப்பட்ட அமைப்பு இடைக்காலத்தில் திசைமாறிப்போனது._
02.08.1984ல் 9 மாவட்டச் செயலாளர்களை டிஸ்மிஸ் செய்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
சங்க ஜனநாயகம் கேள்விக்குறியாக, சுயநலம், துரோகத்தன்மை, சந்தர்ப்பவாதம் கொண்ட தலைமையிடமிருந்து வெளியேறி,
(அவர்களிடையே இன்றுவரை உள்ளது போன்றே அன்றும்) அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் & உயர் அலுவலர்களுக்கு விசுவாசும் உள்ளவர்களாக மாறி உறுப்பினர்களின் நலன்களை அடகு வைப்பதும், சங்க அங்கீகாரம் பெறுவதும் அதைப் பாதுகாப்பதுமாக மாறிய போலித் தலைமையைத் துக்கி எறிந்து புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது.
*சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெரு கனகவேல் திருமண மண்படத்தில் வீரம் செறிந்த இயக்கமாக, ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் உறுதியோடு தொடர்ந்து போராடும் ஒரு உன்னத அமைப்பாக 02.08.1984-ல் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவாக்கப்பட்டது.*
அரசின் அங்கீகாரம் ஒன்றே பிரதானம் என்பதைத் தகர்த்து கூட்டமைப்புகளுக்கு அது அவசியம் இல்லை என்று மாற்றியமைத்து,
★ஜாக்சாட்டோ
★ஜாக்டா
★ஜேக்டீ
★அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு
★டிட்டோஜாக்
★ஜாக்டோஜியோ
★ஜாக்டோ
★ஜியோ
★கோட்டாஜியோ
போன்ற கூட்டமைப்புகளை நமது முன் முயற்சிகளின் காரணமாக உருவாக்கி, *மத்திய அரசுக்கு இணையான ஊதியம்* உள்ளிட்ட பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
*முதல் மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
1970 முதல் 1985 வரை ஏற்பட்டிருந்த பொருளாதார இழப்புகளைச்சுட்டிக்காட்டி முதல் மாநாட்டை *05.05.1985-ல்* சென்னையில் நடத்தினோம். இழப்புகளை மீட்க இயக்கங்களின் மகத்தான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என அம்மாநாட்டில் அறைகூவல் விடப்பட்டது.
*4-வது ஊதியக்குழுவில் வெறும் 7% மட்டும் ஊதிய உயர்வு* அறிவிக்கப்பட்ட போது நாம் *11.07.1985 அன்று சென்னையில் 5000 பேர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்* நடத்தியதன் விளைவாக தொடக்க நிலையில் இருந்த மூன்று சங்கங்கள் இணைந்து *ஜாக்டோ உதயமாகியது.*
ஜாக்டோ என்னும் சிறு தீ காட்டுத் தீயாக மாறி *ஜாக்டீ* என்னும் பதாகையின் கீழ் வேலை நிறுத்தம், மறியல் என *3.11.1985-ல் அரசாணை எதிர்ப்புப் போராட்டம்* வரை நடத்தப்பட்டது.
*கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் என 10000-க்கும் மேற்பட்ட பெண்* ஆசிரியர்கள் உள்ளிட்ட *65000 ஆசிரியர்கள் தீபாவளித் திருநாளிலும் சிறையில் அடைக்கப்பட்டனர்.*
*40 நாட்கள்* சிறையில் அடைத்தும், அன்றைய முதல்வர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என மிரட்டியும் பணியவைக்க முயன்றார்.
இறுதியில் வரலாறு காணாத எழுச்சியின் காரணமாக அரசு பணிந்தது.
இவ்வீரம் செறிந்த வேலை நிறுத்தத்தில், *தாய் இயக்கம் என்றும் பேரியக்கம்* என்றும் கூறிக்கொள்பவர்கள் அவர்களின் இயல்பான குணங்களின் காரணமாக *இடையில் வந்து இணைந்து* போராட்டத்திலிருந்து *பிரிந்து போன வரலாற்றுக் கறுப்பு நிகழ்வுகளும்* நடந்தது.
*இரண்டாம் மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
மத்திய அரசின் 4-ஆம் ஊதியக்குழு அறிவிப்பு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்களிடயே ஏற்பட்டது.
*5-6.03.1988* தேதிகளில் *மதுரையில்* நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் *2ஆம் மாநில மாநாடு மத்திய அரசிற்கு இணையான ஊதியம்* வேண்டும் என்ற கோரிக்கையை பிரகடனப்படுத்தி ஆசிரியர் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைத்தது.
இக்கோரிக்கையை அடைய அரசு ஊழியர்களும் இணைந்த பரந்துவிரிந்த ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்தி
*ஜேக்டீ* - அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டு மகத்தான *வேலைநிறுத்தம்* 22.06.1988 முதல் 23.07.1988 வரை *31 நாட்கள்* நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தனிப்பெரும் முதல் சக்தியாக நாம் பங்கேற்று உருக்கு போன்ற போராட்டக் குணத்தை நிலைநாட்டினோம்.
அன்றைய *ஆளுனர் திரு.அலெக்சாண்டர்* அவர்களால் இக்கோரிக்கைகள் *கொள்கை அடிப்படையில் ஏற்கப்பட்டு* அதை நடைமுறைப்படுத்த *5-ம் ஊதிக்குழு அமைக்கப்பட்டது.*
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோரிக்கை 05.06.1989 அன்று 5ம் ஊதியக்குழுவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு *01.06.1988 முதல் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்டது.*
இவ்வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் *ரூ.70-க்கும்* மருத்துவப்படி *ரூ.15க்கும்* துரோக ஒப்பந்தத்தில் *கையெழுத்திட்டு இடையில் போராட்டத்திற்கு வந்து இடையில் ஓடிய துரோகிகளும் உண்டு.*
*மூன்றாம் மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
நாட்டின் சுதந்திரம் தேசிய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட, கல்விக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக உருவாக்கப்பட கல்விக்கு மத்திய அரசு 10%, மாநில அரசு 30% நிதி ஒதுக்கிட வேண்டும் என வலியுறுத்தி *21, 22 மார்ச் 1992* தேதிகளில் மூன்றாம் மாநில மாநாடு *சென்னையில்* நடைபெற்றது. *முதன் முதலாக பெண் ஆசிரியர் மாநாடும்* அம்மாநாட்டில் *நடத்தப்பட்டது.*
*நான்காம் மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் தனியார் மயம், தாராளமமயம், உலகமயம் என்னும் பெயரில் *பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஆபத்து* அதிகரித்து வந்தது.
மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசின் கல்விக் கொள்கையின் மாற்றம் என்னும் ஆபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் தங்களது கொடிய பாதங்களைக் கால்பதிக்கத் துவங்கின.
1964 முதல் நடைமுறையில் இருந்து வந்த *ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 என்பது 1:40 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது.*
இவைகளை *எதிர்க்க* வலியுறுத்தி அறைகூவல் செயற்திட்டங்களை வகுத்துக் கொடுத்த மாநாடு தான் *சென்னையில் 3, 4 மே-1998-ல்* நடைபெற்ற நான்காம் மாநில மாநாடு.
*ஐந்தாம் மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
★பொதுக்கல்வியைப் பாதுகாப்பது - பலப்படுத்துவது
★ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
★சமவேலைக்கு சம ஊதியம் என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக இயற்கை நியதி மற்றும் சமுகநீதிக்கு முரணாக அமுல்படுத்தி வரும் *தொகுப்பு ஊதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கிட* வேண்டும்.
★கற்பித்தல் பணி சாராத பிற பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
★வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் *எஸ்மா டெஸ்மா* சட்டங்கள் *திரும்பப் பெற* வேண்டும்.
★போராடிப் பெற்ற போனஸ்,
★சரண்டர் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,
★ஓய்வு காலச் சலுகைகள்
★கருணை அடிப்படை நியமனம்
உள்ளிட்ட *பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த* வேண்டும்
★மத்திய அரசின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது போல் *50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து* தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் - அரசு ஊழியர்களுக்கும் *வழங்க* வேண்டும் என வலியுறுத்தி
5-ம் மாநில மாநாடு *கோவையில் 2005 மே 4, 5, 6* தேதிகளில் நடைபெற்றது.
இக்கோரிக்கைகள் மீதான பல உரிமைகளை நாம் மீட்டெடுத்தது நீங்கள் அறிந்ததே.
*6-வது மாநில மாநாடு*
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
★இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம்
★CPS ஒழிப்பு
★தமிழ்வழிக் கல்வி மீட்பு
★அரசுப்பள்ளி பாதுகாப்பு
★கல்வியை வணிகம் & காவிமயமாக்கும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு
உள்ளிட்ட கோரிக்கைகளை பிரகடனப்படுத்தி *30.1.16 -முதல் 1.2.16 வரை கோவில்பட்டியில்* 6-வது மாநில மாநாடு நடந்தது.
_இப்பிரகடனத்தைச் செயலாக்க_
_இயன்றவரை மற்றவர்களுடனோ_
_இல்லையேல் இறுதிவரைத்_
_தனியொரு படையாய்ப்_
_போர்க்களம் நோக்கி_
_படையெடுக்கத் தயார்_
எனம் உறுதியுடன் ஜேக்டா-வை மீண்டும் உருவாக்கி இறுதிவரை, கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துச் சென்றோம்.
ஆனால், ஆசிரியர்களின் உரிமை வேட்கையை மதிக்காது, ஆளும் தரப்பை எதிர்க்கத் துணிவின்றி, எதிர்த்தரப்பு எறிவேன் என்ற துணிக்கைகளுக்கு இச்சித்து, தம்மை நம்பியுள்ள இயக்க உறுப்பினர்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்பட்ட ஜேக்டோ உறுப்பு இயக்கங்களின் உறுப்பினர் விரோதப் போக்கை இனியும் சகிக்க இயலாது என்ற சூழலில்,
போராட்டத் தீ பற்றி எரிய வேண்டிய காலத்தில் கதவடைத்து உறங்கும் எரிமலையாகச் செயல்படாது கனல் கக்கும் எரிமலையாக *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்* நடத்தி வந்த *காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 15.02.2016-ல்* உடன் கரம் கோர்த்தோம்.
21.2.2016 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால்,
★ பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்த வல்லுநர் குழு அமைத்தல்
★ இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் 7-வது ஊதியக்குழுவில் சரிசெய்யப்படும்
என்ற உறுதியினை, சக இயக்கங்கள் உடன் இயங்க அஞ்சிய, ஆளும் தரப்பிடம் இருந்து பெற்றோம்.
💪🏽 *கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு* 👍🏼
மத்திய அரசின் *புதிய கல்விக்கொள்கை 2016* உருவாக்கத்தில் உள்ள மாநில உரிமைப் பறிப்பு, தனியார் மயம், சமசுகிருதத் திணிப்பு, வகுப்புவாதம் உள்ளிட்ட *அபாயங்களைத் தடுத்து நிறுத்திட*
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டியக்கம் 25-ற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர், கல்விச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி *கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு* – *தமிழ்நாடு* எனும் பெயரில் *24.07.2016-ல்,*
ஒருங்கிணைப்புக் குழு *ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பேரா.நா.மணி* & *நிதிக் காப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்லைவர் ச.மோசஸ்* அவர்கள் செயல்படுவது என்றும் முடிவாற்றி உருவாக்கப்பட்டு *30.7.2016-ல்* சென்னையில் *மாநில அளவிலான கருத்தரங்கம்* நடத்தப்பட்டது.
மத்திய அரசு இதற்குச் செவிமடுக்காவிடில் இவ்வபாயம் தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பிக்கும் பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
*சிவகங்கை மாநிலச் செயற்குழு நகர்வுகள்:*
பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துக. . .
6-வது ஊதியக்குழு இழப்பைச் சரிசெய்து 7-வது ஊதியக்குழுவை அமைத்திடுக. . .
கல்விசார் அமைப்புகளைக் கலந்தாலோசித்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்திடுக. . . உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
04.11.2016:
*கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்*
20.11.2016:
*மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்*
28.12.2016:
*சென்னையில் தொடர் முழக்க போராட்டம்*
நடத்தப்பட்டது. சென்னை தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் பங்கேற்கச் செய்தோம்.
*தைப்புரட்சியில் த.நா.ஆ.ப.ஆ.கூ*
மண்ணின் மாண்பையும், மாடுகளின் வாழ்வையும் காத்து தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த சனவரி 2017-ல் மதுரை அவனியாபுரத்தில் பற்றிய தீ சென்னை மெரினாவை புதிய வரலாற்றுச் சரித்திரம் படைக்கும் களமாக மாற்றிய தைப்புரட்சி எனும் சல்லிக்கட்டு போராட்டத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துக் களங்களிலும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தொடர்ந்து கலந்து கொண்டனர்.
*கொரில்லாப் போர் பாணியிலான சென்னை முற்றுகை :*
*இடைநிலை ஆசிரியர் ஊதியம், ஓய்வூதியம்* உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, *2017 பிப்ரவரி 3-ல் இயக்குநரகத்தை முற்றுகை*யிடத் துணிந்து களமிறங்கியது போராளிப் பாசறையின் போர்ப்படை. முந்திய தினமே மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்த தமிழகக் காவல் துறையின் கணிப்பையும் மீறி மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.பாலச்சந்தர் அவர்களின் தலைமையில் பதுங்கியிருந்து பாய்ந்து முற்றுகையிட்டது தோழர்களின் ஒரு அணி.
அங்கங்கு தனித்தனியே கைது செய்யப்பட்டு தனித்த இடங்களில் சிறைவைக்கப்பட்ட தோழர்கள் அப்பகுதியினையும் முற்றுகையிட்டு தொடர்போராட்டங்களை மேற்கொள்ள இயக்குநரக முற்றுகை சென்னை முற்றுகையாக மாறியது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு அனைவரையும் இறுதியாக ராசரத்தினம் விளையாட்டரங்கில் சங்கமிக்கச் செய்தது.
அதன்பின்னர் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் (தான் பொறுப்பேற்றபின் முதல்முறையாக) & இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை விரைந்து முடிக்க ஆவணம் செய்வதாக ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்பின்னர் நிகழ்ந்த எதிர்பாராத அரசியல் திருப்பங்களால் மீண்டும் கோரிக்கையின் கவனத்தை ஆட்சி & அதிகாரத்தை ஏற்ற புதியவர்களின் கவனத்திற்கு இட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
*மதுரை மாநிலச் செயற்குழு நகர்வுகள்*
பிப்ரவரி-03 இயக்குநரக முற்றுகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்தாததை அடுத்து *10.5.17-ற்குப்பின்* 6 பெண் நிர்வாகிகள் உட்பட 19 மாநில நிர்வாகிகள் *இயக்குநரக வாயிலில் காத்திருப்புப் போராட்டம்.*
அதே நாளில் அனைத்து *மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலக*த்தில் மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் *காத்திருப்புப் போராட்டம்.*
*தமிழக விவசாயி*கள் நலனை முன்னிட்டு *25.4.17*-ல் நடைபெறும் *முழு அடைப்பிற்கு ஆதரவு* தெரிவிப்பதோடு அன்று நடைபெறும் *போராட்டங்களில்* இயக்க உறுப்பினர்களும் திரளாகக் *கலந்து கொள்ளுதல்.*
*25.4.17 முதலான TNGEA*-யின் *காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட*த்திற்கு முழு *ஆதரவு* தெரிவிப்பதோடு, அதற்காக *STFI 27.4.17-ல்* அறிவித்துள்ள *மாவட்டத் தலைநகர ஆதரவு ஆர்ப்பாட்டங்களை* வெற்றிகரமாக நடத்துதல்.
*நீட் தேர்வை எதிர்த்து கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு* சார்பில் *5.5.17-ல் சென்னை*யில் நடைபெறும் *தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில்* மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுடன் அருகாமை மாவட்ட இயக்க உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட இயக்க நகர்வுகளை நடத்தி முடித்தது.
*STFI போராட்டம் :*
இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண் ஊதியக்குழுவில் சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தும், ஊதியக்குழு நடைமுறைப்படுத்தலுக்கான காலம் தள்ளிப் போன நிலையில், ஊதியம், ஓய்வூதியம், சிறப்பாசிரியர்கள் நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து STFI *22.7.17-ல் மாவட்டத் தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* நடத்தத் தீர்மானித்து கள வேலைகளும் நடைபெற்றன. இந்நிலையில் 2003-ற்குப் பின் JACTTO-GEO அமைப்பு கூட்டுப்போராட்டத்தை அறிவிக்கவே அதைச் செறிவூட்டும் நோக்கில் நமது போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
*JACTTO-GEO 2017:*
ஜுன் மாதத்தின் இறுதியில் JACTTO-GEO அமைக்க வந்த அழைப்பை ஏற்று நமது இயக்கமும் அதில் இணைந்து, முரண்பாடு நீங்கிய ஊதியக்குழு நடைமுறைப்படுத்தல் இல்லையேல் 20% இடைக்கால நிவாரணம், CPS ஒழிப்பு முதலியவற்றை வழியுறுத்தி 18.7.2017-ல் மாவட்டத் தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நடைபெற்ற JACTTO-GEO மாநில அமைப்புக் கூட்டத்தில் இக்கூட்டுப் போராட்டத்தை CPSஐ முற்றாக நீக்கும் வரை தொடரவேண்டும் என்ற தீர்க்கமான தீர்மானத்தை நமது மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்கள் முன்மொழிந்து தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி,
ஆகஸ்ட் 22-ல் அடையாள வேலைநிறுத்தம்
செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம்
என்னும் JCTTO-GEO-வின் போராட்ட முன்மொழிவுகளில் களத்தை ஆயத்தப்படுத்தும் பணிகளில் நமது இயக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
*கல்வி, மாணவர், ஆசிரியர் & தேச நலனுக்காகத் தொடர்ந்து இயங்கும் இயக்கமாக,*
*தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* என்றும் உள்ளது.
இயங்கும் இயக்கத்தோடு,
ஒன்றுபடுவோம்❗
போராடுவோம்‼
வெற்றி பெறுவோம்❗❗❗

Comments
Post a Comment