IAS/IPS - இலவச பயிற்சி
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது-ஞா. சக்திவேல் முருகன்
sponsored link click here
`ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன?' என்பது, நம்மில் பலரிடம் எழும் கேள்வி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எந்தப் பயிற்சி மையமாவது தன்னை வழிநடத்தாதா என ஏங்குவோர் பலர். இவர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் துணைபுரிகிறது. இங்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் ஆறு மாதம் இலவசப் பயிற்சி பெறலாம்.
அடுத்த ஆண்டு (2018-ம் ஆண்டில்) நடக்கவிருக்கும் குடிமைப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வுகான (Preliminary Examination - 2018) இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. சென்னையில் தங்கி படிக்கும் வகையில், 225 பேரையும், பகுதி நேரமாக தினமும் மாலை நேர வகுப்பில் கலந்துக்கொள்ளும் வகையில் 100 பேரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்கள். பயிற்சிபெற விரும்புபவர்கள், இணையதளம் வழியாகவோ (www. civilservicecoaching.com) அல்லது நேரிலோ விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படுவதற்குக் கடைசி நாள், 20.09.2017.
பட்டப்படிப்பை முடித்த 21 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், ஐந்து வருடங்களும், இதரப் பிரிவினருக்கு மூன்று வருடங்களும் வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, வயது வரம்பில் பத்து ஆண்டுகள் விலக்கு உள்ளது. இங்கு ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றப்படுவதால், அதற்கு உரிய சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னையில் இருப்பவர்கள், கீரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னை தவிர இதர மாவட்டங்களில் இருப்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பம் பெற விரும்புவோர் நேரில் விண்ணப்பிக்கவேண்டிய அவசியமில்லை.
இணையதளத்தில் 20.10.2017 அன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். நுழைவுத் தேர்வு, நவம்பர் 5 -ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை, சென்னை, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும். இந்தத் தேர்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய வளர்ச்சி மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், அன்றாட நிகழ்வுகள் மற்றும் பொதுப் பிரச்னைகள், சுற்றுப்புறச் சூழலியல், பல்லூயிர்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். இதன் முடிவுகள், 15.11.2017 அன்று அறிவிக்கப்படும்.
விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு 1,000 ரூபாயும், பகுதி நேரமாகப் படிப்பவர்களுக்கு 3,000 ரூபாயும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கிப் படிப்பவர்களுக்கு, இலவச தங்கும் வசதியுடன் உணவும் வழங்கப்படும். இவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வகுப்பு நடைபெறும். பகுதி நேரத்தில் படிப்பவர்களுக்கு, தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். விடுமுறை நாளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
இங்கு, ஏசி வகுப்பறைகள், நூலகம், விவாத அறைகள், கம்ப்யூட்டர் வசதி, வைஃபை வசதி என, ஏராளமான வசதிகள் இருக்கின்றன; 25-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். தற்போதைய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிப்பதுடன், குழு விவாதத்திலும் பங்குகொள்கிறார்கள். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகையுடன் மூன்று மாதகாலப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு, டெல்லியில் தங்கும் வசதியும் போக்குவரத்து தொகையும் வழங்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சிமையத்தில், தற்போது பள்ளிக்கல்வி துறைச் செயலராக இருக்கும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் முதல், திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக இருக்கும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ் வரை ஏராளமானோர் படித்து தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். நாளை நீங்களும் இதுபோன்ற பதவியை அலங்கரிக்கலாம் என்பதால் , இப்போதே விண்ணப்பம் செய்யுங்கள் .. வென்றிடுங்கள்! வாழ்த்துகள்.
(நன்றி: விகடன்)
வாழ்த்துகள் நண்பர்களே 💐💐💐

Comments
Post a Comment