காத்திருந்த அன்புமணி
விவாதத்திற்காக காத்திருந்த அன்புமணி, புறக்கணித்த அமைச்சா்
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்த ராஜா அண்ணாமலை புரத்தில் அன்புமணி காத்திருந்த நிலையில் விவாத நிகழ்ச்சியை புறக்கணித்தாா் அமைச்சா்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் குறைகள் உள்ளதாக பா.ம.க. இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தாா். இதற்கு பதில் அளித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் துறை மீது குறை கூறுபவா்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்த தயாரா என்று சாவல் விடுத்தாா்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட அன்புமணி 12ம் தேதி விவாதம் நடத்த வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தாா். இந்த நிலையில் விவாதத்திற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமைச்சருக்கான நாற்காலி அமைக்கப்பட்டு அதில் அமைச்சாின் பெயா் ஒட்டப்பட்டிருந்தது.
ஆனால் அமைச்சா் வராததால் விவாதம் நடைபெற வில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பு முழுவதிற்கும் 1 ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஆனால் சிபிஎஸ்இயில் ஒரு வகுப்புக்கு 3 ஆசிரியர்கள் உள்ளனர்.
கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்துள்ளனர், ஆனால் இந்த விபத்திற்கு காரணமான அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு பதிலாக டாஸ்மாக் கடையை மூடினால் அதனை திறக்க மேல்முறையீடு செய்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.
இது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அன்புமணி, எந்த விஷயமானாலும் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். தலித் பிரச்சினைகளில் நாங்கள் எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கான தெளிவைத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றும் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்

Comments
Post a Comment