ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வியையும், கிண்டலையும் தெரிவித்துள்ளார். தனது பதிவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பின் 99 சதவிகித நோட்டுகள் சட்டப்படி மாற்றப்பட்டது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரியவந்துள்ள நிலையில் அந்த திட்டம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவிய திட்டமா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை கண்டு பிடிப்பதற்கு 21 ஆயிரம் கோடி செலவழித்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆலோசனை கூறிய நிபுணருக்கு நிச்சயம் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேலி செய்துள்ளார்.

Comments
Post a Comment