கவர்னர் ஆலொசனை ; ஆட்சி கவிழுமா..?
*♏🌕🌕முதல்வர் எடப்பாடிக்கு எதிராக 19 பேர் வாபஸ் கடிதம் கொடுத்ததால்: உள்துறை அமைச்சருடன் கவர்னர் நாளை சந்திப்பு*
சென்னை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக கவர்னர் நாளை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழக சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்யலாமா?
என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்ததால், தினகரன் அணி எம்எல்ஏக்கள் 19 பேர் அதிருப்தி அடைந்தனர்.
ஊழல் அரசு என்று விமர்சனம் செய்தவருடன் கூட்டணி அமைத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளதை ஏற்கவில்லை என்று கூறி நேற்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து 19 எம்எல்ஏக்களும், முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் வாங்குகிறோம் என்று கடிதம் கொடுத்தனர்.
தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி அரசு 124 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டியாக இருந்தது.
தற்போது 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளனர். ஓபிஎஸ் அணியில் உள்ள 10 எம்எல்ஏக்கள் ஆதரவு எடப்பாடிக்கு கிடைத்துள்ளது.
மேலும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனியரசு, அன்சாரி, கருணாஸ் ஆகிய 3 எம்எல்ஏக்களும் மத்திய அரசுக்கு எதிரான கருத்தையே தெரிவித்துள்ளதால், அவர்களும் எடப்பாடிக்கு எதிராக செயல்படுவார்களா? அல்லது உள்ளூர் பிரச்னையை கருத்தில் கொண்டு ஆதரிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ எந்த பக்கம் உள்ளார் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தற்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 112 அல்லது 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.
எடப்பாடி அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதன்படி தற்போது 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு குறைந்துள்ளதால், மைனாரிட்டி அரசாகியுள்ளது.
இந்நிலையில், 19 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு தாங்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசு மெஜாரிட்டியை இழக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டியது ஒரு கவர்னரின் பொறுப்பாகும்.
ஆனால், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மதியம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவர், மகாராஷ்டிரா மாநிலத்தின் முழு நேர கவர்னராகவும், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள தமிழக கவர்னர் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
அரசியல் சட்ட விதிப்படி மெஜாரிட்டியுடன் செயல்பட்டு வந்த ஒரு அரசு, மெஜாரிட்டியை இழந்துள்ளதாக தெரியவந்தால் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். அதனால் இதுபற்றி கவர்னர் நாளை உள்துறை செயலாளருடன் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், உடனடியாக சட்டசபையை கூட்ட உத்தரவிடாமல், யாருக்கும் மெஜாரிட்டி இல்லாததால் தமிழக சட்டப்பேரவையை முடக்கி வைக்கலாமா? என்பது குறித்தும் அப்போது ஆலோசனை நடத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி, சட்டசபையை முடக்கி வைக்கும்போது, தற்போது பல அணிகளாக செயல்பட்டு வரும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வெளியே வருவார்கள். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
அதன்படி யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்களை அரசு அமைக்க அழைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்பதால் தமிழக சட்டப்பேரவையை முடக்கி வைக்க டெல்லியில் உள்ள மத்திய அரசும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ஒருவரிடம் கேட்டபோது,
“ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியுள்ள நிலையில் தற்போதைய எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. இதனால் கவர்னர் சட்டப்பேரவையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
அல்லது சட்டப்பேரவையை கலைக்க அல்லது முடக்க உத்தரவிட வேண்டும். இதுதவிர கவர்னருக்கு வேறு வழியில்லை” என்றார்.

Comments
Post a Comment