கலைஞர் - சாணக்கியன் தான்...
*அதிர்ஷ்ட தேவதை அழைக்கும் போது இழுத்து மூடி தூங்குவதா?: ஸ்டாலினை குடையும் தி.மு.க.வின் மனசாட்சி*
வாலியை மறைந்திருந்து வதம் செய்தது ராமர் பார்வையில் ‘போர் தந்திரம்’ என்று நியாயப்படுத்தப்படுகிறது.
ஆனால் வாலியின் கீழ் உழைத்த வானரங்களால் ‘இது போர் அதர்மம்’ என்று விமர்சிக்கப்படுகிறது. அது தர்மமோ அல்லது அதர்மமோ! ஆனால் வாலி வதத்தின் மூலம் சுக்ரீவனின் முழு ஆதரவும் ராமனுக்கு கிடைத்து ராவணன் அழிப்பு, சீதை மீட்பு எனும் நியாயங்கள் அரங்கேறின. இதன் வாயிலாக இலக்கு பொது நன்மை தருவதாக இருந்தால் அதை அடைய செல்லும் பாதையின் ஊடே சில அத்துமீறல்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை! எனும் உபதேசம் நிர்மாணிக்கப்படுகிறது.
இதை! இதை! இதையேத்தான் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது உணர்வுகளை உசுப்பிவிட முனைகின்றனர் தி.மு.க.வின் சீனியர்கள்.
’கொல்லைப்புறமாக ஆட்சியை தி.மு.க. பிடிக்காது. இந்த ஆட்சி தானாக கவிழும்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே…..இருக்கும் ஸ்டாலினை சற்று சாணக்கியத்தனத்தை நோக்கி திரும்பிப் பார்க்க முயற்சிக்கின்றனர் இவர்கள்.
இந்த முயற்சி குறித்து தி.மு.க. சீனியர்கள் மேலும் பகிர்கையில்…”தளபதி மிக வெளிப்படையாக ஒன்றை புரிஞ்சுக்கணும் அப்படிங்கிறதுதான் எங்களோட ஆசை. கொல்லைப்புறம் வழியாக ஆட்சி என்பது என்ன? முதல்வராக இருந்த ஜெயலலிதா ஹாஸ்பிடல்ல முடியாம இருந்த நிலையில, அரசு நிர்வாகம் தற்காலிகமா ஸ்தம்பிச்சு போயி, அ.தி.மு.க.வுக்குள் குழப்ப ரேகைகள் எட்டிப்பார்த்த சூழலை பயன்படுத்தி அந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கட்சியை உடைச்சு ஆட்சியை பிடிச்சிருந்தால் அது கொல்லைப்புற ஆட்சின்னு எடுத்துக்கலாம்.
இப்படியாப்பட்ட அரசியலையும் இந்த தேசம் பார்த்திருக்குதுதான். அதிகாரத்தை ஆக்கிரமிப்பதுதான் அரசியலின் அடிநாதம் அப்படின்னு இருக்கிறப்ப இந்த அதிரடியை தப்புன்னும் சொல்ல கூடாது. ஆனா தளபதி அந்த நடவடிக்கையை தவிர்த்தார். ‘கொல்லைப்புறம் வழியே ஆட்சியை பிடிப்பது வேண்டாம்.’ என்றார். அதுவும் சரிதான்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. என்னவானது அப்படிங்கிறதை நாங்க சொல்லி தளபதிக்கோ, தமிழ்நாட்டுக்கோ தெரியவேண்டியதில்லை. ஆனா தமிழ்நாடு எந்தளவுக்கு வளர்ச்சி விகிதத்தில் சரிந்து கொண்டிருக்குதுங்கிறதை அறிக்கை வழியா தளபதி தினமும் வெளிப்படுத்திட்டேதானே இருக்கார்!
நீட் விஷயத்தில் மாணவர்களை அபாய சூழலுக்குள் தள்ளியாச்சு, ’வரலாறு காணாத வறட்சி’ன்னு முதல்வர் மேடைக்கு மேடை சொல்லிக்கிறாரே தவிர கிடைக்கும் கொஞ்சூண்டு மழையையும் நல்லபடியா பயன்படுத்தும் திட்டங்கள் இல்லை, குத்துக்கல் போல் அரசு இருக்க தூர்வாரலை துவக்கி வெச்சதே தளபதிதானே!, இப்படி ஒட்டுமொத்தமா எல்லா துறைகளிலும் ஆரோக்கியம் மிக மோசமா பின்னுக்கு தள்ளப்பட்டு ஒட்டுமொத்த தேசிய வளர்ச்சி நிலையிலிருந்து தமிழ்நாடு துண்டிக்கப்பட்டு கிடக்குது.
இதை கவனித்து சரி செய்ய, சீர் தூக்க ஆளும் நபர்களுக்கு நேரம் இல்லை. உட்கட்சிக்குள் கூட்டணி, பிளவு, பேச்சுவார்த்தை, சர்வ காலமும் ஆலோசனை, பழிக்குப் பழி, புறம் பேசுதல், மாற்றி மாற்றி பதவி பறிப்பு, பங்காளியை எப்படி முடக்கலாம் அப்படின்னு திட்டம் வகுக்குறது…ன்னு இப்படியேதானே போயிட்டிருக்குறாங்க.
இவங்ககிட்டே இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன வளர்ச்சியை எதிர்பார்த்துவிட முடியும்? மாவட்டத்துக்கு மாவட்டம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது மட்டுமே வளர்ச்சியா? ஒட்டுமொத்த அரசு எந்திரமும் துருவேறி நகர முடியாமல் இருக்கும் நிலையில், மக்கள் ஆதங்க கொந்தளிப்பை புரிஞ்சு கொள்ளாமல் இன்னமும் தளபதி ஸ்டாலின் ‘இந்த அரசு தானாகவே கவிழும்.’ அப்படின்னு பேசுறது அசட்டுத்தனம்.
ஒரு மாநிலத்தின் அரசு நிர்வாகம் இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில் மக்கள் நலனை கருத்தில் வெச்சு மத்திய அரசாவது கவர்னர் வழியே சரியான நடவடிக்கைகளை எடுக்கணும். ஆனா இங்கே பல சிக்கல்களுக்கு சூத்ரதாரியே அவங்கதான்னு சொல்லப்படுது. ஆக முடிவெடுக்க வேண்டியது எதிர்கட்சிகள்தான். அதிலும் பிரதான வலுவுடைய தி.மு.க.தான் இதை செய்யணும்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் செனடாப் ரோடுக்கு வந்து ‘தளபதி இந்த மாநிலத்தின் முதல்வர் பதவியை எடுத்துக்குங்க.’ன்னு சொல்ல மாட்டாங்க. அவங்களின் உள் ஆதங்கத்தை நாமதான் மிக துல்லியமா பல்ஸ் பிடிச்சு பார்த்து பாலிடிக்ஸ் செய்யணும்.
ஸ்டாலின் இப்போ செயல்பட்டே ஆக வேண்டும் என்பது தமிழக நலனுக்காக மட்டுமில்ல, எங்க கட்சியின் நலனுக்காகவும்தான். அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்போது இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தால் எதிர்த்த வீட்டுக்காரனும், பக்கத்து வீட்டுக்காரனும் வாரிக் குவிச்சுக்குவாங்க.
இப்போ ஸ்டாலின் முழிச்சுக்கலேன்னா இப்படியொரு சூழல் இனி எப்பவும் வராது.” என்கிறனர்.
*செயல் தலைவர், செயல் புயல் ஆவாரா?*

Comments
Post a Comment