வலுக்கிறது அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம்..
மிரட்டல் பயன்படாது
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர் என 75க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
ஜாக்டோ-ஜியோ சார்பில் தலைநகர் சென்னையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதை தமிழக அதிமுக அரசு எதிர்கொண்ட விதம் தொழிற்சங்க உரிமையையும், ஜனநாயகத்தையும் எள்ளி நகையாடுவதாக அமைந்தது. பேரணிக்கு வந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். இதையும் மீறி பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்தவேலை நிறுத்தத்தை உடைக்க தமிழக அதிமுகஅரசு மோசமான அணுகுமுறையை பின்பற்றுகிறது. அன்றைக்கு யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம்வழங்கப்பட மாட்டாது. பகுதிநேர, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு போட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா பழைய ஓய்வூதிய முறையை மீண்டும்கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தார். இன்றைக்கு பல அணிகளாக அதிமுக பிரிந்திருந்தபோதும் ஜெயலலிதாவின் பாதையில் செல்வதாகவே கூறுகின்றனர்.
இவர்களுக்கு ஜெயலலிதா அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய கடமை இல்லையா? பிறகு எதற்கு வாயை திறந்தால் அம்மா ஆட்சி என்று அலறுகிறார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பகுதிநேர மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை பறிக்கப்படும் என்று கூறுவதுஎன்ன நியாயம்? பகுதி நேர மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர், அரசு ஊழியரைநிரந்தரப்படுத்த வக்கில்லாத அரசு அவர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக மிரட்டுவது எந்த வகையிலும் சரியல்ல. தமிழகத்தில் போராடுபவர்களை அழைத்துப்பேசுவதற்கு பதிலாக அதிமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறது.
டாஸ்மாக்கிற்கு எதிராக தன்னெழுச்சியாக போராடும் பெண்கள் உள்ளிட்டபொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். நெடுவாசல், கதிராமங்கலம் என தமிழக இயற்கை வளத்தை பாதுகாக்க போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஊழியர்களை வஞ்சிக்கும் அப்பட்டமான மோசடி. ஊழியர்களின் பணத்தை பங்குச்சந்தையில் ஈடுபடுத்தி முதலாளிகளை வளர்க்கிற திட்டம். இதைஎதிர்த்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் நடத்தும்போராட்டம் அறத்தின்பாற்பட்டது. எனவே தமிழக அரசு உருட்டல், மிரட்டல்களைகைவிட்டு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச முன்வர வேண்டும்.----//தீக்கதிர் தலையங்கம்

Comments
Post a Comment