பலே ; திமுக அதிமுக கூட்டணி
ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தற்போது வரை பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், புதுச்சேரிக்கு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி எடுத்த முயற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்த சூழலில் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment