ஆகஸட் 5 தடைகளை உடை
*~ ஆகஸ்ட் 5-ல் தடைகளை உடை ~*
ஆகஸ்ட்-5 ஜேக்டோ ஜியோ போராட்டத்தை பிசு பிசுக்கச் செய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாகனங்களை சென்னை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த அரசும், காவல்துறையும் திட்டமிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது (கடந்த கால படிப்பினைகள்)..
எதை வேண்டுமானாலும் செய்து நமது போராட்டத்தை தோல்வியடையச் செய்ய அரசு முழு முயற்ச்சி செய்யும்..
அதனால் போராட்டக்காரர்கள் இரயில் மூலமாக சென்னையை வந்தடைவதே நோக்கம் நிறைவேற சிறந்த வழி...
ஜாக்டோ ஜியோ பொருப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
இயக்கத்தின் பதாகைகளை வாகனத்தில் கட்ட வேண்டாம் ( உடை, தொப்பி, கொடி, பை போன்ற எதிலும் இயக்கத்தின் பிரதிபலிப்பு வேண்டாம்).
காலை 6 மணிக்குள் சென்னை உள்ளே வந்து விடுவது நல்லது.
முன்னரே வரும் பொழுது தடுத்து திருப்பி அனுப்பப்பட்டால் ... கடந்து வந்த வழியில் அருகாமையில் உள்ள *இரயில் நிலையத்திற்கு அல்லது பேருத்து நிலையத்திற்கு* சென்று அங்கிருந்து சென்னை உள்ளே வந்தடையவும் தோழர்களே..
4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக உளவுத்துறை இரகசிய கணக்கெடுப்பு செய்துள்ளது.
எனவே, செங்கல்பட்டிலேயே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது..
எனவே போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலை 6 மணிக்குள் சென்னை உள்ளே வருவது போல் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும்..
சென்னை உள்ளே போக்குவரத்து ஸ்தம்பித்த செய்தி கிடைத்தால் செங்கல்பட்டு வழியே வருபவர்கள் ... செங்கல்பட்டிலிருந்து மின்சார இரயில் மூலம் பார்க் ஸ்டேசன் வந்தால் போராட்டக்களத்தை எளிதில் வந்தடையலாம்..
நமது அனைத்து முயற்சிகளையும் அரசு முடக்கிவிடும்பட்சத்தில் தடைசெய்யப்படும் இடத்திலேயே துளியும் தயங்காமல் *தன்னெழுச்சியாக சாலை மறியலில் ஈடுபடுவோம்..*
நமது ஒற்றுமையையும் , வலிமையையும் மீண்டும் அரசுக்கு உணர்த்திக்காட்டுவோம் தோழர்களே..
*பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது.*
*ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல..*
*நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனமே தவிர...*
*யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!*
*குண்டாந்தடியால் அடித்தாலும்...*
*குண்டுகள் நெஞ்சைப் பிளந்தாலும்...*
*அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணியோம்...*
நாம் ஒன்றும்
பிச்சை கேட்கவில்லை ,
நமது உரிமைகளை நம்
ஒற்றுமையின் வலிமையால் வென்றெடுப்போம்.
போராடுவோம்...
வெற்றி பெறுவோம்...
இறுதி வெற்றி....
ஜாக்டோ ஜியோவுக்கே...
*இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ????*

Comments
Post a Comment