தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் TNHHSSGTA
*துக்ளக் துர்வாசர் செய்தியும்... பாலிமர் சேனல் ஒளிப்படமும்...*
அன்பார்ந்த தோழர்களே!
கடந்த 19-07-2017 அன்று துக்ளக் பத்திரிக்கை துர்வாசர் என்ற புனைப்பெயரில் அரசு ஊழியர் சங்கத்தின் மிரட்டல் என ஒரு மூன்றாம் தர விமர்சனத்தை பதிவிட்டுள்ளது..
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அவர்களின் போராட்ட அறிவிப்பினை ஒட்டி அது தன் காழ்ப்புணர்ச்சியினை, போராட்டத்திற்கு எதிரான தனது சுயரூபத்தினை காட்டியிருக்கிறது...
அம்மையார் செயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசை யார்தான் மிரட்டுவது என்கிற வரைமுறையின்றி தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாம் மிரட்டுவதாக ஆதங்கப்பட்டு தன் வர்ண பாசத்தை கொட்டியிருக்கிறது...
செயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போது அமைச்சர் முதல் அரசு ஊழியர் வரை வாலைச்சுருட்டிக்கொண்டு இருந்ததாக பாராட்டும் துக்ளக் துர்வாசனுக்கு, 2016 பத்து நாள் போராட்டத்தில் அசையாத முதல்வரை எழுந்து சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட வைத்த அரசு ஊழியர் ஆசிரியர் போராட்ட நடவடிக்கைகள் ஏன் தெரியவில்லை?
போராட்டங்களை இந்த பத்திரிக்கை வகைப்படுத்தும் விதமே அலாதி தான்...
*வருமானத்தை அள்ளி அள்ளித்தரும் மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடுவது தமிழக அரசுக்கான பிரச்சனை"* என்று எழுதி மது விற்றாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற அந்த பத்திரிக்கையின் கெடுமதியினை என்னவென்று அழைப்பது?
தனது ஒரு பக்க செய்தியில் *அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை கொட்டியழுகிறது* என இருமுறை புகைந்து, ஊதியம் வழங்குவதை கொட்டியழுவது என்கிற முதலாளித்துவ மனப்பாங்கினை பறைசாற்றுகிறது...
சகல துறைகளிலும் லஞ்சம் அள்ளி மாளவில்லை என இன்றைய அரசிற்கு சான்று தரும் துக்ளக் துர்வாசனுக்கு அதில் மந்திரிகளின் பங்கினை சொல்ல வார்த்தை வரவில்லை...
இறுதியாக எந்த ஆண்டில் அரசு ஊழியர்களை செயலலிதா அவர்கள் டிஸ்மிஸ் செய்தார் என்கிற விபரம் கூட அறியாமல் 2000த்திலோ, 2001 லோ அரசு ஊழியர்களை செயலலிதா டிஸ்மிஸ் செய்ததை போல எடப்பாடி பழனிச்சாமியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வழிகாட்டி, எவரோ இட்ட எச்சில் பிஸ்கட்டுக்காக தன் வாலை ஆட்டி விசுவாசம் காட்டியிருக்கிறார் இந்த *துர் வாசர்*
அடிப்படை புள்ளி விபரம் ஏதுமின்றியும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை கொட்டியழுவது எனவும் செய்தியிட்டு தன் ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ள துக்ளக் செய்தியோடு இன்னொரு காட்சி ஊடகமான *பாலிமர் தொலைக்காட்சி* திண்டுக்கல் போராட்ட களத்தில் சில ஆசிரியர் அரசு ஊழியர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதை காட்டி போராட்ட களத்தினை பிக்னிக் களமாக விவரித்து தன் விசுவாசத்தினை காட்டி நிற்கிறது...
*போராட்ட களத்திற்கு ஊழியர்களை ஈர்க்க...*
*நான் கலந்து கொண்டேன் நீங்கள் வரவில்லை என நண்பர்களுக்கு சொல்ல...*
*தன் போராட்ட அனுபவத்தினை தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் உதவியோடு பாதுகாக்க* போராட்டக்காரர்கள் ஆர்வமாய் எடுத்த செல்ஃபியை ஏதோ கொடும் குற்றமென காட்டி பூரிப்படைந்திருக்கிறது...
இவை மட்டுமல்ல,
அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராடும்போதெல்லாம் அரசிடம் போய் விசுவாசம் கட்டி பல்லிளித்து நான் போராடமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்யும் சில அமைப்புகள், வர்க்க துரோகி சண்முகராசனோடு இணைந்து 15-07-2017 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து தன் வாலை குலைத்து திரும்பியிருக்கிறார்கள்...
எல்லாவற்றிற்கும் உச்சமாக மாமன்ற உறுப்பினர் உ. தனியரசு அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என ஒப்பாரி வைத்து தனது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரி அமர்ந்திருக்கிறார்...
*துக்ளக் மற்றும் பாலிமர் செய்திகள்...*
*துரோக அமைப்புகளின் சந்திப்புகள்*
*தனியரசு அவர்களின் கோரிக்கை...*
இவை எதேச்சையாக நடந்தேறிய விசயமில்லை...
இந்த அரசு ஆளுமை இன்மையால் வலு குறைந்த அரசும் இல்லை...
*நாம் கடந்த காலங்களில் மரியாதைக்குரிய கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்திலும், அம்மையார் செயலலிதா அவர்களின் ஆட்சி காலத்திலும் போராடியபோது அவர்களுக்கு, மீண்டும் நம்மையும் மக்களையும் சந்திக்க வேண்டும் என்கிற நிர்பந்தமும் நெருக்கடியும் இருந்தது...*
*இன்றைய ஆட்சியின் பங்கேற்பாளர்களுக்கு அத்தகைய வாய்ப்பில்லை...*
*இருக்கும் வரை அள்ளிச்சுருட்டி ஓட எத்தணிக்கும் இவர்களுக்கு மக்களின் மீதோ அரசு நிர்வாகத்தின் மீதோ அக்கரையோ பயமோ இல்லை...*
*அம்மணமானவன் ஆடைக்காக மெனக்கடமாட்டான்*
*இந்த அரசாங்கம் அதன் ஏவலாட்களான துக்ளக் துர்வாசனையும்...*
*பாலிமர் செய்தியாளனையும் ஏவி நம்மை குறி பார்க்கிறது...*
*சுயநலவாதிகளின் துரோக அமைப்புகளை அழைத்து நாடகமாடி ஊழியர்களை வஞ்சிக்க சதி செய்கிறது...*
*தனது கூவத்தூர் கூலிக்காக இன்னும் மாரடிப்பவனை விட்டு ஆழம் பார்க்கிறது...*
*இந்த அரசு போராட்டத்தை, வாலாட்டத்தால் நசுக்க முற்படுகிறது...*
*இனியும் பொறுத்தது போதும்...*
*புறப்படு தோழா...*
*"எப்போதும் போராட்டமே"* என கிடக்கும் தோழன் பெற்றுத்தருவான் என நீ உன் கூட்டுக்குள் மூழ்கிக்கிடந்தால் அதற்குள்ளாகவே மூழ்கடிக்கப்படுவாய்...
*ஒன்று சேர்...*
*ஒற்றுமை கட்டு...*
*துணிந்து களமாடு...*
*துயர் களைய, அச்சமின்றி அணிவகுப்பாய் சென்னை நோக்கி...*
*இந்த போராட்டம் இழந்த ஓய்வூதியத்தினை மீட்டெடுப்பதற்கான இறுதி போராட்டம்...*
*ஊதிய உரிமை கேட்டு உழைக்கும் வர்க்க போராட்டம்*
*தோழா...*
*உனக்காய் போராட...*
*நமக்கான உரிமை மீட்க...*
*எதிரி ஆயுதம் எடுத்து விட்டான்...*
*இனியும் தாமதம் ஏன்?*
*புறப்படு சென்னை நோக்கி புயலென...*
*சந்திப்போம் சங்கமிப்போம் சென்னையில்*
தோழமையுடன்,
*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் TNHHSSGTA

Comments
Post a Comment