மியூச்சல் பண்ட் - தரும் பலன்கள்
அவசர கால நிதியை உருவாக்குவதில் இருந்து, ஓய்வு காலத்திற்கான வருமானம் வரை பலவித தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மியூச்சுவல் பண்ட்கள் கைகொடுக்கும்.
பல வகையான முதலீட்டு வாய்ப்புகளில் பரஸ்பர நிதி என கூறப்படும் மியூச்சுவல் பண்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்வது நல்ல பலன் அளிக்கும் என, நிதி வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர். நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் அதன் பலனை பெறுவதற்கான வழியாக கருதப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பலவகை இருக்கின்றன. சமபங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி பண்ட், கடன் சார் முதலீடுகளில் முதலீடு செய்யும் டெப்ட் பண்ட், குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்ற லிக்விட் பண்ட், சமபங்கின் பலனையும், டெப்ட் பண்டின் பாதுகாப்பையும் இணைந்து வழங்கும் பேலன்ஸ்டு பண்ட் உள்ளிட்ட பலவகையான திட்டங்கள் இருக்கின்றன. முதலீட்டாளர்கள் இவற்றில் தங்கள் தேவை மற்றும் நிதி சூழலுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்வது அவசியம் என, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி., என சொல்லப்படும் குறிப்பிட்ட கால அளவில் சீராக முதலீடு செய்யும் திட்டங்கள் சிறந்த சேமிப்பு பழக்கமாக அமைவதோடு, நீண்ட கால நோக்கில் நல்ல பலனையும் அளிக்க வல்லவை. அவசரகால நிதிநீண்ட கால இலக்குகள் போலவே திடீரென எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலும் முக்கியம். இதற்காக அவசரகால நிதியை உருவாக்கி கொள்ள வேண்டும் என்கின்றனர். இந்த நிதியை உருவாக்க லிக்விட் பண்ட் ரக திட்டங்கள் ஏற்றவை. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த வகை திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சில ஆண்டுகளில் கணிசமான தொகையை அவசர நிதியாக உருவாக்கி கொள்ளலாம். எதிர்பாராத நெருக்கடிகளில் இது கைகொடுக்கும். லிக்வின் பண்ட் திட்டம் சேமிப்பு கணக்கை விட மேம்பட்டது. அதே நேரத்தில் தேவையான போது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.இதே போல சொந்த வீடு வாங்குவதற்கான முன்பணத்தை திரட்டவும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடலாம். வீட்டுக் கடன் பெற முன்பணமாக எவ்வளவு தொகை தேவைப்படும் என கணக்கிட்டு அதற்கேற்ப பொருத்தமான திட்டத்தில் மாதந்தோறும் முதலீடு செய்து வரலாம். வீடு வாங்கும்போது இந்த தொகை கைகொடுக்கும். பெரும்பாலானோர் முன்பணத்திற்காக நீண்ட கால சேமிப்பாக, பி.எப்., பணத்தில் கைவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தவிர்க்க வேண்டும் என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர்.போனஸ் முதலீடுபெரும்பாலானோர் போனஸ் போன்றவை மூலம் பெருந்தொகை கிடைக்கும் போது அதை செலவு செய்யவே முற்படுகின்றனர். இந்த தொகையை இஷ்டம் போல செலவு செய்வதை விட, முதலீடு செய்வதே சரியாக இருக்கும். வைப்பு நிதி போன்றவற்றில் முதலீடு செய்வதை விட டெப்ட் பண்ட் வகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். வரி சேமிப்புக்கும் இது உதவலாம். வைப்பு நிதியில் முதலீடு செய்யும்போது அதன் பலன் முதலீடு செய்பவரின் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி உண்டு.இதேபோல இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை நாடலாம். எல்லாருக்குமே இலக்குகள் உண்டு. பிள்ளைகள் உயர் கல்வி முதல் வெளிநாட்டு விடுமுறை வரை பலவித இலக்குகள் இருக்கலாம். இவற்றுக்கான தொகையை திரட்டுவது எப்படி? எஸ்.ஐ.பி., எனப்படும், ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ வகை திட்டங்களில் பொருத்தமானதை தேர்வு செய்து மாதம் ஒரு தொகையை முதலீடு செய்தால் இலக்கிற்கான நிதியை தயார் செய்து கொள்ளலாம்.இதேபோல ஓய்வு காலத்தில் இருப்பவர்களும் தங்களுக்கு தேவைப்படும் மாத வருமானத்திற்கு எஸ்.டபிள்யூ.பி., எனப்படும், ‘சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான்’ வகை திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது, எஸ்.ஐ.பி., திட்டங்களில் தலைகீழ் வடிவம். முதலில் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து விட்டு, அதன் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் சம்பங்கு நிதிகளும் இருக்கின்றன என்றாலும், கடன்சார் நிதிகளை நாடுவது பாதுகாப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
மொபைல் போனில் ஆதார் தகவல்கள்
ஆதார் அட்டை தகவல்கள் தேவைப்படும் இடங்களில் அவற்றை மொபைல் போன் மூலம் சமர்ப்பிக்க உதவும் வகையில், ஸ்மார்ட்போனில் ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க வழி செய்யும், ‘எம் ஆதார்’ செயலி அறிமுகம் ஆகியுள்ளது. (https://uidai.gov.in)ஆதார் எண்களை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள், ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை தங்கள் போனில் வைத்திருக்க முடியும். இவற்றை ஆதார் தகவல்கள் தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தலாம். ஆதார் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டியதில்லை.ஆதார் எண்ணுடன் பதிவு செய்த மொபைல்போன் எண் மூலம் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். தகவல்களை இடம்பெறச் செய்வதோடு, பயோமெட்ரிக் தகவல்களை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் லாக் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார தகவல்களை அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ‘கியூ ஆர் கோட்’ மற்றும் இ.கே.ஒய்.சி., விபரங்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு போனில் ஒரு முறை மட்டுமே ஆதார் தகவல்களை தரவிறக்கம் செய்ய முடியும். குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் இணைத்துக் கொள்ளலாம்.

Comments
Post a Comment