நவீன ராபின் வுட் கைது
குற்றம் செய்வதற்கும் ஒரு நோக்கம் இருக்கும், காரண காரியம் இருக்கும். அது கொலையாக, இருந்தாலும், திருட்டு, கொள்ளையாக இருந்தாலும் ஏதாவது ஒரு அடிப்படை நோக்கம், பாதிப்பு, ஆழ் மனதின் உறுத்தல், உந்துதல் காரணமாக இருக்கும். ஆடம்பரமாக வாழ, உல்லாசமாக இருக்க, குறுகிய நேரத்தில் பணக்காரராக போன்ற காரணங்களைத்தான் பெரும்பாலான குற்றவாளிகள் கூறுவார்கள். ஆனால், இதில் வித்தியாசமாக ஒரு சிலர் இருப்பார்கள்.
மாறுவேடத்தில் வந்த இறைவனிடமே கோயில் கட்ட கொள்ளையடிக்க முயன்றவர்தான் திருமங்கை ஆழ்வார். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவர்களும் உண்டு. இந்த வகையில் செயல்பட்டவர்தான் ராபின் ஹூட் என்ற கதாபாத்திரம். இதே போன்று இர்பான் என்ற கொள்ளையன் செயல்பட்டு வந்துள்ளான். இவனைப் பற்றி தென் கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையர் ரோமில் பன்யா கூறியதாவது. இர்பான் பணக்காரர்களிடமிருந்து திருடி பீஹார் கிராம ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளான். இவரை அக்கிராமத்தினர் ஹீரோ என்றுதான் கூறுகிறார்கள்.
பிஹாரின் சிதமார்ஹி கிராமத்தில் பிறந்த இர்பான் என்கிற உஜாலா டெல்லியின் ஜாமியா நகரில் வசித்து வந்தான். வேலை தேடி வந்த அவன் முதலில் துணிக் கடை ஒன்றில் பணிபுரிந்துள்ளான். பிறகு திருட்டில் ஈடுபட்டுள்ளான். டெல்லியில் பூட்டி இருக்கும் பணக்காரர்களின் வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்துள்ளான். 2016ம் ஆண்டு நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடிய போது சிசிடிவி பதிவில் சிக்கினான். இதன் அடிப்படையில் இவனை கடந்த 6ம் தேதி கைது ெசய்தோம்.
டெல்லி மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இர்பான் கைவரிசை காட்டியுள்ளான். சொகுசு கார்களில் உலா வந்து, நட்சத்திர ஓட்டல்களில் மதுபான கேளிக்கைளில் ஈடுபட்டு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளான். விசாரணையில் இர்பான் டெல்லிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்தவன் என்பதும் கடந்த இரு ஆண்டுகளாக கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம்களை தனது சொந்த ஊரில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனால் அங்கு அவர் மரியாதை, மதிப்பு இருந்தது. டெல்லி மதுபான விடுதியில் கிளப் ஒன்றில் தனக்கு பிடித்த பாடலை கேட்க ரூ. 10,000 பரிசாக கொடுத்தும் உள்ளார். இர்பானிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய தர்மேந்தர் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 320 கிராம் (40 சவரன்) நகைகளை பறிமுதல் செய்தனர். இவ்வாறு கூறினார்
Comments
Post a Comment