கூகுள்- க்கு 242 கோடி யூரோ அபராதம்...
தேடுபொறிக்கு நேர்ந்த சோதனை- தி இந்து நாளிதழ் செய்தி
உலகம் முழுவதும் எதனால் இயங்கிகொண்டிருக்கிறது என்று கேட்டால் இந்த காலத்து இளைஞன் கூகுள் என்று தெளிவாக குறிப்பிடுவான். ஆனால் கடந்த வாரம் கூகுள் நிறுவனத்துக்கு மிகப் பெரிய சோதனை நேர்ந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 242 கோடி யூரோவை அபராதமாக விதித்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
ஐரோப்பிய யூனியன் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் கூகுள் நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் சேவைகளின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. உதாரணமாக ஸ்மார்ட்போன்களை தேடுபொறியில் தேடினால் கூகுள் ஷாப்பிங் உங்களுக்கு பல்வேறு விதமாக சலுகைகளுடன் கூடிய விலையை தேடுதல் முடிவில் காண்பிக்கும். இதனால் எளிதாக ஈர்க்கப்பட்டு வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகையை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இதில் பிரச்சினை என்னவென்றால் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டுள்ள சலுகை விலையை தேடுதல் முடிவில் முதலில் காண்பிக்கும். இதனால் உள்நாட்டு சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தின. 2010-ம் ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
தனது ஷாப்பிங் தேவைகளை முன்னிலைப்படுத்துவதற்கே கூகுள் நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் இதர நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட கூகுள் சம வாய்ப்பை வழங்கவில்லை என குற்றம்சாட்டி நிறுவனத்தின் மீது 242 கோடி யூரோ அபராதத்தை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தன் தவறை 90 நாட்களுக்குள் திருத்திக் கொள்ளாவிட்டால் அதன் தினசரி வருமானத்தில் 5 சதவீதத்தை கூடுதல் அபராதமாகச் செலுத்த நேரிடும் என ஐரோப்பிய யூனியன் தொழிற்போட்டி ஆணையர் மார்க்கரேட் வெஸ்டகெர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன், ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதங்களிலேயே கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட இந்த அபராதம்தான் மிகப் பெரியது.
கூகுளின் நிலை
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள எழுத்து வடிவிலான விளம்பரங்களில் மாற்றம் செய்து படங்கள், பொருட்களுக்கான ரேட்டிங், விலைகள் போன்றவற்றை உள்ளடக்கி விளம்பர சேவையினை வழங்கி வருவதாகவும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சலுகையை பற்றி தகவல்களை வழங்கி வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயனாளிகளின் பின்னூட்டங்கள் விளம்பரதாரர்களுக்கு தெரியப்படுத்துவதையும் தொடர்ந்து செய்து வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த பல ஆயிரம் வியாபார நிறுவனங்கள் இந்த விளம்பரத்தினால் பயனடைவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய விதித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

வர்த்தக யுத்தமா?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவின் மீதான ஐரோப்பிய யூனியனின் பார்வை மாறியுள்ளது. இதற்கு காரணமும் உண்டு. ஜெர்மனியில் உள்ள கார் தயாரிப்புத்துறைக்கும் உருக்கு ஆலை துறைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் இந்த இரண்டு துறைகளையும் அமெரிக்காவில் பலப்படுத்திவருகிறார். இதனால் ஐரோப்பிய யூனியன் அமெரிக்க இன்டர்நெட் நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

தற்போது கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதம் ஒன்றும் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளில் ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் உள்நாட்டு சந்தையை காப்பதற்கு ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள முடிவு முக்கியமானது. இதுபோன்ற கட்டுப்பாட்டுகளை அனைத்து நாடுகளும் எடுக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி.
Comments
Post a Comment