GDP சரிவு - ஏன்
*டீமானிடைசேஷன் - அடுத்த அதிர்ச்சி. . .*
*"மிகவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற மதிப்பை இழந்து நிற்கிறது இந்தியா"*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் கறுப்புப்பணம் நிச்சயம் ஒழிந்தே தீரும் என்று அடித்து, உருண்டு புரண்டு டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி, இந்தியாவின் கடைக்கோடி ராமேஸ்வரத்தில் எச். ராஜா வரை கதறிக் கதறிச் சொல்லிக்கொண்டிருந்தபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெதுவாய், அழுத்தமாக அன்று சொன்னார், இந்த நடவடிக்கை வரலாற்றுப் பிழை என்றார், மேலும் GDP என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இரண்டு சதவீதம் வரை வீழ வாய்ப்பு உள்ளது என்றார்.*
*எச்எஸ்பிசி நிறுவனம், ஜிடிபி ஒரு சதவீதம் கீழிறங்கும் எனக் கணித்தது.*
*உலக வங்கியின் முன்னாள் துணைத்தலைவரும், பொருளாதார வல்லுனருமான கவுசிக் பாசு இதன் விளைவுகள் பேரழிவாக இருக்கும் என எச்சரித்தார்.*
*பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்ற அமிர்தியா சென் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.*
*அருண் ஷோரி, கிஷோர் முப்பானி உள்பட பல முன்னணி வல்லுனர்கள் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளையே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.*
*பாஜகவுக்குக் கிடைக்கப்பெற்ற உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில வெற்றிகள் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான பரிசாகவே கருதப்பட்டது.*
*ஆனால், 2015-16 ல் 7.6 சதவீதமாக இருந்த ஜிடிபி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 7.1 சதவீதமாக குறையலாம் என்றுதான் கணக்கிடப்பட்டது. ஆனால், அதிர்ச்சிகரமாக 6.1 சதவீதமாக GDP குறைந்துள்ளது.*
*இதன் மூலம் மிகவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற மதிப்பை இழந்து நிற்கிறது இந்தியா.*
*நன்றி : பிசினெஸ் டுடே.*
http://bit.ly/2spJD3o

Comments
Post a Comment