வைர விழா நாயகன் கலைஞர் - நன்றி ஆனந்த விகடன்
தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறு கருணாநிதி. அவருடைய சாதனைகள் வியப்பை ஏற்படுத்துபவை; இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகள் மலைப்பை உருவாக்குபவை. கடந்த ஜூன் 3-ம் தேதி 94-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் கருணாநிதி. அந்தப் பிறந்த நாள் விழாவையும், அவருடைய 60 ஆண்டுகாலத் தொடர் சட்டமன்ற வெற்றி களையும் கொண்டாடும் விதமாக தி.மு.க. கருணாநிதி வைரவிழாவை நடத்தியது. விழாவின் நாயகர் கருணாநிதியாக இருந்தாலும், அதில் பட்டம் சூட்டிக்கொண்டவர் மு.க. ஸ்டாலின்தான்.
தமிழக அரசியல் - பிரதான எதிர்க்கட்சி தலைவர்!
உடல்நலக் கோளாறு காரணமாகக் கருணாநிதி முழுமையான ஓய்வுக்குச் சென்ற பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க-வின் செயல் தலைவராக ஆன பிறகும்கூட, தமிழகத்தின் மற்ற எதிர்க் கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் அணி திரள்வதில் அலட்சியம் காட்டின. கருணாநிதியின் இடத்தில் அவர்கள் யாரும் ஸ்டாலினை வைத்துக் கற்பனைகூட செய்யவில்லை. அது காவிரி விவகாரத்துக்குக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிரொலித்தது. காவிரி நதி நீர்ப் பிரச்னை மற்றும் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டி, தமிழகத்தின் பிரதான கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சில கட்சிகள் அந்தக் கூட்டத்தை ஆதரித்தன. பல கட்சிகள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.
தி.மு.க-வின் தலைமையில் ஓர் அணி அமைந்தால், அது ஸ்டாலின் தலைமையிலான அணியாகத்தான் இருக்கும் என்பதை தமிழகத்தின் பிரதான கட்சிகள் அப்போதே உணர்ந்து கொண்டன. அதையடுத்து, 2017 ஏப்ரல் 23-ம் தேதி மயிலை மாங்கொல்லையில், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். அது காவிரி பிரச்னைக்காகக் கூட்டிய கூட்டத்தைப் போல பிசுபிசுத்துப் போய்விடவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. அதன்பிறகு மாநில அரசியலைக் கவனித்துக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அகில இந்திய அளவிலும் தன்னால் அரசியல் செய்ய முடியும் என்பதை நிருபிக்கும் வாய்ப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார். அதற்கு கருணாநிதி வைரவிழாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதுவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவனோடு மட்டுமே மேடையைப் பகிர்ந்துகொண்ட மு.க.ஸ்டாலின் அகில இந்தியத் தலைவர்களோடு சமமாக அமர்ந்து, தனக்குச் சமமாக அவர்களையும் அமரவைத்து ஓர் அரசியலை நடத்திக் காட்டியுள்ளார்.

அகில இந்திய அரசியல்
கருணாநிதி வைரவிழாவில் பேசிய ஸ்டாலின் ஒரு வார்த்தைகூட மாநில அரசியலைப் பற்றிப் பேசவே இல்லை. தமிழக அரசைத் குறை சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியைக் குற்றம்சாட்டவில்லை. அ.தி.மு.க-வில் நடக்கும் குளறுபடிகளை எடுத்துக்காட்டவில்லை. அவர் வேண்டுகோள் வைத்தது, கடுமையாகச் சாடியது, எச்சரிக்கை விடுத்தது எல்லாம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்குத்தான். “இனி ஒரு சுதந்திரப் போரை நடத்த வேண்டிய சூழலை உருவாக்கி விடாதீர்கள்” என்றார் மு.க.ஸ்டாலின். அத்துடன் பி.ஜே.பி-க்கு எதிரான வலுவான மேடையை தமிழகத்தில் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தனக்கு இருக்கிறது; அதை அகில இந்திய அளவில் எடுத்துச் செல்லும் திறமையும் இருக்கிறது என்பதை மத்திய பி.ஜே.பி அரசுக்குச் சுட்டிக் காட்டினார்.
மத்திய அரசியல், மாநில அரசியல் என இரண்டிலுமே மு.க.ஸ்டாலின் வீரியம் காட்ட முற்படுகிறார். இது தி.மு.க-வுக்கு நல்ல துவக்கம்.

இவர் அவரைப் பேசவில்லை... அவர் இவரைப் பேசவில்லை!
விழாவில் பேசியவர்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா தமிழக அரசைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பி.ஜே.பி-யைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ராகுலின் உரையிலும், மு.க.ஸ்டாலினின் உரையிலும்கூட தமிழக அரசு பற்றி எந்த ஒரு வார்த்தைகூட இல்லை. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மட்டும்தான் மத்திய-மாநில அரசுகள் இரண்டையும் விமர்சித்தார்.

Comments
Post a Comment