கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு - கண்ணீர் அஞ்சலி
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு
கண்ணீர் கவிதாஞ்சலி...
💐💐💐😥💐💐💐
கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, பனையூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார்.
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 29 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்தார் அப்துல் ரஹ்மான்.
1999ம் ஆண்டு "ஆலாபனை" கவிதை தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் அப்துல் ரஹ்மான்.
2009ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக பணியமர்த்தப்பட்டார்
💐💐💐💐💐💐💐💐
*கவிக்கோவின் படைப்பு - நீராக*
💧நீரிலிருந்து பிறந்தவனே
நீ ஏன் நீராக இல்லை?
நீ மட்டும்
நீராக இருந்தால்
இல்லாமல் போகமாட்டாய்
நீ மட்டும்
நீராகவே இருந்தால்
உன்னை யாரும்
காயப்படுத்தவே முடியாது
💧நீரைப்போல்
மென்மையாக இரு
மென்மையே
உயிர்த் தன்மை
நீரைப் போல்
போராடுகிறவனாக இரு
💧நீர் ஆயுதமில்லாமல்
போராடுகிறது
ஆனால்
எல்லாவற்றையும்
வென்று விடுகிறது
💧நீரைப்போல்
உன் சிறைகளில் இருந்து
கசிகின்றவனாக இரு
💧நீரைப்போல்
கண்டுபிடிப்பவர்களுக்காக
ஒளிந்திரு
💧நீரைப்போல்
சுவை அற்றவனாக இரு
எப்போதும்,
நீ தெவிட்டாதவனாக
இருப்பாய்
💧நீரைப்போல்
பிரதிபலிப்பவனாக இரு
சூரியனும் சந்திரனும்
உனக்குக் கிடைப்பார்கள்
💧நீரைப்போல்
எங்கே சுற்றி அலைந்தாலும்
உன் மூல சமுத்திரத்தை
அடைவதையே
குறிக்கோளாய்க் கொள்வாயாக !
*கவிக்கோவின் மறைவு கவித்துவத்தின் பேரிழப்பு... கண்ணீர் கவிதாஞ்சலியாக ...*
🙏🏼R.R🙏🏼
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment