சட்டப்பேரவை நிகழ்வுகள் 14.6.17
இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள்
பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் இந்த நேரத்தில் இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் முதல் அரைமணி நேரம் கேள்வி நேரம் நடந்தது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் 🎙விவாதங்கள் தொடங்கியது😯.
🔰திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான பண பேரம் 📹வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்😯. ஆனால் இந்த வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சபாநாயகர் இது குறித்து பேச மறுப்பு தெரிவித்தார். இதனால் சட்டமன்ற பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
🔰எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யபட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இதனை தாக்கல் செய்தார். மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாநில ஜி.எஸ்.டி. மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
🔰சட்டசபையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடந்தது.
🔰கூட்டுறவுத்துறைக் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் 'தெர்மாகோல், தெர்மாகோல்...' என்று கோஷமிட்டதால் அவையில் சிரிப்பலை அதிர்ந்தது.
🔰'எம்.எல்.ஏ. பார் சேல்' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஜனநாயகத்தை விற்காதே என்று முழக்கமிட்டனர்.மேலும், எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.களும் வெளியேற்றப்பட்டனர்.
🔰திமுக.,வினர் வெளியறே்றப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
🔰வெளியேற்றப்பட்ட திமுக செயல் தலைவர் உள்பட மற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
🔰இதனை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக உறுப்பினர்களும், சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை 3.15 மணியளவில் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

Comments
Post a Comment