இன்று ( ஜூன் 13) வெயில் குறைய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் கன மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி வலுவிழந்ததால், தமிழகம், புதுச்சேரியில் பகுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களிலேயே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக வால்பாறை, சின்னகல்லார், பெரியார் ஆகிய பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெயில்
திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, அதிகபட்சமாக சென்னையில் 101.84, மதுரை மற்றும் கடலூரில் தலா 101.12, திருச்சியில் 100.76, புதுச்சேரியில் 100.4, திருத்தணியில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment