தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு ?
துப்பட்டா நீக்கம், உள்ளாடை சோதனை... நீட் தேர்வா... மனித வெடிகுண்டு சோதனையா?!
நீட் தேர்வு
`தமிழகத்தில் நீட் தேர்வு வருமா... வராதா?' என்ற குழப்பத்தில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரானார்கள். அவர்கள் கவனம் முழுக்க தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதாக இருந்தது. நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் ஹேர் பேண்ட், ஹேர் கிளிப் பயன்படுத்தக்கூடாது. முழுக்கை சுடிதார், பாக்கெட் வைத்த ஜீன்ஸ் போடக்கூடாது என எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள்.

தேர்வு துவங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்தில் ரிப்போர்ட் பண்ண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நிமிடங்கள் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியாமல் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுபோதாதென்று, `துப்பட்டா போடவிடாமல் தடுக்கப்பட்டது, சுடிதாரில் இருக்கும் பட்டன்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது' என தேர்வுக்கு முன்பு சந்தித்த அவலங்கள் ஏராளம். தமிழகத்திலும், கேரளாவிலும் சந்தித்த கொடுமைகள் திடுக்கிடவைக்கின்றன. ஒரு மாணவி உள்ளாடை கழற்றிவிட்டு வருமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் வெளியான நொடியில் இருந்து பலரும் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் தமிழரசன் கூறுகையில், ‘‘நீட் தேர்வு பற்றிய பயத்தைப் போக்க பயிற்சி மையங்கள் மாடல் தேர்வுகளை நடத்தப்பட்டன. ஹால் டிக்கெட்டிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளன. ஹேர் பின் துவங்கி எதுவெல்லாம் தேர்வுக்கு வரும்போது கூடாது என்பது குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது பயிற்சி மையங்களின் பொறுப்பு.
நீட் தேர்வு தமிழக மாணவர்களும் எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட பின் தமிழகத்தில் சுமார் 150 புதிய பயிற்சி மையங்கள் புதிதாக திறக்கப்பட்டன. நீட் தேர்வு பற்றிய முன் அனுபவம் இல்லாதவர்கள் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்காமல் போனதே இந்தக் குழப்பத்துக்கு காரணம். நீட் தேர்வை தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதினர். தமிழகத்தை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கேரளாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய உடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாமல் விட்டதும் பிரச்னைக்கு காரணம்’’ என்கிறார்.
``தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய எதையும் மறந்துவிடக் கூடாது என்பதில் துவங்கி, பலவித பயங்களை சுமந்தபடியே மாணவ, மாணவிகள் தேர்வுக்கு செல்வது வழக்கம். நீட் தேர்வு கூடுதல் பயத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருந்தது. தேர்வு மையத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பே சென்ற மாணவிகள் அடுத்தடுத்து பேரதிர்ச்சிகளைச் சந்தித்துள்ளனர். வளரிளம் பருவத்தில் இருந்த பெண்கள் சாதாரணமாகவே உடல் சார்ந்த அச்சங்களைக் கொண்டிருப்பது வழக்கம். தன் உடலை மற்றவர்கள் பார்க்க பரிசோதிப்பது அவர்கள் மனதை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். ஒரு சில மாணவிகள் மாதவிலக்கு போன்ற பிரச்னைகளோடு தேர்வு எழுத வந்திருக்க வாய்ப்புண்டு. மாணவிகளின் உள்ளாடை வரை ஆய்வு செய்வது என்பது அவர்களை மிகப்பெரிய பதற்றத்துக்குள் தள்ளியிருப்பதோடு, இந்த டென்ஷனில் படித்ததை எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முடியாமல் பலரும் தேர்வை நன்றாக எழுதியிருக்க மாட்டார்கள். தேர்வறைக்கு வரும் மாணவிகளுக்கான கட்டுப்பாடுகளை முன்பே வலியுறுத்தியிருக்க வேண்டும். தேர்வு மையத்தில் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டது மாணவ, மாணவிகளின் எதிர்காலக் கல்வியை பாதிக்க வாய்ப்புள்ளது'' என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தேர்வு எழுதிய மாணவிகள் என்ன சொல்கிறார்கள்..?
தாரமங்கலம் வேதாத்ரி மகரிஷி பள்ளி மாணவி ராகிணி: ‘‘சோதனை என்ற பெயரில் முடியில் குத்தியிருந்த பின், கிளிப் எல்லாவற்றையும் கழற்ற சொன்னார்கள். ஆனால், தலை முடியை லூஸ் ஹேராவும் விடக்கூடாது என்றார்கள். தலைமுடியை எப்படி பின்னிக்கொண்டு போவது என்ற குழப்பத்திற்குத் தள்ளப்பட்டோம். பள்ளியில் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறோம்; பின்புதான் பாடம் சார்ந்த விஷயங்கள் எல்லாம். நீட் தேர்வு எழுதச் சென்ற எங்களைத் திருடர்களைப் போல சோதித்தார்கள். தேர்வுக்கு முன்பு இப்படித்தான் வர வேண்டும் என்பதைப் பற்றி முன்பே பயிற்சி கொடுத்திருக்கலாம். கடைசி நேர பதற்றத்தில் பலரும் தேர்வை எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியாக எழுத முடியவில்லை,’’.
ஹேமலதா, சென்னை: ''லேடீஸைப் பொறுத்தவரைக்கும் எக்ஸாம் ஹாலுக்குப் போறதுக்கு முன்னாடி தலைப் பின்னல் போட்டிருந்தா அவிழ்த்து காண்பிக்கச் சொன்னாங்க. அதே மாதிரி செக்கிங் முடித்த பிறகு தலை முடியை பின்னல் போட்டுட்டுத்தான் உள்ளே போகணும். கழுத்து, காது, கை, கால் என எந்த ஜுவல்லரியும் போட்டிருக்கக் கூடாது. கையில் சாமிக் கயிறு போன்று எதைக் கட்டியிருந்தாலும் அதையும் அவிழ்த்து விடவேண்டும். தேர்வுக்கு பேனாவும் அவங்களே கொடுத்திருவாங்க. அதனால கையில ஹால் டிக்கெட் மட்டும் கொண்டுப் போனா போதும். ஹாலுக்குள்ள போனதும் இரண்டு முறை வலது, இடது என கட்டைவிரல் ரேகை பதிவு செய்தோம். ஹால் டிக்கெட் டவுன்லோட் பண்ணினதும் அவங்க அவங்க பெற்றோர்கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கணும். அப்படி இருந்தாதான் ஹாலுக்குள்ள அனுமதிப்பாங்க. இதை பல மாணவர்கள் மறந்துட்டாங்க. அதனால அவசர அவசரமா அவங்க பெற்றோரைத் தேடி ஓடி கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. இந்த கடைசி நேரப் பதற்றம் பல பேருக்கு இருந்தது. இன்னும் ஒரு பெரிய குழப்பம் என்னன்னா, கோல்டு ஜுவல்லரி போட்டுட்டு வந்தவங்ககிட்ட `அதை கழற்றி யார்கிட்ட கொடுக்கிறது; அது தொலைந்து போயிடுமோ'ங்கிற பயமும் குழப்பமும் இருந்தது. இதுக்கெல்லாம் நடுவுல தேர்வும் கடினமாக இருந்தது என்பதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம்'' என்கிறார் ஹேமலதா
தனுஷ்குமார், சென்னை: ''எக்ஸாம் எழுதற ஸ்கூல் கேட்டுக்குள்ள போகும்போதே இரண்டு பேர் செக் பண்ணாங்க. அதுக்கப்புறம் எக்ஸாம் ஹாலுக்குள்ள போறதுக்கு முன்னாடி இரண்டு பேர் செக் பண்ணாங்க. ஹாலுக்குள்ள போனதுக்குப் பிறகும் இரண்டு பேர் உள்ளே வந்து நாங்க எக்ஸாம் எழுதுற பெஞ்சை சுத்திப் பார்த்து செக் பண்ணாங்க. இப்படிக் கிட்டத்தட்ட ஆறு பேருக்கும் மேலான செக்கப்பைத் தாண்டித்தான் நாங்க பரீட்சை எழுத வேண்டியிருந்தது. ஹாலுக்குள்ள போறதுக்கு முன்னாடி கண்டிப்பாக அரைக்கை சட்டைத்தான் போட்டிருக்கணும். முழுக்கை சட்டை போட்டு வந்தவங்க சட்டைல இருந்த கையை கத்தரிக்கோல் கொண்டு அரைக்கை சட்டை அளவுக்கு கட் பண்ணிட்டுத்தான் உள்ளே வரணும். அதே மாதிரி நிறைய பாக்கெட்டுகள் வெச்சிருக்கிற சட்டை, பேன்ட்டுக்கும் உள்ளே அனுமதி இல்லை. காதுக்குள்ள ஏதாவது மைக்ரோ ஹெட் செட் வெச்சிருப்பமோங்கிற சந்தேகத்துல, இரண்டு காதுக்குள்ளயும் டார்ச் அடிச்சுப் பார்த்தாங்க. ஷூ, ஹை ஹீல்ஸ் இதையெல்லாம் உள்ளே அனுமதிக்கல. அப்படி போட்டிருந்தா வெளியிலயே விட்டுட்டுப் போகச் சொல்லிட்டாங்க. நார்மலான செருப்பை மட்டுமே ஹாலுக்குள் அனுமதிச்சாங்க. காலையில பத்து மணிக்கு ஆரம்பிச்ச எக்ஸாம் மதியம் ஒரு மணி வரைக்கும் நடந்தது. கிட்டத்தட்ட 12.30 மணி இருக்கும் எக்ஸாம் எழுதி முடிச்சவங்க யாரும் முன்கூட்டியே வெளிய வரக்கூடாது என்பதற்காக திடீர்னு எக்ஸாம் ஹால் கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடிட்டாங்க. எக்ஸாம் எழுதின பல பேருக்கு பதற்றம் இருந்திருக்கும். அதேமாதிரி காதுக்குள்ள டார்ச் லைட் அடிச்சுப் பார்த்ததெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு'' என்றார்.

I'm honestly impressed by the time and effort you put into this, Keep it up!
ReplyDeletehope the playlist help in creating more content.
https://www.youtube.com/playlist?list=PL316simlc7aJZGqNDj9taOB6Tj_ke0Bwe