இன்று(மே30,2017) மருந்து கடைகள் வேலைநிறுத்தம்
இன்று மருந்து கடைகள் வேலைநிறுத்தம்...செய்தி தினமலர்
ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து வணிகர்கள், இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர். அதனால், தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன.
பகல் முழுவதும், ஊசி, மருந்து, மாத்திரைகள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, 1.50 லட்சம் ஓட்டல்களும், இன்று மூடப்படுகின்றன.மத்திய அரசு, 'ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3,000த்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது. இதை எதிர்த்து, இன்று மருந்து கடைகளை மூடி, மருந்து வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில், மொத்தம், 33 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன. அவற்றில், 3,௦௦௦ கடைகள், தனியார் மருத்துவனைகளில் செயல்படுபவை. இன்றைய வேலைநிறுத்தத்தில், இந்தக் கடைகள் பங்கேற்கவில்லை; அவை திறந்திருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

4.00 மணிக்கு மேல்
மீதமுள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகள், இன்று மூடப்படுவதால், பகல் நேரத்தில், மருந்து, மாத்திரைகள், ஊசி கிடைக்காது. அவசர தேவை எனில், மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகளை தான் அணுக வேண்டும்.
இது பற்றி, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள, 197 கூட்டுறவு மருந்து கடைகளும், 111 அம்மா மருந்தகங்களும் இன்றுதிறந்து இருக்கும். மாலை, 4:00 மணிக்கு மேல், அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்படும்,'' என்றார்.

தடையின்றி கிடைக்க
ஆனால், மருந்து வணிகர் சங்க செயலர், செல்வம் கூறுகையில், ''எங்களது போராட்டம் திட்டமிட்டபடி, காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடைபெறும்,'' என்றார்.
இதற்கிடையில், கடையடைப்பில் பங்கேற்க போவதில்லை என, சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலர் நடராஜன் கூறியதாவது:சென்னையில், 'ஆன்லைன்' மருந்து வினியோகம், ஏற்கனவே நடைபெறுகிறது. மேலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 'பொது மக்களுக்கு, மருந்து தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்று, சென்னை, மதுரை, கரூர் மாவட்டங்களில் உள்ள, எங்கள் சங்கத்தின், 10 ஆயிரம் உறுப்பினர்கள், இன்று கடையடைப்பில் பங்கேற்க மாட்டார்கள்; கறுப்பு பேட்ஜ் அணிந்து, எதிர்ப்பை தெரிவிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று வித வரிகள்
தமிழகத்தில், இன்று மருந்து கடைகளுடன், ஓட்டல்களும் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, 1.50 லட்சம் ஓட்டல்கள் மூடப்படும்' என, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்கத்தினர் கூறியதாவது:மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி, ஓட்டல்களுக்கு மூன்று விதமாக விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்கு முன், ஓட்டல்களுக்கு, 2 சதவீத வரி மட்டுமே இருந்தது. தற்போது, விற்பனை, குளிர்சாதன வசதி ஆகியவற்றை பொறுத்து, 12, 14, 18 சதவீதம் என, மூன்று வித வரிகள் விதிக்கப்படுகின்றன.
பாதிப்பில் இருந்து தப்ப, உணவுப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, ஓட்டல்கள், இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை மூடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அவசரத்துக்குஅழைக்கலாம்!
* அவசர தேவைக்கு, 044 - 24321830 என்ற மருந்து கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொள்ளலாம்.
* 044 - 28191522 என்ற மருந்து வணிகர் சங்க தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, மருந்துகளை பெறலாம்.

Comments
Post a Comment