அரசு ஊழியர் வேலைநிறுத்தம் - பேச்சுவார்த்தை தோல்வி
⭕ *_6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி_*
🔵 _அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது._
🔵 _புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள எழிலக வளாகத்தில் ஒரு சில துறைகளை தவிர மற்ற துறை அலுவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் எழிலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்._
🔵 _பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன், கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன்,_ _தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் என தெரிவித்தார்._
_வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மே 2ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் சுப்பிரமணி தெரிவித்தார்._
Comments
Post a Comment