மே தின வாழ்த்துக்கள்...
💪🏼வியர்வைகளால்
முத்துக்கள் செய்பவனே....
💪🏼நீ விதைத்த வியார்வைகள் தான்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து
💪🏼கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...!
💪🏼நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை மிளிர செய்தவன்...
நீ... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன...
💪🏼நீ உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது சமுதாயம்...
நீ உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி....
💪🏼உன் வியர்வை நாற்றம்...
அது உன் நாட்டை மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...
💪🏼உன் கரங்களில் ஏற்படும் வடுக்கள்
அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....
💪🏼நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!
💪🏼தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்...
💪🏼என் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று தான்
தாய் ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை வியர்வையாக்குகிறாய்...
💪🏼உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...
💪🏼என் இனிய வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....
💪🏼நண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....
*கவிதைவீதி*
💐💐💐💐💐💐💐
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐
http://tnsocialpedia.blogspot.com
முத்துக்கள் செய்பவனே....
💪🏼நீ விதைத்த வியார்வைகள் தான்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து
💪🏼கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...!
💪🏼நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை மிளிர செய்தவன்...
நீ... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன...
💪🏼நீ உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது சமுதாயம்...
நீ உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி....
💪🏼உன் வியர்வை நாற்றம்...
அது உன் நாட்டை மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...
💪🏼உன் கரங்களில் ஏற்படும் வடுக்கள்
அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....
💪🏼நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!
💪🏼தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்...
💪🏼என் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று தான்
தாய் ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை வியர்வையாக்குகிறாய்...
💪🏼உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...
💪🏼என் இனிய வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....
💪🏼நண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....
*கவிதைவீதி*
💐💐💐💐💐💐💐
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐
http://tnsocialpedia.blogspot.com
Comments
Post a Comment